Tuesday, December 24, 2013

சேமியா மட்டன் பிரியாணி / Semiya Mutton Briyani

இந்த வாரம் செவ்வாய் தமிழர் சமையல் இவென்ட்டிற்கு எங்க ஊர் ஸ்பெஷலான சேமியா மட்டன் பிரியாணியை பகிரலாம் என்று உள்ளேன்.

தேவையான பொருட்கள்;
    மட்டன் - அரைக் கிலோ
    சேமியா - அரைக் கிலோ
    எண்ணெய் - 100 மில்லி
    நெய் - 50 மில்லி
    இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி அல்லது 1 தேக்கரண்டி(காரம் அவரவர் விருப்பம்)
    தயிர் - 2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    மல்லி,புதினா - தலா கைபிடியளவு
    எலுமிச்சை - பாதி
    பெரிய தேங்காய் - பாதி துருவிக் கொள்ளவும்(பால் எடுக்கவும்)
    உப்பு - தேவைக்கு.

  • செய்முறை:
  • சேமியாவை முதலில் பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.ஒரிரு டீஸ்பூன் நேய் சேர்த்தும் வருக்கலாம்.

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மட்டனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
 
வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.
பின்பு மல்லி, புதினா, மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கி எல்லாம் சேர்ந்ததும் எண்ணெய் தெளிந்து வரும்.
 ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து,அரை கப் தண்ணீர் சேர்த்து  பிரட்டி விட்டு குக்கரை மூடி நான்கு விசில் வைத்து திறக்கவும்.
சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகிவிட்டது.

மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய் பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு தண்ணீர். பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும்.கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும்.
பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.உப்பு சரி பார்க்கவும்.

சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.அழகுக்கு சிறிது நறுக்கிய மல்லி,புதினா இலை விரும்பினால் தூவலாம்.அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.
பத்து நிமிடம் கழித்து திறந்து எடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

இதனை தமிழர் சமையல் செவ்வாய் இவென்ட்டிற்கு TST அனுப்புகிறேன்.




9 comments:

Saratha said...

நான் மட்டன் சேர்க்காமல் செய்திருக்கிறேன்.நீங்க மட்டன் சேர்த்து செய்து அசத்தி இருக்கீங்க.சூப்பர்!!!

Asiya Omar said...

சாரதா அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இது எங்க ஊரில் காலம் காலமாக செய்து அசத்தும் ஒரு டிஃபன்.விஷேசம் சமயம் வீடுகளில் இதனை பசியாற நிச்சயம் ஒரு நாள் செய்வதுண்டு.

ezhil said...

பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு...

Shamee S said...

சூப்பர் ஆசியா அக்கா..எங்க அம்மா செய்வது போலவே இருக்கு......

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

நன்றி ஷமீ.கருத்திற்கு மகிழ்ச்சி.

mymoon said...

Asiyaka,
enaku ippovey saapdanum pol iruku,mouth watering ippo irukra climatekum intha biryaniya suda suda saapta aaha supera irkum....
wish I will be your neighbour akka
enga veetla me and mom only eating this,others always fight with us to eat.

Saratha said...

இன்று காலையில் சேமியா மட்டன் பிரியாணி நீங்கள் கொடுத்துள்ள குறிப்பின்படியே செய்தேன்.நன்றாக இருந்தது.நாங்கள் விரும்பி சாப்பிட்டோம்.

Asiya Omar said...

மைமூன் கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

சாரதா அக்கா வாங்க,ஆஹா !சேமியா பிரியாணி செய்து பார்த்தீங்களா? நன்றாக இருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.செய்து பின்னூட்டமும் அளித்ததமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையானா சேமியா மட்டன் பிரியாணி, எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் வாரத்துக்கு ஒரு முறை செய்வது..