Monday, December 16, 2013

முழுக்கோழி ரோஸ்ட் / சுட்ட கோழி / Whole Chicken Roast

விருந்தினர்கள் வரும் சமயம், வாரயிறுதி அல்லது ஏதாவது விஷேச நாட்களில் இப்படி முழுக் கோழியை ரோஸ்ட் செய்து பரிமாறிப்பாருங்க, எல்லாருக்கும் ரொம்பவும் பிடிக்கும்.வீட்டிலேயே செய்து ஹெல்தியாக பரிமாறிய,சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ஏகப்பட்ட மசாலா, வெங்காயம்,தக்காளி,தேங்காய் என்று சேர்த்து செய்து சாப்பிடுவதை விட இது செமையாக இருக்கும்.
 தேவையான பொருட்கள்;
முழுக்கோழி - 1 கிலோ எடை
கோழியில் ஊற வைக்க:
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன் (உங்க டேஸ்டுக்கு)
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 பழம்.
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கு.
ஆலிவ் ஆயில் அல்லது சன் ஃப்லவர் ஆயில் - 1 +1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

 ஃப்ரெஷ் அல்லது ஃப்ரோசன் எதுவாக இருந்தாலும் முதலில் கோழியை இரண்டு மூன்று தண்ணீர் விட்டு சுத்தமாக அலசிக் கொள்ளவும்.பின் தோலை உரித்துக் கொள்ளவும்.ஏதும் உட்பகுதியில் கழிவு இருந்தால் நீக்கிக் கொள்ளவும்.
 நன்கு அலசி எடுக்கவும்.
 மசாலா ஏறுவதற்கு தக்கபடி கோழியில் சதைப் பிடிப்பான பகுதிகளில் லேசாக கீறி விட்டுக் கொள்ளவும்.நன்கு மீண்டும் பளிச்சென்று அலசவும்.
 நன்கு தண்ணீர் வடிய வைக்கவும்.
இனி மசாலா தயார் செய்யவும்.
 ஒரு பவுலில் லெமன் ஜூஸ், காஷ்மீரி சில்லி பவுடர், மஞ்சள் தூள், சீரகத்தூள்,எண்ணெய்,தேவைக்கு  உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 அந்த மசாலாவை கோழியின் மீது எல்லாப் பாகத்திலும் பூசவும்.


 பிழிந்த எலுமிச்சை மூடியை கோழியின் வயிற்றுப்பாகத்தில் வைக்கவும்.மணமாக இருக்கும்.
 கோழியை ஒரு பாத்திரத்தில் வைத்து  cling on paper போட்டு கவர் செய்து ஃப்ரிட்ஜில் 12 மணி நேரம் வைக்கவும். அல்லது ஒரு நாள் முன்பே ரெடி செய்து வைத்தும் ரோஸ்ட் செய்யலாம்.


 கோழியை ஃப்ரிட்ஜை விட்டு வெளியே எடுக்கவும்.ஒரு மணிமாவது ரூம் டெம்பரேச்சரில்  நேரம் வெளியே வைக்கவும்.தண்ணீர் ஊறி இப்படி இருக்கும்.
 ஊறிய சிக்கனை கிரில் பேனில் அலுமினியம் ஃபாயில் விரித்து,பின்பு கிரிலில் சிக்கனை எடுத்து வைக்கவும்.அலுமினியம் ஃபாயில் கவர் செய்வதால் ட்ரேயை சுத்தம் செய்வது ஈசி.

 கேஸ் ஒவனை ஆன் செய்து 5 நிமிடம்  முற்சூடு செய்யவும்.மீடியம் ஃப்லேம்  செட் செய்யவும்.உள்ளே சிக்கனை வைத்து அரைமணி நேரம் கழித்து திருப்பி வைக்கவும்.நாலாபுறமும் நன்கு வேகும் படி திருப்பி வைத்து விரும்பினால் அப்ப அப்ப கொஞ்சம் ஆலிவ் ஆயில் தடவலாம்.பின்பு அலுமினியம் ஃபாயில் கவர் செய்து 10 - 15  நிமிடம் வேக விடவும்.ஓவனை ஆஃப் செய்யவும்.10 நிமிடம் இருக்கட்டும்.
நன்கு சுட்டவுடன் கவனமாக சிக்கனை  எடுக்கவும். விரும்பினால் லேசாக பட்டர் தடவி கட் செய்து பரிமாறலாம்.


 ஒரு ப்லேட்டில் குபூஸ் அல்லது நாண் அல்லது ரொட்டியை எடுத்து வைக்கவும்.அதன் மேல் சுட்ட கோழியை வைக்கவும்.

என் சிறப்பு விருந்தினர் பகிர்வில் சித்ரா வான் கோழியை நம்ம ஊர் மசாலா கொடுத்து ரோஸ்ட் செய்து காட்டியிருந்தாங்க.நான் இங்கே அதே முறையில் கோழியை ரோஸ்ட் செய்தேன் சூப்பர் டேஸ்ட். சிக்கன் வெளியே ரோஸ்ட் ஆகி,உள்ளே நல்ல சாஃப்டாக இருந்தது.
 இஞ்சி பூண்டு சேர்க்கவிலையே என்று நினைத்தேன்,ஆனால் இந்த சுவை அபாரம்.

 நான்கு அல்லது ஆறு துண்டுகளாக கட் செய்யவும். நறுக்கிய காய்கறிகள் ஹமூஸ், முதபல்,  தகினா சாஸ்,  பூண்டு சாஸ் இப்படி எது பிரியமோ விரும்பியவற்றுடன் பரிமாறவும்.

ஓவன் இல்லையே கவலையே வேண்டாம், நல்ல அடிகனமானஆழமான  நான் ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணை தடவி கோழியை வைத்து மீடியம் நெருப்பில் மூடி ரோஸ்ட் செய்து எடுங்க,இடையிடையே திருப்பி விடவும். சூப்பராக அதே டேஸ்டுடன் ரோஸ்ட் இருக்கும்.இஞ்சி பூண்டு சேர்ப்பதும் சேர்க்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.நீங்களும் செய்து அசத்துங்க.


இது தோலுடன் வைத்து வேறு முறையில் கிரில் செய்து எடுத்த சிக்கன் இதனை இன்னொருமுறை பகிர்கிறேன்.

என்னுடைய பேக்ட் சிக்கன் & வெஜிடபிள் பகிர்வைக் காண இங்கே கிளிக்கவும்.

10 comments:

ஸாதிகா said...

வாவ்..மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி ஆசியா.

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்.... அருமை சகோதரி...

நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

விளக்கம் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

Saratha said...

நீங்கள் செய்து வைத்துள்ள முழுக்கோழி ரோஸ்டின் மணம் இங்கு வரை வருகிறது.சூப்பர்!!!

கீதா லட்சுமி said...

Wow.. soo yummy akka..
Near to our home, in an hotel they are preparing AL-FAM chicken.. it is also a whole roasted chicken.. Please share this recipe if you know how to prepare it.. :

Menaga sathia said...

பார்க்கும்போதே இப்பவே சாப்பிடனும் போல இருக்கு..

Snow White said...

abaram....elimaiyana muraiyil seithu asaththinga akka ..parkkavee superan iruku

Shamee S said...

செம சூப்பரா இருக்கு அக்கா...வாய் ஊற வச்சுட்டீங்க.......

Asiya Omar said...

ஸாதிகா வருஅகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

மிக்க நன்றி தனபாலன் சார்.

Asiya Omar said...

சாரதா மிக்க நன்றி.

கீதாலட்சுமி கருத்திற்கு மகிழ்ச்சி.
விரைவில் பகிர்கிறேன்.

மேனகா மிக்க நன்றி.

ஸ்நோ ஒயிட் மிக்க நன்றி.

ஷமீ மிக்க நன்றி.

Anitha Vijay said...

ஆசியா,
நேற்று இந்த ரோஸ்ட் செய்தேன். அருமையாக இருந்தது. கிறிஸ்மஸ் விருந்திற்கும் இதே தான் செய்யப்போகிறேன்.

நன்றி.