Thursday, February 28, 2013

பாலக் கோஸ் பொரியல் / Palak Cabbage Stir fry


தேவையான பொருட்கள்;
பாலக் கீரை - ஒரு கட்டு
முட்டை கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு பற்கள் - 4
மிளகாய் வற்றல் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 -3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கீரையை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டை கோஸ் நறுக்கி அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சூடேறவும்,கடுகு,சீரகம்,உ.பருப்பு,வற்றல் கிள்ளி  சேர்த்து வெடிக்கவும்,பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். கீரையை சேர்க்கவும்,சிறிது வதங்கட்டும்,முட்டை கோஸ் சேர்க்கவும்.கொஞ்சம் ருசிக்கு உப்பு பார்த்து சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்,இரண்டுமே விரைவில் வதங்கி விடும்,தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான சத்தான பாலக் கோஸ் பொரியல் ரெடி.


சாதத்தில் பிரட்டியோ அல்லது பக்க உணவாகவோ  சாப்பிடலாம்.
பாலக்கீரையும் முட்டை கோஸ் சேர்த்து பொரியல் செய்தால் ருசியும் சத்தும் அபாரம்.

Tuesday, February 26, 2013

ப்ரெட் பேன் கேக் / Bread Pan Cake


தேவையான பொருட்கள்;
ப்ரெட் துண்டுகள் - 4
முட்டை - 1
மைதா - அரை கப்
பால் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரைடீஸ்பூன்
சீனி - 4 -6 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் நெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - பின்ச்
அலங்கரித்து பரிமாற - தேன், செர்ரி பழங்கள் (விருப்பம் போல்)

பரிமாறும் அளவு - 2-3.

முட்டை பிரியப்படாதவர்கள் வெறும் மைதா,பால்,வெனிலா எசன்ஸ், சீனியுடன் பின்ச் பேக்கிங் பவுடரோ அல்லது சோடா உப்பு சேர்த்து பேன் கேக் மாவு ரெடி செய்து கொள்ளலாம்..

செய்முறை:
 ஒருபவுலில் முட்டை, சீனி ,மைதா மாவு,பால்.வெனிலா எசன்ஸ்,பின்ச் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இட்லி மாவு பதம் இருக்க வேண்டும். ப்ரெட் துண்டுகளை இரண்டு இரண்டாக கட் செய்து வைக்கவும்.எட்டு துண்டுகள் வரும்.

 கரைத்து வைத்த மைதா முட்டை கலவையில் தோய்த்து எடுக்கவும்.
 தோசைக் கல் அல்லது ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் நெய் கலவை விடவும்.ப்ரெட் துண்டுகளை தவா சூடேறியவுடன் போட்டு பொன் முறுகலாக இரண்டு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும்.
வெனிலா எசன்ஸ் சேர்ப்பது முக்கியம்.அந்த மணம் அபாரமாக இருக்கும்.

 சுவையான ப்ரெட் பேன் கேக் ரெடி.

இதனை தேனுடன் பரிமாற சுவை அபாரமாக இருக்கும்.

ரெடியான ப்ரெட் பேன் கேக் மீது சிறிது தேன் விட்டு மடித்து சாப்பிடவும்.சும்மாவே சூப்பராக இருக்கும்.விருப்பப்பட்டால் செர்ரி அலங்கரித்து பரிமாறலாம்.
ஒரு நாள் பேன் கேக் மாவு மீதமானது ப்ரெட்டை தோய்த்து சுட்டுப் பார்த்தேன் சூப்பராக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க..

இந்த குறிப்பை
 Passion on Plate  @ En - Iniyaillam  Valentine's Day Recipe Contest  @ Priya's Versatile Recipes - அனுப்புகிறேன்.Sunday, February 24, 2013

என்னுடைய வகை வகையான கேக் குறிப்புக்கள் / My Variety Cake Recipes

நான் அறுசுவையில் குறிப்பு கொடுத்த ஆரம்ப காலகட்டத்தில் படங்கள் எடுத்து பகிர முடியாத சூழல்.அந்த சமயம் தான் பேக்கிங் வகுப்பு போனேன்,அப்பொழுது செய்து பார்த்த கேக் குறிப்புக்களை அங்கு பகிர்ந்திருந்தேன்.எனக்கு பேக்கிங் சொல்லித் தந்த ஆனி ஆண்ட்டி தந்த அளவுடன் கூடிய பகிர்வு இதோ உங்களுக்காக.சிம்பிளாக ஆனால் சூப்பராக இருக்கும்.எல்லாம் நான் பேக்கிங் வகுப்பில் செய்து பார்த்து கொடுத்த குறிப்பு.
இதோ உங்கள் பார்வைக்கு ஒரே பக்கத்தில்..கீழ்காணும் ரெசிப்பி பெயரை கிளிக் செய்து அறுசுவையில் பார்க்கவும்.


பட்டர் கேக் (ஒரு கிலோ) / Butter Cake
விக்டோரியா சாண்ட்விச் கேக்  / Victoria Sandwich Cake
ரிப்பன் கேக் / Ribbon Cake
மார்பிள் கேக் / Marble Cake
லைட் ஃப்ரூட் கேக்  / Light Fruit Cake
ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் / Rich Chocolate Nuts Fruit Cake
செர்ரி கேக் / Cherry Cake

ஐசிங்:
ஃபட்ஜ் ஐசிங் /  Fudge Icing
கிலேஸ் ஐசிங் / Glaze Icing
ஐசிங் மற்றொரு முறை  / Icing Another Method

செய்து பாருங்க,நிச்சயம் சூப்பராக வரும்.என்ன தான் கேக் வெளியே வாங்கி ருசியாக சாப்பிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுது வீட்டில் செய்து பாருங்க அதன் மணமே தனி தான்..

படம் நன்றி கூகிள்.

Saturday, February 23, 2013

சாக்லேட் கேக் / Chocolate Cake

 தேவையான பொருட்கள்;
மைதா மாவு - 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
சீனி (பவுடராக்கியது) - 150 கிராம்
பட்டர்  அல்லது மார்ஜரின் - 150 கிராம்
முட்டை - 2 (150 கிராம்)
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் - அரை கப்
உப்பு - பின்ச்.

தயார் செய்ய - 20 நிமிடம்
பேக்கிங் நேரம் - 30-45 நிமிடம்
பரிமாறும் அளவு -6- 8 நபர்கள்

 தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
மைதா,பேக்கிங் பவுடர்,கோகோ பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.

 முட்டை மஞ்சள் கரு,வெள்ளைக்கரு தனியாக பிரித்து வைக்கவும்.
 வெண்ணெய், சீனியையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
 அத்துடன் முட்டை மஞ்சள் கரு,வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

 மீண்டும் அடித்துக் கொள்ளவும்.சீனி நன்கு கரைந்து பொங்கி வெண்ணெய் லைட்டாக இருக்க வேண்டும்.
 மாவு சலித்து ரெடி செய்ததை எடுத்துக் கொள்ளவும்.
 சலித்த மாவுடன் வெண்ணெய்,பட்டர் கலவையை கலந்து கொள்ளவும்.
 பால் சேர்க்கவும்.
 கலந்து கொள்ளவும்.
 முட்டை வெள்ளைக்கருவை நுரைக்க அடித்து தனியாக அதனையும் சேர்க்கவும்.
 கலந்து கொள்ளவும். இதனை அப்படியே சிறிது  வெண்ணெய் தடவி மைதா மாவு தூவி ரெடி செய்த பேக்கிங் ட்ரேக்கு மாற்றலாம். நான் ரெடி செய்தது பேக்கிங் பவுல் என்பதால் அதனிலேயே பேக் செய்து பார்த்தேன்.சூப்பராக வந்தது.
 ஓவனை 200 டிகிரி செல்சியஸ்க்கு முற்சூடு செய்யவும்.மாவு ரெடி செய்து வைத்த பேக்கிங் பவுலை எடுத்து வைக்கவும்.
 30- 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். உங்கள் ஓவனைப் பொருத்து நேரம் வேறுபடக்கூடும்.கேக் ரெடியானதை ஒரு மரக் குச்சி கொண்டு வெந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.

 ஓவனை விட்டு வெளியே எடுத்து ஆற வைக்கவும்.ஆறிய பின்பு தலை கீழாக பவுலை  திருப்பி ஒரு ப்லேட்டில் எடுத்தால் சாக்லேட் கேக் ரெடி துண்டு செய்து பாரிமாறவும்.
 சூப்பர் ஸ்பாஞ்சி சாக்லேட் கேக் ரெடி.

 விருப்பம் போல் செரி அல்லது ஸ்ட்ராபெர்ரி, கிரீம்,சாக்லேட் சிப்ஸ், கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.இது என் மகள் முதல் முதலாக அவளே அலங்கரித்தது உங்கள் பார்வைக்கு.


என்னுடைய 
ஸ்ட்ராபெர்ரி சாக்லேட் கேக் 

சாக்லேட் புட்டிங் 

பார்க்க கிளிக்கவும்.

Wednesday, February 20, 2013

சிம்பிள் சில்லி கோபி ஃப்ரை / Chilli Gobi Fry..


தேவையான பொருட்கள்;
காளிஃப்ளவர் - அரை கிலோ
சில்லி பவுடர் அல்லது சிக்கன் 65 மசாலா - 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்லோர்,கடலை மாவு,அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு.
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் தேவைக்கு.
 காளிப்ளவரை சிறு பூக்களாக பிரித்தோ அல்லது நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.
நன்கு கொதிக்கும் நீரில் போட்டு ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும்.வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.காளிப்ளவர் பாதி வெந்து விடும்.

 காளிஃப்ளவருடன் மேற்சொன்ன மாவு வகைகள், சில்லி பவுடர் அல்லது சிக்கன் 65 மசாலா,ருசிக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,லேசாக தண்ணீர் தெளித்து விரவவும்.கெட்டியாக கோட் ஆகி இருக்க வேண்டும்.

 தேவைக்கு கொஞ்சமாக எண்ணெய் விட்டு முறுக பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.மாவு கலந்து விரவியிருப்பதால் எண்ணெய் குடிக்காது,

 இதனை அப்படியே சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.
என் இனிய இல்லம் ஃபாயிஸா தயிர் பச்சை மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து பிரட்டி சிக்கனை செய்து காட்டியிருந்தாங்க.தீடீரென்று அந்த நினைவு வரவே நான் இந்த கோபி ஃப்ரையில் முயற்சி செய்தேன் .டேஸ்ட் சூப்பராக இருந்தது..

 வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.சூடேற்றவும், கருவேப்பிலை,கீறிய பச்சை மிளகாய் போடவும்,வெடிக்கவும் தயிர் சேர்க்கவும்.
 அத்துடன் பொரித்த காளிப்ளவரை சேர்க்கவும்.நன்கு பிரட்டவும். தயிர் பொரித்த காளிப்ளவரில் ஒட்டி வர வேண்டும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான சில்லி கோபி ஃப்ரை ரெடி..
செய்து பாருங்க சூப்பராக இருக்கும்,வெரைட்டி ரைஸ் உடன் பரிமாற சூப்பராக இருக்கும்,ஏன் சும்மாவே சாப்பிடலாம்.சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
சிக்கன் 65 மசாலா இல்லையென்றால் வெறும் மிளகாய்த்தூள் போட்டு விரவலாம்.நான்வெஜ் டேஸ்ட்டில் வேண்டுமென்றால் சிக்கன் 65 மசாலா(ஆச்சி) வாங்கி உபயோகிக்கலாம்.காரம் உங்கள் விருப்பம் போல் சேர்க்கவும்.

Tuesday, February 19, 2013

ஈஸி டேஸ்டி தக்காளி சட்னி / Easy Tasty Tomato Chutney


தேவையான பொருட்கள்;
பழுத்த சிவப்பு தக்காளி - 200கிராம்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை-1 டீஸ்பூன்
இஞ்சி - மிகச் சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 7
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 + 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

 வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி,உரித்த சின்ன வெங்காயம்,சிறிய துண்டு இஞ்சி போட்டு வதக்கவும்.சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும்,விரைவில் தக்காளி மசிந்து விடும்,மிளகாய்த்தூள் சேர்க்கவும் .நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.ஆறட்டும். ஆறியபின்பு கவனமாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.நன்றாக சிக்கென்று மூடி பெரிய ஜாரில் போட்டு அரைக்க வேண்டும் இல்லாவிடில் தக்காளி சட்னி வெளியே அபிஷேகமாகிவிடும்.

அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றவும். தாளிப்பு கரண்டியில்,கடுகு,உளுத்தம் பருப்பு,பெருங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.கெட்டியாக அல்லது கொஞ்சம் தளர்வாக உங்கள் விருப்பம் தான்.
சூப்பரான ஈசி டேஸ்டி தக்காளி சட்னி ரெடி.
இட்லி.தோசை,ஆப்பத்திற்கு சூப்பர் காம்பினேஷன்.

Sending this to

Gayathri s Walk Through Memory Lane - Month of Love @ Merry Tummy.