Monday, December 2, 2013

கிரில்ட் ஃபிஷ் / Grilled Fish

வீட்டில் ஓவன் இருக்கும் பட்சத்தில் மீனை கிரில் செய்து சாப்பிடலாம்.இது நம்ம நாட்டு ஸ்டைலில் செய்தது. தோழி ஒருவர்,குக்கிங் ரேஞ்சில் எப்படி கிரில் செய்வீங்கன்னு கேட்டாங்க,அவர்களுக்காக இந்த பகிர்வு.

தேவையான பொருட்கள்;
பிடித்த மீன் - 8 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு நைசாக தட்டியது - நான்கு பல் 
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்லோர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மீனைச் சுத்தம் செய்து நன்கு  கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மேற் சொன்ன பொருட்கள்  கலந்து மீனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

இது பொதுவாக மீன் பொரிக்க உபயோகிக்கும் மசாலா, உங்க டேஸ்ட்டிற்கு மசாலா உபயோகிக்கலாம். ஃபிஷ் ஃபில்லட் என்றால் சாப்பிட இலகுவாக இருக்கும். ஈசியாக செய்ய சிக்கன் 65 மசாலா அல்லது டிக்கா மசாலா அல்லது தந்தூரி மசாலா அத்துடன்,லைம் ஜூஸ்  அல்லது இஞ்சி பூண்டு,தயிர், உப்பு சேர்த்தும்  மசாலா ரெடி செய்யலாம்.

செய்முறை:
என்னுடைய அடுப்பு பல வருடங்கள் முன்பு வாங்கியது, மினிமம் செட்டிங் தான் இருக்கும்.முதலில் மேலும் கீழும் ஃப்லேமை ஆன் செய்து கொள்ளவும்.

 200 டிகிரி வெப்பநிலை செட் செய்து கொள்ளவும். நிறைய மீன் என்றால் 270 டிகிரி செட் செய்யவும்.5 நிமிடம் முற்சூடு செய்யவும்.

கிரில் பேனை அலுமினியம் ஃபாயில் கொண்டு கவர் செய்யவும்.அலுமினியம் ஃபாயில் விரிப்பதால் சுத்தம் செய்ய ஈசியாக இருக்கும். மசாலாவில் ஊறிய மீனை கிரிலில் அடுக்கவும். கொஞ்சமாக கிரில் செய்ய இந்த கிரில் பேன் உபயோகிக்கலாம். மொத்தமாக செய்ய அவனிலேயே இருக்கும் பெரிய ட்ரேயை உபயோகித்து மீனைச் சுடலாம்.

 முற்சூடு செய்த ஓவனில் ரெடி செய்த மீனை வைக்கவும்.
 மீனோடு சிக்கன் பீஸ் இருக்கேன்னு யோசிக்க வேண்டாம். மீன் அவ்வளவாக பிடிக்காத என் மகளுக்காக வைத்தது.

 10 நிமிடம் கழித்து கவனமாக திறந்து மீனை திருப்பி வைக்கவும். மீன் விரைவில் வெந்து வெடும் என்பதால்  திருப்பாமலும் இருக்கலாம்,சிக்கன் என்றால் நிச்சயம் திருப்பி வைக்கவேண்டும்.
ஓவனை மூடவும். திரும்ப 10 நிமிடம் கழித்து ஸ்விட்ச் ஆஃப் செய்து திறந்து வெளியே எடுக்கவும்.இடுக்கி கொண்டு எடுத்து மீனை சூட்டோடு பரிமாறவும்.

சுவையான ஃபிஷ் கிரில் ரெடி.எந்த வகை மீனாக இருந்தாலும் செய்யலாம், அதிக முள் உள்ள மீன் வசதிப்படாது.நடு முள் மட்டும் இருந்தால் எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்...சூப்பர்...!

கட்டுரையில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

எம் அப்துல் காதர் said...

அப்போ அதிகம் ஆயில் இல்லாமல் சாப்பிட வசதியானதுன்னு சொல்லுங்க :)

Suchi Sm said...

healthy grilled fish... super yummy...

Menaga sathia said...

சூப்பர்ர்ர்..இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.

ஸாதிகா said...

சூப்பராக இருக்கு தோழி,

Saratha said...

சூப்பர்!!சாப்பிடவும் ஆசையாக இருக்கு.

Jaleela Kamal said...

romba nalla irukku

Asiya Omar said...

மிக்க நன்றி தனபாலன் சார்.

சகோ.அப்துல் காதர் நீண்ட நாள் கழித்து வந்த உங்கள் வரவிற்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

Asiya Omar said...

சுச்சி கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

மேனகா செய்து பாருங்க,மகிழ்ச்சி.

தோழி ஸாதிகா நன்றி,மகிழ்ச்சி.

சாரதா அக்கா, வாங்க,இது ரொம்ப ஹெல்தி ருசியும் கூட, கருத்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி.

Snow White said...

asaththinga akka...