Wednesday, December 18, 2013

கிரீன் சிக்கன் பார்பிகியூ / Green Chicken Barbique

அரபு நாட்டில் குளிர்காலங்களில் பார்க்,கடற்கரையோரம்  மக்கள் பொழுதை போக்க கூட்டமாக கூடும் இடங்களில் பார்பிகியூ அடுப்பு இருக்கும்,அல்லது அவர்களே எடுத்து வந்து கறியை சுட்டுச் சாப்பிடுவது சாதாரணமாக இங்கு காணப்படும் விஷயம். ஒரு சமயம் நாங்கள் வெளியே சென்றிருந்த பொழுது பார்பிகியூ சிக்கன் செய்ததை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

தேவையான பொருட்கள்;
முதலில் சிக்கனில் ஊறவைக்க: கொஞ்சமாக செய்ய இந்த மசாலா சொல்லியிருக்கிறேன்.
சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
சிக்கன் துண்டுகள் - 12 துண்டுகள் (மீடியம் சைஸ்)
லெமன் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 அல்லது  2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
உப்பு - சிறிது  தேவைக்கு.
முதலில் சிக்கனில் ஊற வைக்க சொன்ன பொருட்கள் சேர்த்து ஊற வைக்கவும்.
கிரீன் மசாலா அரைக்க வேண்டியவை:
மல்லி,புதினா இலைகள்-  தலா ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 6
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
சிறிதளவு - உப்பு.

மேற்சொன்னவற்றை அரைத்துக் கொள்ளவும்.

ஊறிய சிக்கனில் அரைத்த விழுது சேர்த்து விரவி நன்கு குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்
அல்லது முதல் நாள் கூட ரெடி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
இப்பொழுது சிக்கன் சுடுவதற்கு தயார் ஆகிவிட்டது.

சுடும் பொழுது தடவ - ஆலிவ் ஆயில் - விரும்பினால் சிறிதளவு வைத்துக் கொள்ளலாம்.
இப்படி சிம்பிளாகவும் அரைத்த மசாலா,தயிர்,லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்தும் விரவலாம்.


கிரீன் மசாலா என்று இல்லை,ரெடிமேடாக கிடைக்கும் தந்தூரி மசாலா,டிக்கா மசாலா எது வேண்டுமானாலும் இதே முறையில் சேர்த்து ஊற வைக்கலாம்.
12 -16  நபர்களுக்கு பார்பிகியூ செய்ய குறைந்தது நான்கு கிலோ சிக்கன் தேவைப்படும்.

செய்முறை:

பார்பிகியூ அடுப்பை பற்ற வைக்கவும். இது தான் கஷ்டமான காரியம்.கரித்துண்டுகளில் எண்ணெய் தெளித்து நெருப்பை பற்ற வைத்து நன்கு வீசி வீசி நெருப்பை உண்டாக்க வேண்டும்.கன கனவென்று நெருப்பு கங்கு உண்டானதும் கறி சுடுவதற்கு அடுப்பு ரெடியாகிவிடும்.
கிரிலில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொள்ளவும். தயார் செய்த சிக்கன் துண்டுகளை அடுக்கி இரண்டு புறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.ஒரு செட் சுட குறைந்தது 20 நிமிடம் முதல் - அரைமணி நேரம் ஆகும்.
சுட்டதை அப்ப அப்ப சூடாகச் சாப்பிடலாம்,அல்லது சுட்டு முடித்துவிட்டு அனைவரும் அமர்ந்து வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற மற்ற மெயின் சைட் டிஷ்,ஃப்ரெஷ் காய்கறிகள்,  உடன் இதனையும் பரிமாறி சாப்பிடலாம்.அந்த அடுப்பில் மக்காச்சோளக்கதிர் சுடலாம்., ப்ளாக் டீ போட்டும் குடிக்கலாம்.




இந்த விண்டரில் நீங்களும் செய்து அனுபவிங்க,வீட்டிலும் இதே போல் கிரில் செய்யலாம். தோட்டத்தில்,மொட்டை மாடியில் கவனமாக செய்யலாம்.வெளியே போய்த்தான் செய்து சாப்பிடனும் என்று இல்லை.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்...! சூப்பர்...!! செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Saratha said...

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு.நீங்கள் சொன்ன மாதிரி பார்பிகி யூ அடுப்பை பற்ற வைத்து கங்கை உண்டாக்கி விட்டால் பிறகு செய்வது சுலபம் தான்.நீங்கள் இருக்கும் பகுதிக்கும் நம் ஊருக்கும் நேரம் எவ்வளவு வித்தியாசப்படும்? சொல்லுங்கள் சகோதரி ஆசியா.

Asiya Omar said...

மிக்க நன்றி தனபாலன் சார்.

சாரதா அக்கா வருகைக்கு மிக்க நன்றி.1 மணி 30 நிமிடம் முன்னே இங்கே நேரம்.

Shama Nagarajan said...

drooling akka

Snow White said...

அருமை அருமை .... ரொம்ப நல்லா வந்து இருக்கு அக்கா

Asiya Omar said...

Snow White மிக்க நன்றி,செய்து பாருங்க.