Wednesday, November 20, 2013

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு / Sivappu Thandu Keerai Kootu / Red Spinach Kootu


தேவையான பொருட்கள்;
சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டு
கடலை பருப்பு,பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைத்துக் கொள்ள:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை:
கீரையை நன்கு   3 தண்ணீர் வைத்து மண் போக அலசிக் தண்ணீர் வடித்து எடுக்கவும்.
 பருப்பை அரை மணி நேரம்  ஊற வைக்கவும். கீரையை தண்டோடு நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,பூண்டு பல், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 ஊறிய பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வெந்து வைக்கவும்.
தேங்காய் ,சீரகம்,வற்றல் சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்,கடுகு  வெடிக்கவும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்க்கவும்.வதக்கவும்.
பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.மசிய விடவும்.
வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.ஒன்று சேர்ந்து கொதி வரும்.அரைத்த தேங்காய் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது நேரம் அடுப்பில் சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி அடுப்பை அனைக்கவும்.

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெடி.
சாதத்தோடு பரிமாறவும்.
இந்த சிவப்பு கீரை ருசி மிக்கதும், வயிற்றுக்கு நல்லதும் கூட.பருப்பு சேர்க்காமல் மேற் சொன்ன பொருட்கள் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.இதில் கடலை பருப்பும் பாசிபருப்பும் சேர்ப்பது தனி சுவையை தருவதோடு  கடலை பருப்பு முழித்துக் கொண்டு பார்க்க அழகாகவும் இருக்கும். நீங்களும் செய்து அசத்துங்க.


12 comments:

Saratha said...

காலையில் கீரை கூட்டு பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளித்தது.

ஸாதிகா said...

இந்தக்கீரை சமைத்ததில்லை.இனி டிரை பண்ண வேண்டும் ஆசியா.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி...

Gayathri's WTML Event - ல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

சாரதா வாங்க, கருத்திற்கு மிகவும் மகிழ்ச்சி.

ஸாதிகா செய்து பாருங்க,இந்த கீரை வயிற்றுப் புண், மாதவிடாய் பிரச்சனைகளைநீக்குவதோடு,கருப்பப்பைக்கும் நல்லதுன்னு சொல்றாங்க.பொதுவாக பெண்கள் இந்த சிவப்பு கீரையை வாரம் ஒரு முறையாவது உட்கொள்வது நல்லதுன்னு சொல்றாங்க.கருத்திற்கு நன்றி.

priyasaki said...

இந்த கீரை சமைத்ததில்லை.இங்கு கிடைக்குமா தெரியல்லை.கிடைத்தால்
உங்க ரெசிப்பிதான் ஆசியா.

வை.கோபாலகிருஷ்ணன் said...


"சிவப்பு தண்டுக்கீரை கூட்டு”

சிறப்பான பதிவாக ருசியுடன் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

Menaga sathia said...

உங்களுக்கு இந்த கீரை கிடைக்கிறதாக்கா.இதுவரை இங்கு கடையில் பார்த்ததில்லை...ம்ம் சூஉப்பர்ர் கூட்டு!!

Asiya Omar said...

தனபாலன் சார் வருகைக்கு மிக்க நன்றி.

ப்ரியசகி கிடைத்தால் செய்து பாருங்க. கருத்திற்கு நன்றி.

Asiya Omar said...

வை.கோ சார் வாங்க, அழகான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மேனகா இங்கு இந்த கீரை சாதாரணமாக கிடைக்கிறது.
பொரியல் வைத்தால் கூட சூப்பராக இருக்கும்.இதன் ருசி தனி தான்.

Kalpana Sareesh said...

ssooperb preperation..

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் இந்த வகைக் கீரைகள் கிடைப்பதில்லை. திரும்பிப் பார்த்தால் பாலக் அல்லது வெந்தயக் கீரை..... :)

கோமதி அரசு said...

அருமையான சிவப்பு தண்டுகீரைக்கூட்டு.