Thursday, November 14, 2013

உலக நீரிழிவு நோய் தினம் - World Diabetes Day

இன்று உலக நீரிழிவு நோய் தினம். என்னால் முடிந்த ஒரு சிறு விழிப்புணர்வு பகிர்வு.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலகில் சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
பொதுவாக மக்கள் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் வலம் வருவது தான் இப்போதைய நிலை.அது முற்றி மோசமான உடல் நிலை அடையும் பொழுது லபோ திபோ என்று அடித்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

அதன் அறிகுறிகள் ;
உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறிநீர் கழித்தல், அடிக்கடி பசி,அதிக தாகம் இருந்தால் உஷாராகி ஒரு முறை மருத்துவரை அணுகி முழு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நாம் சிகிச்சை எடுக்கத் தவறினால் கண்,சிறுநீரகம், இதயம்,கை,கால் பாதிக்கப்படும்.பயப்படத் தேவையில்லை,  மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை, காலை,மாலை நடை பயிற்சி,உடற்பயிற்சி,உணவு கட்டுப்பாட்டு முறைகளாலும் நோயை கட்டுக்குள் கொண்டு வந்து நீண்ட ஆயுளுடன் இருக்கலாம்.
இதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்.

இனி என் வலைப்பூவில் நீரிழிவு நோயாளிகளையும் கருத்தில் கொண்டு சமையல் குறிப்புகள் பகிர எண்ணியுள்ளேன்.
ஒரு சில குறிப்புகள் உங்களுக்காக: பெயரை கிளிக்கவும்.

வெந்தயப் பருப்பு

வெந்தயக்கறி

ஈசி கேப்பை கூழ்

ராகி சேமியா முளைகட்டிய பயறு

கோதுமை மாவு புட்டு


கோதுமைப் பொங்கல்


கேப்பை உருண்டை
இன்னும் சில பல குறிப்புகள் இருக்கின்றன, அவற்றை ஒரு தொகுப்பாக  விரைவில் இணைக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

7 comments:

Kalpana Sareesh said...

wonderful collections of recipes.. ragi sevai tempts me

Asiya Omar said...

வந்த முதல் கருத்து முத்தான கருத்து.மிக்க நன்றி கல்பனா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள், நன்றிகள்.

Asiya Omar said...

மிக்க நன்றி வை.கோ சார்,பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி.

Suchi Sm said...

Good collection for duabetic diet..

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள பகிர்வு..... பாராட்டுகள்.

Jaleela Banu said...

arumaiyaana kuRippukaL