Tuesday, March 26, 2013

முருங்கைக்காய் சாம்பார்(அரைத்து விட்டது) / Drumstick Sambar


தேவையான பொருட்கள்;
முருங்கைக்காய் - 2 பெரியது
பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.

தாளிக்க :
நல்லெண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு

அரைக்க தேவையான பொருட்கள்;
மிளகாய் வற்றல் - 4 -6
கடலை பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
முழு மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
இவற்றை தனி த்தனியாக் லேசாக சிவற  வறுத்து எடுக்கவும்.
அத்துடன் 2 - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பருப்பை ஊற விட்டு மஞ்சப்பொடி தேவைக்கு தண்ணீர் சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வர விட்டு வேக வைத்து  தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேகவைக்கவும்.


 காய் வெந்த பின்பு அரைத்த விழுது, புளித்தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதி வரட்டும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
 ஒரு தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி.

சாம்பார் பொடி போட்டு செய்வதற்கும் இப்படி வறுத்து அரைத்து விட்டு செய்வதற்கும்  நிறைய வித்தியாசம் சுவையில் இருக்கும்.இதில் நான் வெங்காயம் தக்காளி,பூண்டு சேர்க்கவில்லை.நீங்களும் செய்து பாருங்க,சாதம்,இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும்.காரம்,புளி அவரவர் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்.
Sending this to Priya's CWS -DALS.

Gayathri's Walk Through Memory Lane @ Hema's Adugemane.

Sunday, March 24, 2013

கோவைக்காய் வதக்கல் / Tindora ( Ivy Gourd ) Fry


தேவையான பொருட்கள்;
கோவைக்காய் - கால் கிலோ
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1-2 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
கருவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கோவைக்காயை வட்டமாகவோ,நீளவாக்கிலோ நறுக்கி கொள்ளவும்.
கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு தேவைக்கு சிறிதளவு சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டுசுருங்க  வதங்க விடவும். ஐந்து நிமிடத்தில் நன்கு வதங்கி விடும்.தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான கோவைக்காய் வதக்கல் ரெடி.

Friday, March 22, 2013

சிக்கன் & மஷ்ரூம் இன் கேஷுனட் கிரேவி / Chicken & Mushroom in Cashew Nut Gravy


தேவையான பொருட்கள்;
போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
பட்டன் மஷ்ரூம் - 100 கிராம்
உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளலாம்.

அரைத்துக் கொள்ள :
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
டொமட்டோ ப்யூரி - 2 டேபிள்ஸ்பூன்
(ஒரு மீடியம் சைஸ் தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் நீக்கி சதைப் பகுதியை  நன்றாக கரைத்துக் கொள்ளவும்)
ஊறிய முந்திரி பருப்பு - 25 கிராம்
கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது,சில்லி பவுடர் - தலா ஒரு டீஸ்பூன்
ஃப்ரெஷ் கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மேற்கூறியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.


செய்முறை:
சிக்கனை நன்றாக அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய் விடவும். சூடாகவும் அரைத்த விழுதைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.


நன்கு வதங்கிய பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லி இலை, உலர் திராட்சை சேர்க்கவும்.
சிக்கனும் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

 ஒரிரு நிமிடம் கழித்து காளான் சேர்க்கவும்.
பிரட்டி விடவும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து,தேவைக்கு உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மூடி போட்டு குறைந்தது பத்து நிமிடமாவது வேக விடவும்.பாத்திரத்தின் அடியில் கிரேவி படியும். இடை இடையே பிரட்டி விட வேண்டும்.

சிக்கன் வெந்த பின்பு திறந்து சூடாகப் பரிமாறலாம்.
சுவையான சிக்கன் & மஷ்ரூம் இன் கேசுனட் கிரேவி ரெடி.
மீதியுள்ள நறுக்கிய மல்லி இலையை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

நாண்,சப்பாதி,பரோட்டா,கீ ரைஸ் உடன் பரிமாறலாம்.விஷேச நாட்களில் வித்தியாசமாக செய்து அசத்தலாம்.

Wednesday, March 20, 2013

கத்திரிக்காய் ரோஸ்ட் / சாப்ஸ் / Egg Plant / Brinjal Roast /Chops


தேவையான பொருட்கள்;
கத்திரிக்காய் - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 அரைத்து விரவி வைக்க:
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - அரை டீஸ்பூன் அல்லது சீரகம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி -சிறிய துண்டு
பொட்டுக்கடலை - ஒன்னரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.
 எல்லாப் பொருட்களையும் மிக்சியில் முதலில் நன்றாக திரித்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
 கத்திரிக்காயை கழுவி காம்பு நீக்கி இப்படி வட்டமாக கட் செய்து கொள்ளவும்.

 அரைத்த விழுதை உப்பு சரி பார்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து கத்திரிக்காயில் விரவி வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறட்டும்.
 ஒரு மணி நேரம் ஆன பின்பு இப்படி ஊறி தண்ணீர் விட ஆரம்பிக்கும்.
 நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கத்திரிக்காய் தூண்டுகளை போட்டு மீடியம் ப்லேமில் பொரிக்கவும்.
 லேசாக சிவற ஆரம்பிக்கவும் திருப்பி போடவும்.

 ஒரு பக்கம் சிவந்தவுடன் மறுபக்கமும் சிவந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.அடுப்பிலேயே சிறிது நேரம் இருக்கட்டும்.
எண்ணெய் குடிக்காது,பொட்டுக்கடலை சேர்ப்பதால் கத்திரிக்காய் ரோஸ்ட் ஒரு கோட்டிங்கோடு சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
சுவையான கத்திரிக்காய் ரோஸ்ட்/ /சாப்ஸ்  ரெடி.

எல்லாவகை சாதத்திற்கும் சூப்பர் காம்பினேஷன். பிரட்டி சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு,கறி,குழம்போடு அல்லது வெரைட்டி ரைஸ் உடன் கூட சூப்பராக இருக்கும்.பொறுமையாக செய்ய வேண்டும்,ஆனால் ருசி அபாரமாக இருக்கும்.அப்படியே எடுத்து எடுத்து சாப்பிடத் தூண்டும்.ஃப்ரியாக இருக்கும் பொழுது இப்படி வித்தியாசமாக செய்து அசத்துங்க..


Tuesday, March 19, 2013

மத்தி (சாளை)மீன் மசாலா / Sardine Fish Masala

தேவையான பொருட்கள்;
சாளை மீன் - 12 (மீடியம் சைஸ்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சிறிய பெரிய வெங்காயம் - 1 அல்லது 6 சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி -சிறிய துண்டு
புளி - சிறிது
பூண்டு -  2 - 3 பல்
மல்லி,கருவேப்பிலை சிறிது
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு.




செய்முறை:
மீன்,எண்ணெய்  தவிர அனைத்தையும்  சேர்த்து விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மீனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெயும் சேர்த்து விரவி வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறினால் டேஸ்ட் மிக அருமையாக இருக்கும்.
ஒரு நான்ஸ்டிக் ஃப்ரை பேனில் மீதியுள்ள 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.
சூடானதும் விரவி வைத்த மீனை போட்டு மூடவும்.மீடியம் ப்லேமில் இருக்கட்டும்,தண்ணீர் ஊறி வற்றி வரும்.கவனமாக திருப்பி போடவும்.மசாலா வாடை போய் லேசாக சிவற ஆரம்பிக்கவும் அடுப்பை அணைக்கவும்.இந்த முறையில் செய்யும் பொழுது இலகுவாக மீன் முள் தனியாக எடுத்து விட்டு சாப்பிட எளிதாக இருக்கும்.


சுவையான மத்தி (சாளை) மீன் மசாலா ரெடி.
குறைவான எண்ணெய் உபயோகித்து மசாலாவும் பிரட்டியது போல் இது அருமையாக இருக்கும்.எங்க வீட்டில் ரொம்ப பிடிச்சிருக்கு.உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்து பாருங்க.

குறிப்பு பகிர்வு : தளிகா. மிக்க நன்றி.

Monday, March 18, 2013

கூனி இறால் கொழுக்கட்டை / Kuuni Iraal Kozhukattai / Shrimp Kozhukattai

 நாங்கள் தூத்துக்குடியில் இருந்த சமயம் ஃப்ரெஷாக இந்த கூனி இறால் கிடைக்கும். தேங்காய்ப்பூ மாதிரி இனிப்பாக,பார்க்க  பால் நிறத்தில்  மணி மணியாக அழகாக இருக்கும்.இப்ப கிடைக்குதான்னு தெரியலை,அதனை முருங்கைக்கீரையோடு சமைத்திருக்கிறேன், கொழுக்கட்டையுடன் சேர்த்தும் செய்து பார்த்தேன்.தீடீரென்று அந்த நினைவு வந்தது.
என்னிடம் காய்ந்த கூனி இறால் இருந்தது. செய்து பார்த்தேன்,மணமாக அருமையாக இருந்தது. இந்த குறிப்பு செய்து ஃபைலில் இருந்தது.

ஃபேஸ் புக்கில் தற்செயலாக  Saute,fry n bake Cooking contest - பற்றி இந்த மார்ச் நான்காம் தேதி தெரிய வந்தது. மொத்தமே ஒரு வாரம் தான் போட்டிக்கான நாட்களே கொடுத்து இருந்தாங்க,ஒன்பதாம் தேதி கடைசி நாள், என்னிடம் மூன்று ரெசிப்பிக்கள் ரெடியாக இருந்தது.அந்த மூன்றையும் சும்மா பொழுது போக்காக அனுப்பி வைத்தேன். போட்டி பெரிய லெவலில் இருக்கும்,எனக்கெல்லாம் எங்கே பரிசு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் ஆச்சரியம், என்னோட மூன்று ரெசிப்பிக்களும் தேர்வாகி எனக்கு இரண்டாம் பரிசு அறிவித்திருந்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே.
போட்டியை நடத்திய திருமதி ஹஸீனா செய்யது (www.sautefrynbake.com)அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.தேர்வு செய்த செஃப் திரு.பாபு நடராஜன் ,ஹெட் செஃப்,ஹோட்டல் ராதா ரீஜெண்ட் ,சென்னை அவர்களுக்கும் மிக்க நன்றி.
மற்ற இரண்டு ரெசிப்பிக்களான பைன் ஆப்பிள் சிக்கன் கபாப், சிக்கன் &மஷ்ரூம் இன் கேஸூனட் கிரேவி அதனையும் விரைவில் பகிர்கிறேன்..


CHEFS WRITE UP ; 
All the three dishes are very innovative . Using pineapple with chicken for kabab , mushrooms along with chicken in cashewnut gravy and the KOONI eraal kozhukattai all seem very delicious . The step by step pictures were an added bonus to select these dishes .
Thanks a lot Chef.

இனி குறிப்பிற்குச் செல்வோம்.
தேவையான பொருட்கள் ;

வறுத்த சிவப்பரிசி மாவு ( புட்டு மாவு) - 200கிராம்
காய்ந்த கூனி இறால் - 50 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 100கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
நறுக்கிய கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
காய்ந்த கூனி இறாலை லேசாக வறுத்து மண் போக அலசி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காயவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்க்கவும்,வதக்கவும்,தக்காளி,நறுக்கிய பச்சை மிளகாய் மல்லி,கருவேப்பிலைசிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
வதங்கியதும், மஞ்சள்,மிள்காய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்,நன்கு கொதிக்கட்டும்.
ஒரு பவுலில் புட்டு மாவு எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் தேங்காய்த்துருவல் கலந்து கொள்ளவும்.
கொதி வந்த கூனி இறால் மசாலை சேர்த்து கிளறவும்.உப்பு சரி பார்க்கவும்.
கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் துணி விரித்து பிடித்த
கூனி இறால் கொழுக்கட்டைகளை 10- 15 நிமிடம் அவித்து எடுக்கவும்.
வெந்த பின்பு எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.சும்மா சாப்பிட்டாலே மணமாகஇருக்கும்.
தால்ச்சாவுடன் சாப்பிட்டால் செமையாக இருக்கும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஃபன் வகைகளுள் இதுவும் ஒன்று.
இதனை ஃப்ரெஷ் கூனி இறால் உபயோகித்தும் செய்யலாம்.

கூனி இறால் கிடைக்கும் சமயம் இந்த டிபனை செய்து நான் அசத்துவதுண்டு.

 

கூனி இறால் கொழுகட்டை ரெடி.தேங்காய் சட்னி, தால்ச்சாவுடன் பரிமாறவும்.உங்களுக்கு கூனி இறால் பிடித்தால் நீங்களும் செய்து பாருங்க.

Thursday, March 14, 2013

பச்சைப் பயறு உருளைக்கிழங்கு கறி / Green gram Potato Curry

 தேவையான பொருட்கள்;
வேக வைத்த முழு பாசிப்பயறு - ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் - 1
இஞ்சி,பூண்டு பொடியாக நறுக்கியது தலா ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
தக்காளி - நறுக்கியது 1
சர்க்கரை - 2 பின்ச்
உப்பு - தேவைக்கு.

தாளிக்க :
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

 பாசிப்பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைத்து, வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு நறுக்கி வைக்கவும்.இஞ்சி பூண்டு,பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,கருவேப்பிலை தாளிக்கவும்.நறுக்கிய,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.வதக்கவும்.
 உடன் தக்காளி உப்பு.சிறிது சர்க்கரை  சேர்த்து நன்கு வதக்கவும்.
 தக்காளி வதங்கிய பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.

 வேகவைத்த பச்சைப்பயறு சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.
 ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சேர வேகட்டும்.
 கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.

 சுவையான பச்சைப்பயறு உருளைக்கிழங்கு கறி ரெடி.

 உங்களுக்கு ஸ்டூ மாதிரி வேண்டுமென்றால் தேவைக்கு தேங்காய்ப்பால் சேர்த்து நுரை வரவும் அடுப்பை அணைக்கவும்.இது குறிப்பாக ஆப்பம்,தோசைக்கு சூப்பராக இருக்கும்.