Wednesday, November 6, 2013

புடலங்காய் பொரியல் / Snake Gourd stir fry.

 தேவையான பொருட்கள்;
புடலங்காய் (இளசு) - 200 கிராம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,  உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
மிளகாய் வற்றல் - 2
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - 2 சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்

செய்முறை:
புடலங்காயை மேல் தோல் சீவி பாதியாக நறுக்கி அதனை குறுக்காக நறுக்கி வைக்கவும்.விதை ஏதும் இருந்தால் எடுத்து விடவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளிப்போடவும்.கருவேப்பிலை போடவும்,வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.
 புடலங்காய் சேர்க்கவும், மஞ்ச,சீரகப் பொடி,உப்பு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமான தீயில் வேக விடவும்.
புடலங்காய் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான புடலங்காய் பொரியல் ரெடி.சாதத்துடன் பக்க உணவாகப் பரிமாறவும்.பொதுவாக புடலங்காய் பாசிப் பருப்பு சேர்த்து பொரியலோ அல்லது கூட்டோ செய்வோம். இப்படி பொரியல் செய்து பாருங்க,சும்மாவே சாப்பிடலாம்.

Sending this to Gayathri's WTML Event @ Sahasra Recipes.

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

பொதுவா புடலங்காய் கூட்டு செய்து சாப்பிடுவது தான் பிடிக்கும். புடலங்காய் பொரியல் தேங்காய் சேர்த்து செய்வார்கள் வீட்டில் - அது அவ்வளவாக பிடிக்காது! :)

ஸாதிகா said...

நானும் இந்த முறையில்தான் செய்வேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...


பு.பொ

"புடலங்காய் பொரியல்'

அசத்தல் !

Sahasra Recipes said...

Perfect with roti. Thanks for linking to my event.

S.Menaga said...

எனக்கு பிடித்த பொரியல்,அருமை...

Snow White said...

arumai

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்குங்க. செஞ்சு பார்த்துர வேண்டியதுதான்.

athira said...

மிக அருமை. இப்படித்தான் நாங்களும் செய்வோம்.

Shama Nagarajan said...

love it akka

மாதேவி said...

நம்நாட்டுசமையலில் அதிகமாக இப்பொரியல்தான் செய்வோம்.