Friday, December 27, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 7 - திருமதி உமா சங்கர் - மும்பை ஸ்பெஷல் பாவ் பாஜி - Guest Post / Pav Bhaji

திருமதி உமா சங்கர், என் வீட்டிற்கு அருகே கடந்த அக்டோபர் மாதம் தான் குடிவந்தாங்க, நாங்கள் அபுதாபியில் இருந்து அல்-ஐன் வந்து கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது. இது வரை  பக்கத்தில்  பழக தமிழ் ஆட்கள் இல்லாமல் தான் இருந்து வந்தோம், ஏதோ இறைவன் கருணையால் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு நல்ல தோழி கிடைத்தது என்னைப் பொறுத்தவரை பெரிய பாக்கியமே.
நாங்கள் சேர்ந்து வாக்கிங் போவதுண்டு,ஒரு நாள் பேச்சு வாக்கில் சிறப்பு விருந்தினர் பகிர்வு பற்றி சொன்னேன், அவர்களும் அசத்தலான பாவ் பாஜி குறிப்பை மெயில் செய்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இதோ உமாவின் சுய அறிமுகம்:
நான் உமா. என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஏர்வாடி.என் கணவர் ஊர் பழவூர். திருமணம் முடிந்து 10 வருடமாக மும்பையில் வசித்து வந்தோம்.  அமீரகத்தில் என் கணவர் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச் சூழல் மேலாளராக பணி புரிந்து வருகிறார். எனவே தற்சமயம் நானும் குழந்தைகளும் 3 வருடங்களாக அமீரகத்தில்  அவருடன் வசித்து வருகிறோம்.
நான் ஓரளவு நன்கு சமைப்பேன். ஆசியாவின்  சிறப்பு விருந்தினர் பக்கம் பற்றி அறிந்து இந்த பாவ் பாஜி குறிப்பை செய்து அனுப்பியுள்ளேன். நீங்களும் செய்து பார்த்து  தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

இதோ உமாவின் அசத்தலான பாவ் பாஜி குறிப்பும் விளக்கப் படங்களும் :


தேவையான பொருட்கள்;
காய்கறிகள் - நறுக்கிய கேரட்,பீன்ஸ், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு,பச்சை பட்டாணி ஆகியவற்றை தலா ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 3
நறுக்கிய தக்காளி - 3
கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா- 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க வேண்டியது:
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 6  பல்

காரம் அவரவர் விருப்பம்.
மற்றும்
பாவ் பன் - 10 - 12
டோஸ்ட் செய்ய வெண்ணெய் - தேவையாள அளவு.

பரிமாறும் அளவு - 4 -6 நபர்கள்.

செய்முறை:
காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து 3அல்லது 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.ஆவியடங்கிய பின்பு குக்கரை திறந்து வெந்த காய்கறிகளை மத்து வைத்து நன்கு மசித்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி பூண்டை மிக்ஸியில் அரைத்து தயாராக வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், சீரகம் போட்டு வெடிக்க விடவும். நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்கு வெங்காயம் வதங்கி வரும் பொழுது அரைத்த விழுதை சேர்க்கவும்.நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்க்கவும். ஒரு சேர தக்காளி வெங்காயம் மசிந்து வர வேண்டும். அத்துடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,பாவ் பாஜி மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி நன்கு கொதிக்க விடவும். மசித்து தயாராக உள்ள காய்கறிகளைச்  சேர்க்கவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.சிம்மில் வைத்து ஒரு சேர மூன்று  நிமிடம் கொதிக்க விடவும். உங்களுக்கு எந்தளவு கெட்டித் தன்மையில் இருக்க வேண்டுமோ அதன் படி செய்து கொள்ளவும்.
இப்போது பாவ் பாஜி ரெடியாகிவிட்டது.

இனி பாவ் பன்னை டோஸ்ட் செய்து உடன் பரிமாற வேண்டியது தான். பாவ் பன்னை பாதியாக கட் செய்து உட்புறம் வெளிப்புறம் தேவைக்கு வெண்ணெய் தடவி தோசைக் கலத்தில் மொறு மொறுப்பாக டோஸ்ட் செய்து எடுக்கவும். தயார் செய்த பாவ் பாஜியுடன்  பரிமாறவும்.சுவையான மும்பை  ஸ்பெஷலான பாவ் பாஜி ரெடி. 

பொடியாக நறுக்கிய மல்லித்தழை,வெங்காயம்,எலுமிச்சை பழத் துண்டுகளுடன் அலங்கரித்து தட்டில் வைத்து பரிமாறவும்.

நீங்களும் செய்து பாருங்க,  உமா இதனை செய்து,  என் வீட்டிற்கு கொடுத்து விட்டாங்க. செம சூப்பராக இருந்தது. நான் ருசித்து விட்டேன். நீங்க ருசிக்க வேண்டாமா?  நிச்சயம் செய்து அசத்துங்க.

உமா தன் குறிப்புடன் சிறப்பு பகிர்வாக  ஒரு சில டிப்ஸ் சொல்கிறேன் என்றதால் இந்த வாரம் கலந்துரையாடல் கிடையாது.

உமாவின் உபயோகமான டிப்ஸ் ;

கிச்சன் டிப்ஸ்;
1.கடலை, பயறு வகைகள் ஊறுவதற்கு 8-10 மணி நேரம் ஆகும்.சில சமயம்  மறந்து விட்டால் கடலை மற்றும் பயறை ஹாட்பேக்கில் போட்டு கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து விடுவேன். விரைவில் ஓரிரு மணி நேரத்தில் ஊறி சமைப்பதற்கு ரெடியாகி விடும்.

2.மண் சட்டியில் தயிருக்கு உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும்,புளிக்காமலும் ஜில்லென்றும் இருக்கும்.

3.வெளியூர் செல்லும் பொழுது கிச்சன் சின்க்கில் நாப்தலீன் உருண்டைகளை போட்டுச் சென்றால் சமையற் கட்டில் பூச்சிகளின் தொல்லை எட்டிப் பார்க்காது.

அழகு டிப்ஸ்;
1.சருமம் பொழிவு பெற மோர், இளநீர்,வெந்தயக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ,துளசி,    புதினா,ஓமவல்லி,தக்காளி,கேரட், பப்பாளி, தர்பூசனி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது ஆரோக்கிய பானங்களையும் குறிப்பிட்ட அளவு சேர்க்க வேண்டும். நீர்ம உணவு சேர்க்கும் பொழுது உடல் எடை கூடாமல் இருக்கும்.

3.கிரீன் டீ குடித்தால்  சரும சுருக்கம் குறைவதோடு, முதுமை தோற்றம் வராமல் தடுக்கும்  கூந்தலும் அடர்த்தியாக வளருமாம். 2 கப் முதல் 5 கப் வரை கிரீன் டீ ஒரு நாளைக்கு குடித்து  வரலாம்.

மருத்துவ டிப்ஸ்;
1.கொய்யா பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. வயிற்று வலி உண்டாகும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் எற்படும்.

2.வெந்தயத்தை வெயிலில் காயவைத்து பொடித்து ஒரு டீஸ்பூன் அளவு மோரில் கலந்து தினமும் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

3.தினமும் ஒன்றிரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.

4.காலை வேளை ஒரு டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு தண்ணீர் விட்டு விழுங்கி வந்தால் சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், நீர்க் கடுப்பு போன்றவை  குறையும்.

மேற் கூறிய டிப்ஸ்களை நீங்களும் முயற்சித்து பாருங்க.

பயன் மிக்க டிப்ஸ், சூப்பர் சமையல் என்ற அருமையான பகிர்வுக்கு  மிக்க மகிழ்ச்சி உமா. 

நீங்களும் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு அசத்தியமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.

மீண்டும் புது வருடத்தில் ஒரு அசத்தலான அட்டகாசமான பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உபயோகமான டிப்ஸ்... நன்றிகள்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Saratha said...

பாவ் பாஜி டிபன் அயிட்டம் சூப்பரா இருக்கு.திருமதி உமாவின் டிப்ஸ்கள் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது.உமாவும் நெல்லை பகுதிக்கு அருகில் உள்ளவர் என்பதை தெரிந்து மிக்க மகிழ்ச்சி.இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

சிறப்பு விருந்தினர் உமாசங்கட்ரின் பாவ் பாஜி, உபயோகமான உடல் நலக் குறிப்புகள் அருமை.
உமா சங்கருக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.


இன்றைய வலைசரத்தில் அருசுவை விருந்தில் காகிதப்பூக்கள் வலைத்தளம் வைத்து இருக்கும் ஏஞ்சலின் அவர்களின் வலைத்தளம் அதில் நீங்கள், ஜலீலா, அடுபங்கரை கமலா இடம் பெற்று இருக்கிறார்கள். முடிந்த போது வந்து பாருங்கள்.

ADHI VENKAT said...

சுவையான பாவ் பாஜி குறிப்புக்கு நன்றி.. உமா சங்கர் அவர்களுக்கு பாராட்டுகள்...

டிப்ஸ்களும் அருமை...

இளமதி said...

அருமையான சிறப்பு விருந்தினர் பதிவும் பகிர்வும் ஆசியா!

திருமதி. உமாவிற்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

சே. குமார் said...

நல்ல குறிப்பு....

சகோதரிக்கு வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க அக்கா.

Asiya Omar said...

தனபாலன் சார் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

Asiya Omar said...

சாரதா அக்கா, வாங்க வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.தற்செயலாக இவங்களும் நெல்லை பக்கம் தான்கா. நல்லது.மிக்க நன்றி.

கோமதிக்கா வாங்க, கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

Asiya Omar said...

ஆதி நலமா? நீங்க எப்போ உங்க டெல்லி ஸ்பெஷல் அல்லது கோவை ஸ்பெஷல் அல்லது ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் குறிப்பு அனுப்ப போறீங்க.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Asiya Omar said...

இளமதி வாங்க, கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

சே.குமார் சகோ வாங்க, கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Savitha Ganesan said...

Pav bhaji looks so good. Very cool tips about home and beauty.

Menaga sathia said...

பாவ் பாஜி பார்த்ததும் சாப்பிட தோனுது,அருமை...உமா மேடத்திற்கு வாழ்த்துக்கள்!!

அனைத்து டிப்ஸ்களும் உபயோகமானவை,பகிர்வுக்கு மிக்க நன்றி!!

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள குறிப்பு. பகிர்ந்த உங்களுக்கும் சமைத்த உங்கள் தோழிக்கும் பாராட்டுகள்.

Asiya Omar said...

சவீதா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,மிக்க நன்றி.

மேனகா தொடர் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

சகோ.வெங்கட் வாங்க, கருத்திற்கும் பாராட்டிற்கும் மகிழ்ச்சி.நன்றி.

umachidambaram shankar said...

என்னுடைய பாவ்பாஜி குறிப்பை வெளியிட்ட ஆசியாவிற்கும், கருத்தும்,வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

உமா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து குறிப்புகளை பகிரலாமே!

Jaleela Kamal said...

உமாவின் டிப்ஸ் கள் மிக அருமை,
பாவ் பாஜி மசாலாவும் சூப்ப்ர்.

Snow White said...

அடடா அருமை அருமை ...டிப்ஸ் உபயோகமாக இருக்கே ...வாழ்த்துக்கள்

Asiya Omar said...

ஜலீலா வாங்க வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஸ்நோ ஒயிட் கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

Thenammai Lakshmanan said...

மிக அருமை ஆசியா.

சுவையான குறிப்பு உமா. வாழ்த்துக்கள் :)

VijiParthiban said...

உமாசங்கட்ரின் பாவ் பாஜி அருமை...
உபயோகமான உடல் நலக் குறிப்புகள் அருமை.... வாழ்த்துக்கள்....

Asiya Omar said...

தேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

விஜி வாங்க, கருத்திற்கு மிக்க நன்றி,வாழ்த்திற்கு மகிழ்ச்சி.