Tuesday, December 10, 2013

அவரைக்காய் பொரியல் / Broad Beans Stir fry


i

தேவையான பொருட்கள்;
அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் -1 
தேங்காய்த்துருவல் -2 அல்லது  3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
மஞ்சள்,சீரகம் தூள் - தலா கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவைக்கு.
தட்டிக் கொள்ள:
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பெரிய பல்

செய்முறை:
அவரைக்காயை முன்று தண்ணீராவது விட்டு நன்கு அலசி எடுக்கவும்.விளிம்பை ஒடித்து நார் பகுதியை  எடுக்கவும்,
 பின்பு ஒரே போல் சிறியதாக நறுக்கவும்.
 அம்மி அல்லது மிக்ஸியில் பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல், கருவேப்பிலை போடவும்,வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், அத்துடன் பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
 நன்கு வதங்க விடவும்.

 நறுக்கிய அவரைக்காய், மஞ்சள் சீரகத் தூள்,தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி நன்கு வேக விடவும்.மஞ்சச் சீரகத்தை முதலில் வெங்காயம் வதங்கிய பின்பு போட்டு பிரட்டி விட்டும் காயை சேர்க்கலாம்.

 அவரைக்காய் வெந்த பின்பு தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி  உடனே அடுப்பை அணைக்கவும்.

 சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.இப்ப சீசன் என்பதால் நல்ல ஃப்ரெஷாக கிடைக்கிறது.நீங்களும் வாங்கி செய்து பாருங்க.சிலர் அவரைக்காயை முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து வெந்து விட்டு பின்பு தாளிப்பார்கள், ஆனால் இப்படி எண்ணெயில் வதக்கி செய்தால் அதன் ருசி தனி தான்.



இதனை தமிழர் சமையல் செவ்வாய் ( TST) இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

15 comments:

ராமலக்ஷ்மி said...

ஆம். வாங்கி வைத்திருக்கிறேன்:). இன்றே செய்தே பார்க்கிறேன். நன்றி ஆசியா.

Saratha said...

இப்போது தான் பொடிதாக நறுக்கி வைத்து விட்டு வந்தேன்.நீங்கள் கொடுத்துள்ள குறிப்பின் படி செய்து விடுகிறேன்.

Asiya Omar said...

வாங்க ராமலஷ்மி.செய்து பாருங்க, நிச்சயம் பிடிக்கும்.

சாரதா அக்கா, வாங்க,நீங்களும் அவரைக்காய் வாங்கியாச்சா? நிச்சயம் செய்து பாருங்க, எனக்கு மிகவும் பிடித்த பொரியல்.

ஸாதிகா said...

கிட்டதட்ட நான் சமைப்பதைப்போல்..ஆனால்..அரைத்து விட்ட பொருட்கள் சேர்ப்பதில்லை.அவசியம் உங்கள் குறிப்பின் படியும் சமைக்கவேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் செய்முறைப் படி இன்றே செய்துப் பார்க்க சொல்கிறேன்... நன்றி சகோதரி..

Menaga sathia said...

பச்சை மிளகாய்+பூண்டு அரைத்து சேர்த்ததில்லை..நன்றாக இருக்கு!!

Asiya Omar said...

ஸாதிகா செய்து பாருங்க,நல்ல மணமாக இருக்கும்.எங்க வீட்டில் ரஹ்மத் அக்கா ந்னு ஒருத்தங்க வேலை பார்த்தாங்க, அவங்க பக்குவம் இது,அவங்க பொரியல் வச்சா,வெறும் ரசத்தோடு கூட அந்தப் பொரியல் சூப்பராக இருக்கும்.

Asiya Omar said...

தனபாலன் சார் வாங்க, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மேனகா செய்து பாருங்க, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.கருத்திற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கோர் சந்தேகம் !

பெண்கள் தன் அ-வ-ரை-க் கவருவதற்காகச் செய்வதோ அ-வ-ரை-க்-கா-ய்
பொரியல் ? ;)

பகிர்வுக்கு நன்றிகள்.

ChitraKrishna said...

Poondu milagai paste... Jeera powder... Enna oru flovour ! Arumai asiyakka....

Suchi Sm said...

simple yummy... new way by grinding the chillie and garlic...

Jaleela Kamal said...

enakkum rasaththuddan saappida pidikum.

Savitha Ganesan said...

Poriyal romba nalla irukku akka. Super.

Divya Prakash said...

Healthy and delicious poriyal.. I too prepare this poriyal similarly.. :)

ADHI VENKAT said...

நானும் பூண்டு, மிளகாய், வெங்காயம் தவிர்த்து இப்படித் தான் செய்வேன்...சிலநேரம் வெங்காயம், தக்காளி வதக்கி சாம்பார்பொடி போட்டு தண்ணீர் தெளித்து மூடி வைத்து செய்வேன்...அது சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்..