Wednesday, December 4, 2013

வெஜிடபிள் லெமன் சேவை / Vegetable lemon sevai


 தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் இடியாப்பம் உதிர்த்தது - 6 - 8
அல்லது இன்ஸ்டண்ட் ரைஸ் சேவை - 2 கப்
கடுகு & உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடலை பருப்பு - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் ,மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
இஞ்சித் துருவல் - 1டீஸ்பூன் ( விரும்பினால்)
துருவிய கேரட் - அரை கப், பச்சை பட்டாணி - கால் கப்
அல்லது வேக வைத்த காய்கறி - ஒரு கப்
எலுமிச்சை சாறு - 1 அல்லது 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி கருவேப்பிலை - சிறிது.

பரிமாறும் அளவு: 2 நபர்கள்.

செய்முறை:

 இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

 அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும்,கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,வற்றல் கருவேப்பிலை,பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.விரும்பினால் இஞ்சி துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

 காய்கறிகள் சேர்க்கவும்.
 மஞ்சள் தூள் சேர்க்கவும், நன்கு பிரட்டி விடவும்.சிறிது வதங்கட்டும்.சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 உதிர்த்து வைத்த இடியாப்பம் சேர்க்கவும்.
 ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.நன்கு பிரட்டவும்.
 தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
 பிரட்டி விட்டு பரிமாறவும்.

சுவையான வெஜிடபிள் லெமன் சேவை ரெடி. காலை மாலை இரவு நேர டிஃபனுக்கு ஏற்றது.

இன்ஸ்டெண்ட் ரைஸ் சேவை உபயோகித்தால் கொதிக்கும் நீரில் போட்டு வடித்து உபயோகிக்கவும்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் சூப்பர்... நன்றி சகோ...

வாழ்த்துக்கள்...

ஸாதிகா said...

சம்பீதத்தில் ஒரு ஐயங்கார் திருமண வரவேற்புக்கு போய் இருந்த பொழுது இந்த சேவையை முதன் முதலில் சாப்பிட்டேன்.சுவை மிகவும் பிடித்துப்போனது.சில தினக்களிலேயே நீங்கள் ரெஸிப்பி போட்டுட்டீங்க தோழி நன்ரி.

Saratha said...

செய்முறை விளக்கமும்,படங்களும் எப்போதும் போல அருமை.

ADHI VENKAT said...

சுவையான குறிப்பு. எங்க வீட்டில் எல்லோருக்குமே சேவை மிகவும் பிடிக்கும்... நான் concord என்கிற பிராண்ட் சேவை தான் பயன்படுத்துவேன். அருமையாக இருக்கும்..

தேங்காய், எலுமிச்சை, தக்காளி என தனித்தனியாக தான் செய்து தந்திருக்கிறேன். இது புதுமையாக உள்ளது. காய்கறி, எலுமிச்சை, தேங்காய் என கலவையாக.. அடுத்த முறை இப்படி செய்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான அழகான மங்கலகரமான கலரில் சேவை.

சேவையைப்பகிர்ந்துள்ள தங்கள் எழுத்துச்சேவைக்குப் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான நல்வாழ்த்துகள்.

இதுபோன்ற சேவைகள் தொடரட்டும்.

priyasaki said...

பார்க்கவே அருமையாக,வித்தியாசமா இருக்கு.செய்துபார்க்கிறேன்.

Menaga sathia said...

சூப்பர்ர்..பார்க்கவே கலர்புல்லா இருக்கு!!

இளமதி said...

அருமையான சேவை ஆசியா!

நாங்கள் பெரும்பாலும் இடியப்பத்தினை இப்படி உதிர்த்துச் செய்வதுண்டு.

நல்ல பகிர்வு! நன்றி ஆசியா!

Savitha Ramesh said...

Romba colourfull a irukku akka. super.

Asiya Omar said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சே. குமார் said...

ம்...

பார்க்கவே சூப்பரா இருக்கே அக்கா.,..

Jaleela Kamal said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் அடிக்கடி செய்து சாப்பிடுவது,