Friday, December 20, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 6- திருமதி சுஜிதா ரூபன் - Guest Post - சிக்கன் குரோகட்ஸ் / Chicken Croquettes

திருமதி சுஜிதா ரூபன், இவர்களிடமிருந்து மெயில் வந்தப்போ யார் இவங்க என்று ஆர்வத்தோடு திறந்து வாசித்தேன். கெஸ்ட் போஸ்ட் செய்ய விருப்பம் தெரிவித்து அவங்க ஆங்கில வலைப்பூ லின்க் அனுப்பி இருந்தாங்க, இதோ அவங்களோட சுஜிதா ஈசி குக்கிங் ( Sujitha Easy Cooking ) வலைப்பூ.
படங்களும் குறிப்புகளும் கண்ணைக் கவர்வது மட்டுமல்லாமல் மனதையும் கொள்ளை கொள்கிறது. நீங்கள் சென்று பார்க்க  இங்கு கிளிக்கவும்.

மெயிலில் எனக்கும் சுஜிதாவிற்கும் உள்ள சம்பாஷணை இப்படித்தான் ஆரம்பித்தது. உங்களுக்கு தமிழ் தெரியுமா? 
தமிழ் தெரியும், நல்லா பேசுவேன், வாசிப்பேன்,ஆனால் எழுதுவது தான் குறைவு.

சரி. நீங்க ரெசிப்பி அனுப்புங்க, நிச்சயம் பகிர்கிறேன்.முதலில் சுய அறிமுகம்,  ப்ரஃபைல் படம் அனுப்பி வைங்கன்னு சொன்னேன், தம்பதியர் சகிதம் அழகான படம் ஒன்றை அனுப்பி தந்தாங்க. என்றும் மனமொத்த தம்பதியினராய் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம் !

 சுய அறிமுகம்:
நான் சுஜிதா ரூபன், சொந்த ஊர் நாகர்கோவில், திருமணத்திற்கு பின் பெங்களூர் வாசம், 2 வயதில் ஒரு மகன், சாஃப்ட்வேர் இஞ்சினியர் (முன்பு),தற்சமயம் மகிழ்ச்சியான குடும்பத் தலைவி


இதோ அவங்க நமக்காக செய்து அனுப்பிய சிக்கன் குரோகட்ஸ் ரெசிப்பியின் பகிர்வு!

About Recipe:
This chicken croquettes is a easy snack and can be introduce this as a starter for your guest.. its a lovely nonveg recipe... chicken pieces blend in white sauce crunchy at outside and melting stuff inside the nuggets... thats a yummy combo... .. Kids love to have this at any time.. sure if you try this at one time love to prepare this for more.. 

Ingredients:
Chicken- 200gms
Butter- 1 tsp
Onion- 1 finely chopped
Ginger Garlic paste- 1 tsp
Maida- 3 tsp + 3 tsp
Milk- 1/2 cup
Green chillie- 1 finely chopped
Coriander leaves- a hand ful
Egg- 1 nos
Bread crumbs- 1 cup
Oil- for frying( 1/2 cup)

Method:

* Grab the ingredients..
* Boil the chicken pieces with 1 cup of water.. cook till the chicken cook and the water dries up
* Make them cool and chop the chicken pieces in to small, remove the bone pieces
* Heat the kadai with Butter and melt them..
* Saute the finely chopped onions, fry till they turn pink in color
* Add in the Ginger Garlic paste
*Add the 3tsp of maida and fry them with out any clumps
* Add the milk to the mixture and cook till they form a paste to thick.
* Add the chopped green chille and coriander leaves.. fry them for a minute
* Add the Chopped chicken pieces... take the mixture in a bowl and cool this for an hour in refrigerator.
* make even size ball of these..
* Roll in the remaining maida(3tsp), dip in the egg and again roll in the bread crumbs..
*Heat the kadai with oil, and fry the prepared balls till they turn golden brown in color.Drain and serve immediately.

இனி தமிழில்:

தேவையான பொருட்கள்;
சிக்கன் - 200 கிராம்
வெண்ணெய் - 1- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மைதா - 3  + 3 டீஸ்பூன்
பால் - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 அல்லது 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கையளவு
முட்டை - 1
உப்பு - தேவைக்கு.
ப்ரெட் க்ரெம்ஸ்-  1 கப்
எண்ணெய் பொரிக்க - அரை கப்.

செய்முறை:

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்

சிக்கன் துண்டுகளை ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.தண்ணீர் நன்றாக வற்றி சிக்கன் வெந்து வரும். அடுப்பை அணைக்கவும்.சிக்கன் ஆறிய பின்பு எலும்பு இருந்தால் எடுத்து விட்டு அவற்றை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெயை உருக விடவும்.பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு வாடை மடங்க வேண்டும். 3 டீஸ்பூன் மைதா சேர்க்கவும். நன்கு கட்டி பிடிக்காமல் பிரட்டவும்.

அத்துடன் பால் சேர்த்து நல்ல திக்கான பேஸ்ட் ஆகும் வரை கிண்டவும்.பொடியாக நறுக்கிய மல்லியிலை, மிளகாய் சேர்க்கவும்.வதக்கவும், அத்துடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.

தயார் செய்த சிக்கன் மிக்ஸை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.


பின்பு ஒரேயளவு உருண்டையாகப் பிடிக்கவும். மைதா, ப்ரெட் கிரம்ஸ், முட்டை அடித்தது இவற்றை தனித் தனி கிண்ணங்களில் தயாராக வைக்கவும். முதலில் தயார் செய்த உருண்டையை மைதாவில் பிரட்டி, பின்பு முட்டையில் தோய்த்து பின்பு ப்ரெட் கிரம்ஸ்சில் மீண்டும் பிரட்டி எடுத்து இப்படியே அனைத்து உருண்டைகளையும் ரெடி செய்யவும்.


வாணலியில் எண்ணெயை சூடு படுத்தவும். உருண்டைகளை பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் குரோகட்ஸ் ரெடி.நீங்களும் செய்து பாருங்க.

இது ஒரு ஈசி ஸ்நாக், இதனை பார்ட்டியில் ஸ்டார்டராகவும் பரிமாறலாம். குரோகட்ஸ் வெளியே முறுகலாகவும்,உட்புறம்  வாயில் போட்டால் கரையும் அளவு மெதுவாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.ஒரு தடவை செய்து பார்த்தீர்கள் என்றால் , மீண்டும் செய்யத்தூண்டுமாம்.
அவங்க ஆங்கிலத்தில் அனுப்பியதை நான் தமிழ் படுத்தி உங்களுக்கு தந்துள்ளேன்.

இதோ நான் செய்து அசத்திய சிக்கன் குரோகட்ஸ் படப் பகிர்வு.


நான் கொஞ்சம் ஸ்பைஸி ப்ரெட் கிரம்ஸ் உபயோகித்து செய்தேன்.சூப்பராக இருந்தது.என் வலைப்பூவில் இல்லாத அருமையான ரெசிப்பி.பகிர்வுக்கு மிக்க நன்றி சுஜிதா.

இது கிறிஸ்துமஸ், புது வருட சீசன் ஆதலால் அவங்க ப்ளாக்கில் இருந்து ஒரு கிறிஸ்துமஸ் கேக் குறிப்பு.


நீங்களும் செய்து பார்க்க  இங்கு  கிளிக்கவும். ருசியான கேக்  செய்து பாருங்க.

இனி சுஜியுடனான கலந்துரையாடல் :
நமக்காக சிரமப்பட்டு கலந்துரையாடல் பதிலை தமிழில் டைப் செய்து அனுப்பியிருக்காங்க,பாராட்டுக்கள் சுஜி.

வணக்கம் இது என்னுடைய முதல் விருந்தினர் பகிர்வு, இந்த வாய்ப்பை தந்த ஆசியா மேடத்திற்கு நன்றி. அவர்களது வலைப்பூவில் சிறப்பு விருந்தினர் அறிவிப்பை பார்த்து அவர்களை மெயில் மூலம் தொடர்பு கொண்டேன், மிகவும் உற்சாகமாக என்னை வரவேற்றார்கள், எனக்கு ஒர் புதிய அனுபவம் காத்திருக்கிறது என தோன்றிற்று, அப்படியே எனக்கு ஒர் நட்பும் கிடைத்தது.

இனி  என் கேள்விகளும் சுஜிதாவின்  பதில்களும்~


1.தங்களுடைய சுயறிமுகம், தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள்.
   என் பெயர் சுஜி, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே நாகர்கோவில், தற்பொழுது வசிப்பது பெங்களுரில், கைவினைப் பொருட்கள் செய்வது என்னுடைய பொழுதுபோக்கு (fur dolls, flower making, glass painting, embroidery, crochet)

2. தங்களுக்கு எத்தனை வருட சமையல் அனுபவம்? 
 ஆறு வருடங்களாக நான் சமைக்கிறேன்.

3..தங்கள் சமையலில் தங்கள் வீட்டினர் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகள் மற்றும் பிடிக்காத உணவு என்றால் எதை எல்லாம் குறிப்பிடுவீர்கள்.
 மீன் குழம்பு,மட்டன் பிரியாணி,சிக்கன் பிரியாணி, இவை கணவருக்கு மிக பிடித்தவைகள் அசைவம் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும், அதிக இனிப்பு கணவர் விரும்புவதில்லை..

4..உங்கள் கணவருக்கு அவரின் அம்மா சமையல் பிடிக்குமா ? அல்லது நீங்கள் செய்து அசத்தும் சமையல் பிடிக்குமா?
திருமணத்திற்கு பிறகு அம்மா(அத்தை) அவருக்கு என்ன பக்குவத்தில் சமையல் செயகிறார் என்பதை கவனித்து கற்றுக் கொண்டேன்.இது வரை அவர் சமையலை ஓப்பிட்டதில்லை.. நான் நிறைய விஷயஙகள் சமையலில் தெரிந்து கெண்டது என் அம்மா(அத்தை)யிடம் தான்.

5.திடீர் விருந்தினர் வந்தால் வெளியே வாங்கி பரிமாறுவீர்களா? அல்லது தேவையான பொருட்கள் வாங்கி வந்து அசத்தலாக  சமையல் செய்வீர்களா? அல்லது வீட்டில் இருப்பதை வைத்து நன்றாக சமைத்து அசத்துவீர்களா? எப்படி சமாளிப்பீர்கள்.
திடீர் விருந்தினர் வந்தால்,முடிந்தவரை இருக்கிறதை வைக்கப் பார்ப்பேன், இல்லையா அசைவம் (மீன்,கோழி,மட்டன்) வாங்கி அசத்திவிடுவோம், விருந்தினர் முகம் சுழிக்காதவாறு சமையல் செஞ்சுருவேன்..

6.சாப்பாடு மீதியானால் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டா? அல்லது மீதியாகாமல் சமைக்க பழகிக் கொண்டீர்களா? எப்படி?
பெரும்பாலும் தினசரி சமையலில் மீதி வராது,அனுபவம் தான் அளவாக சமைக்க கற்றுத் தந்தது, மீதி வந்தாலும் திரும்ப பரிமாறும் போது அதை புதிய ருசியில் மாற்றி பரிமாறிவிடுவேன் இதுவும் என் அம்மா(அத்தை)யிடம் தான் கற்றுக்கொண்டேன்..:)

7. தினப்படி சமையலை முன்பே யோசித்து, அட்டவணையிட்டு சமைக்கும் பழக்கம் உண்டா? அல்லது அன்றே யோசித்து அன்று சமைக்கும் பழக்கமா?
அட்டவணை போடும் வழக்கம் உண்டு. என் குடும்ப ஆரோக்கிய அட்டவணையில் வார நாட்களில் பெரும்பாலும் சைவம் தான் இருக்கும், சாம்பார், புளிக்குழம்பு, பருப்புகுழம்பு, வத்தக்குழம்பு, வெரைட்டி ரைஸ். இதில் காரட், பீன்ஸ்,முட்டை கோஸ்,   கத்திரிக்காய், கீரை, காளிஃப்ளவர்,காளான், பனீர், கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, காய்கறிகள் வழக்கமாக இடம் பெறுபவை.விடுமுறை நாள் என்றால் அது சந்தேகமே இல்லை அசைவம் தான்.

8. சமையல்  வலைப்பூ ஆரம்பிக்க எது காரணம்?
எனக்கு சமையல் குறிப்பெடுப்பதில் ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி, டிவி மற்றும் வார இதழ்களில் வரும் குறிப்பை டயரிகளில் சேகரித்து கொள்ளுவேன், அதையே இப்பொழுது வலைப்பூவில் சேகரிக்கிறேன். டயரி எனக்கு மட்டுமே பயன்படும், இது எல்லோருக்கும் பயன்படும் என்பதால் வலைப்பூவை ஆரம்பித்தேன்

9. என்னைப் பொறுத்தவரை நான் புகைப்படத்திற்காக அதிகம் நேரம் செலவழிப்பதில்லை, மொபைலில் எடுக்கும் படங்கள் எப்படியிருந்தாலும் பகிர்கிறேன்.தாங்கள்  பகிரும் புகைப்படத்திற்கு தனிக் கவனம் செலுத்துகிறீர்களா? என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்? எதாவது டிப்ஸ்.
எனக்கு எழுதும் திறன் கிடையாது மேடம், அதனால் புகைப்பட விளக்கப் படங்கள் எனக்கு கை கொடுக்கிறது..  CanonA620 Powershoot கேமரா உபயேகிக்கிறேன்,கூடிய மட்டும் புகைபட வேளை பகலில் தான் செய்வேன்.

10. .நீங்கள் வலைப்பூவிற்காக ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் செலவழிப்பீர்கள். வலைப்பூ ஆரம்பித்த பிறகு ஏதாவது உங்கள் தினசரி வாழ்வில் நல்ல மாற்றங்கள் அல்லது ஏற்பட்ட  அசௌகரியங்கள் பற்றியும் பகிரலாம்.
 ஒருமணி நேரம் தான் இப்போதைக்கு ஒதுக்குகிறேன், இங்கு நிறைய தோழிகள் கிடைத்துள்ளனர்.. சிலரது திறமைகளும் அனுபவங்களும் தைரியம் தருவதாக கருதுகிறேன் அசௌகரியம் ஒன்றுமில்லை, 

11. .சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், குறிப்புக்கள் பற்றி  சில வரிகள்.

சமைத்து அசத்தலாம் வலைப்பூவை கடந்த 5 மாதங்களாக பார்க்கிறேன்,அனுபவமிக்க குறிப்புகள் அட்டகாசம், குறிப்புகள் மிக எளிமையாகயிருக்கும், பிரியாணி வகைகள் என்னை மிக ஈர்த்தவை, பாரம்பரிய உணவான உழுந்து சோறு போன்ற குறிப்புகளும் அருமை, இன்னும் சமைத்து அசத்தலாம் வலைப்பூ வளர என் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி திருமதி சுஜிதா ரூபன். அருமையான பகிர்வுக்கும், சுவாரசியமான கலந்துரையாடலுக்கும் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம் !

முக்கியக் குறிப்பு:

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்பு அனுப்புவதாய் கருத்தில் தெரிவித்தவர்கள் குறிப்பை சுய அறிமுகத்தோடு என் மெயில் ஐடிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பகிர்வை தயார் செய்ய எடுத்துக் கொள்ள ஆகும் நேரம், மெயில் தொடர்பு என்கின்ற சிரமத்தை பொருட்படுத்தாமல் அன்புடன் கலந்து கொண்டவர்களுக்கும், தற்பொழுது குறிப்பை அனுப்பி வரும் நட்புகளுக்கும்  மீண்டும் என்  மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்புகள் மெயிலில் வரும் வரிசைப்படி பகிர்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்பதே இந்தப் பக்கத்தின் சிறப்பு அம்சம்.

அடுத்த வாரம் ஒரு வித்தியாசமான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

சிறப்பு விருந்தினர் பகிர்வு மிக பெரிதாக இருப்பதாகவும், சுருக்கி போஸ்டிங் போடும்படியும் பொதுவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இப்படியே தொடரட்டுமா? அல்லது ஏதும் மாற்றம் செய்யலாமா? உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். சுய அறிமுகம் மற்றும்  குறிப்பு பகிர்வு  மட்டும் போதுமா? மனம் திறந்து இப்பகுதி குறித்த ப்ளஸ் மைனஸ் - கருத்துக்ககளை தெரிவிக்கலாம். சிறப்பு விருந்தினர்கள் சமையற் குறிப்போடு கலந்துரையாடலுக்கு பதிலாக பயனுள்ள வகையில் ஹெல்த் டிப்ஸ், அழகு குறிப்பு, சமையல் டிப்ஸ் இப்படி எது வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதனையும் தெரிவிக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுஜிதா ரூபன் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

உரையாடல் அருமை...

வாழ்த்துக்கள்...

Shamee S said...

சிக்கன் குரோகட்ஸ் அருமை..கண்டிப்பாக செய்து பார்ப்பேன்..சுஜிதா அவர்களுக்கும், ஆசியா அக்காவிற்க்கும் வாழ்த்துக்கள்.......
விருந்தினர் பதிவில் நீங்கள் எடுக்கும் பேட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது அக்கா.இதனை அவசியம் தொடரவும்...

Asiya Omar said...

உடன் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.மகிழ்ச்சி.

ஷமீ வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி.

Saratha said...

சுஜிதாவின் சிக்கன் குரோகட்ஸ் அருமை.உங்கள் பேட்டியும் அருமை.அவர்கள் வலைபூவையும் தெரிந்து கொண்டேன்.உங்கள் சிறப்பு விருந்தினர் பகுதி மூலம் நிறைய திறமைசாலிகளை பார்க்க முடிகிறது.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Menaga sathia said...

சுஜிதாவிற்கு வாழ்த்துக்கள்..சிக்கன் குரோகட்ஸ் சூப்பர்..

இந்த பகிர்வை இப்படியே தொடருங்கள் அக்கா..எனக்கு பிடித்திருக்கிறது!!

சே. குமார் said...

சுஜிதா ரூபன் அவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

Suchi Sm said...

thanks madam....very happy to see in ur profile.. im flying here..:)

Snow White said...

அருமை ... இருவருக்கும் என் வாழ்த்துக்கள் ... உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது ...என்னை பொறுத்தவரை இப்படியே தொடரலாம் என்றே நினைக்கிறேன் ... சுவாரசியங்கள் நிறைந்து இருப்பதால் ,post பெரிதாக இருப்பதே தெரியவில்லை ...

Thenammai Lakshmanan said...

மிக அருமை ஆசியா. மிகப் பெரிய முயற்சி இது. சுஜிதா ரூபனுக்கும் வாழ்த்துக்கள்.

பார்க்கவே சுவையா இருக்கு. செய்து பார்க்கப் போறேன். :)

Asiya Omar said...

சாரதா அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

மேனகா வாங்க, உங்கள் கனிவான கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

சே.குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

மிக்க நன்றி சுஜி, வருகைக்கு மகிழ்ச்சி.

Snow White வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

தேனக்கா வாங்க, உங்க பிஸியான நேரத்திலும் வருகை புரிந்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி.