Friday, January 31, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 12 - திருமதி சிவகாமசுந்தரி ஜெயசங்கர் / அவகாடோ டிப்/ கோயுகமோல் / Guest post / Avacado Dip / Guacamole

திருமதி சிவகாமசுந்தரி  கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் அறிமுகமான ஒரு நல்ல படிப்பாளி, தோட்டக் கலையில் முதுகலை பயின்றவர். எங்கள் பிரிவு வேளாண்மை என்றாலும் கல்லூரி விடுதியிலும் தோட்டக் கலைத்துறை செல்லும் பொழுதும் எதேச்சையாக அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். சுறு சுறுப்பாக சுத்தமாக பளிச்சென்று வலம் வந்த தோழி. கிட்டதட்ட கால் நூற்றாண்டு கழிந்தாலும் கல்லூரியில் பார்த்த அதே முகம்,  அதே தோற்றம் இன்றும் என்னை ஆச்சரியப் பட வைத்ததென்னவோ உண்மை தான்.


சிவாவிடமிருந்து ஜனவரி 8 ஆம் தேதி ஒரு இனிய வேளையில் ஃபேஸ்புக் பேஜில் ஒரு செய்தி, உன்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு ரெசிப்பி அனுப்ப விருப்பம் என்று. என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை, உடனே அனுப்பி வை என்று பதில் அனுப்பினேன். ஆனால் அவர் அனுப்பி பதிவு  தயார் செய்து பகிர முடிந்தது  இன்று தான்.


தோழி சிவகாமசுந்தரியின் சுய அறிமுகம்:

சொந்த ஊர் லால்குடி, திருச்சி மாவட்டம் என்றாலும் அவருடைய தந்தையின் பணியின் காரணமாக தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் வசித்தவர். அவரின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வாழ்க்கை தர்மபுரியில்.தாயாரின் பூர்வீகம் நெல்லை என்றாலும், அவரின் குடும்பம் தாயாரின் 10 வயதில் நாக்பூர்,  மஹாராஷ்டிராவிற்கு  புலம் பெயர்ந்து விட்டதாகச் சொல்கிறார். கணவரின் சொந்த ஊர் காரைக்குடி.
தற்காலம் முதல் கிட்டதட்ட 23 வருடங்களாக வடஅமெரிக்காவில் வசித்து வருகிறார். 12 வருடங்களாக கனடாவில்,  இயற்கை அன்னையின் உலக அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி அமையப்பெற்ற இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
அதற்கு முன்பு 10 வருடங்களாக ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்திருக்கிறார்.
 
கணவர் டாக்டர்.ஜெயசங்கர் அவரும் தோட்டக் கலைத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்றவர் .இரண்டு அழகிய மகள்கள் வர்ஷா ஜெயஸ்ரீ, தீக்‌ஷா சிவஸ்ரீ (ஜெய ,சிவா என்று தம்பதியினரின் பெயரையும் இணைத்து குழந்தைகளின் பெயரை தேர்வு செய்ததாக சந்தோஷமாக் குறிப்பிடுகிறார்).1991 ஆம் வருடம் திருமணமான பின்பு  தனது மாமியார் திருமதி பர்வதவர்தினி  அவர்கள் தான் சமையலில் தன் குரு என்கிறார்.  புகுந்த வீட்டார் இவருக்கு கல்வியில் உள்ள ஆர்வம் கண்டு  மேலும் ஊக்கம் கொடுத்ததாகச் சொல்கிறார்.

திருமணமான புதிதில் ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளராக நான்கு வருடம் பணிபுரிந்து பின்பு முதல் மகள் பிறந்த பின்பு மகிழ்ச்சியான இல்லத்தரசியாக சிலவருடம் கழிந்ததாகவும்,அந்த நேரம் கூட சும்மா இருக்காமல்  கணினி சம்பந்தமானவைகளையும்,
மருத்துவச் சொற்களை அகராதிப்படுத்துதல் போன்ற துறைகளில் இரவுக்கல்லூரியில் சேர்ந்து படித்து தேறியிருக்கிறார். அதன் பின்பு கனடா, அமெரிக்க வரி சம்பந்தப்பட்ட துறையில் விருப்பம் கொண்டு அதில் கற்றுத் தேறி இன்று அந்த துறையில் ( Tax Preparer) பணி புரிவதாகவும் தெரிவிக்கிறார். என்றாலும் இன்று வரை தோட்டக்கலையில் தான்  தனக்கு அதீத ஆர்வம் என்கிறார்.


நம்முடன் அழகிய படங்களைப் பகிர்ந்த சிவகாமசுந்தரியின் குடும்பத்தினருக்கு நம்  நல்வாழ்த்துக்கள்.

சாப்பாடு சுத்த சைவம் என்பதால் வீட்டில் சமைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் அமெரிக்க வாழ்கைக்கு தகுந்தபடி தன் சைவச் சமையலிலும் பல புதுமைகளை முயற்சி செய்ததாகவும் அதில் ஹிட்டான ரெசிப்பி, மாங்காய் இஞ்சி மோர் குழம்பு, செலரி கிரேவி, சிவப்பு லெட்டூஸ் கிரேவி( Swiss chard gravy) செர்ரியோகரா(cherry rice),பாதாம் ரைஸ்(Almond rice), ஓட்ஸ் கொழுக்கட்டை போன்ற  பல குறிப்புக்கள் என்று தெரிவிக்கிறார்.கணவர் கொடுக்கும் ஊக்கத்தினால் மேலைநாட்டு பழங்கள்,காய்கறிகளை உபயோகித்து பல குறிப்புக்கள் செய்து அசத்துவதாக தெரிவிக்கிறார்.

// உணவு எப்படியோ உணர்வுகள் அப்படியே
உணர்வுகள் எப்படியோ எண்ணங்கள்   அப்படியே
எண்ணங்கள்   எப்படியோ செயல்கள் அப்படியே
செயல்கள் எப்படியோ பலன்கள் அப்படியே //
என்ற அற்புதமான வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.
என்னைப் பற்றி அவரின் ஒரு சில வார்த்தைகள்;-
நானும் ஆசியாவும் 1985 - 1989 வரை கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள். சமீபத்தில் ஃபேஸ் புக் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டோம். ஆசியாவின் சமையல் வலைப்பூ பற்றி அறிந்து அதனை அவ்வப்போது பார்த்தும் வருகிறேன். சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஆசியா வேளான்மை படித்து விட்டு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுக் குறிப்புக்களை பகிர்வது கூட அருமையாகத்தான் இருக்கிறது.
அழகான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சிவா.

இங்கே இன்று சிவகாமசுந்தரி  நம்முடன் பகிரபோவது அவகாடோ பழத்தில் செய்யும் ஹெல்தியான டிப் அதாவது சட்னி போன்ற ஒரு குறிப்பு.

இந்த அவகோடா பழத்திற்கு என்று எந்த தனிச்சுவையும் இல்லை, அதனால் இதனை இனிப்பு அல்லது காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்த்து கலந்து தான் சாப்பிட முடியும். இந்தப் பழம் இதய ஆரோக்கியத்தை தூண்டக் கூடியது,  அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் (anti inflammatory and high in carotenoids)செயல் படக்கூடியது, நிறப்பசையை கொடுக்கக் கூடியது.

கோயுகமோல் / Guacamole : தேவையான பொருட்கள்;
(அவகாடோ நடுத்தரமாக கனிந்தது - 3 அல்லது 4 பழங்களில் இருந்து)
அவகாடோ மசித்த சதைப் பகுதி - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப் (சிவப்பு வெங்காயம்)
நறுக்கிய தக்காளி - 1 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 3 - 4 டேபிள்ஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
நறுக்கிய மல்லிக்கீரை - 3/4 - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 3 - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
அவகாடோ நடுத்தரமாக பழுத்ததை தேர்வு செய்து நன்கு அலசி நீள்வாக்கில் வெட்டவும். உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் ஸ்பூன் கொண்டு எடுக்கவும். அதனை மத்து கொண்டு மசித்துக் கொள்ளவும்.


தக்காளியும் நடுத்தரமாக பழுத்திருக்க வேண்டும், பழம் கெட்டியாக இருக்க வேண்டும், உள்ளே உள்ள விதைப்பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.கொத்தமல்லிக்கீரையை நன்கு மண் போக அலசி பொடியாக நறுக்கி எடுக்கவும்.மிளகாயையும்  பொடியாக நறுக்கி கொள்ளவும்.எலுமிச்சை ஜூஸ் எடுத்து வைக்கவும். எல்லாவற்றையும் இப்படி தயார் செய்து கொள்ளவும்.


அவகாடோ மசித்தது தவிர தயார் செய்த அனைத்துப் பொருட்களையும்  ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். அத்துடன் அவகாடோ மசித்ததை சேர்த்து கையாலோ அல்லது கரண்டி கொண்டோ கலந்து விடவும். உப்பு சரிபார்க்கவும்.காரம் புளிப்பு அவரவர் விருப்பம்.


சுவையான அவகாடோ டிப் ரெடி.

நீங்களும் இந்த ஆரோக்கியமான குறிப்பை செய்து பாருங்க. இதனை சப்பாத்தியில் அல்லது ப்ரெட்டில் சீஸ் உடன் தடவி சாண்ட்விச் போல் சாப்பிடலாம்.வேக வைத்த பாஸ்தா காய்கறியுடன் கலந்தும் சாப்பிடலாம். கனடாவில் இதனை சிப்ஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது பிரசித்தம். அடுப்பில்லாமல் செய்து எளிதில் அசத்தக் கூடிய  குறிப்பு இது.

டிப்ஸ்;-
இதனை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை கைபடாமல்  ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் கெடாமல் இருக்கும்.
தக்காளி,வெங்காயம் போன்றவற்றை கையாலேயே பொடியாக நறுக்க வேண்டும். ப்லெண்டரில் சாப் செய்து எடுத்தால்   நறுக்கென்ற தன்மை இருக்காது. சாப்பிடும் பொழுது நறுக்கென்று வாயில் அகப்பட்டால் சுவை அருமையாக இருக்கும்.
நீக்கப் பட்ட தக்காளியின் உட்புறப்பகுதியை ரசத்தில் பயன்படுத்தலாம்.

   Guacamole (goo-yuk-a-mo-lae)

Avacado cannot be eaten alone. It doesn’t have a taste of its own. It should be eaten either with salt, spice or with sugar. Avacado has wide range of health benefits: Promotes heart health, anti inflammatory and high in carotenoids.

The recipe for Guacamole (goo-yuk-a-mo-lae) is: 
Avocado Medium ripe but not over ripe-3-4, cut longitudinally and scoop out the pulp. Mash it nicely with a ladle or with a potato masher.

For each cup of mashed Avocado make this following ready.

Finely chopped onion (preferably red to give good pungency)- 1 cup

Finely chopped Tomato (take out the core, use only the rind)- 1 cup
Make sure use a ripe but firm Tomato.
Finely chopped Coriander leaves- 3/4th to1 cup

Finely chopped Green chilies- 3-4 tablespoon can be adjusted according to your preference.
Freshly squeezed lime juice – 3-4 tablespoon
Salt- as needed. 
 Mix everything except the avocado pulp nicely and add the avocado pulp , blend them well with hand or ladle. Taste to check for salt, sour and spice. If you want add more green chilies/salt/lime juice. THAT'S IT, no cooking needed. It can be a dip, or spread over bagle or eaten with chapati or smeared on bread and made as sandwich with cheese or mixed with cooked pasta and vegetable (rated the best) It stores well for a week or ten days.

Tip: Please chop the veggies by hand rather than with a food processor. It mashes too much and the “chunky” feeling is missed. Use the left over core of the tomato for other cooking like making rasam etc.

என்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு அருமையான பகிர்வினை அனுப்பி கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி, மிக்க மகிழ்ச்சி தோழி.

பகிர்வு முழுவதும் ஆங்கிலத்தில் அனுப்பப் பட்டிருந்தது, நான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

மீண்டும் அடுத்த வாரம் ஒரு அருமையான அசத்தலான பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். பார்வையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Wednesday, January 29, 2014

வாழைக்காய் மிளகு கறி / Plantain pepper curry

இந்த வாழைக்காய் மிளகு கறி செய்து சாப்பிட்டால் அசைவ உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். .அசைவம் சமைப்பது போல் இந்த வாழைக்காயை சமைத்தால் அதே ருசி கிட்டதட்ட கிடைக்கும். மீன் மட்டன் சாப்பிடாதவர்கள் இந்த வாழைக்காயை வைத்து  அதே போல் மசாலா கொடுத்து செய்து பார்க்கலாம்.உதாரணத்திற்கு இந்த ரெசிப்பி.


தேவையான பொருட்கள்;
வாழைக்காய் - 3
தாளிக்க :
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
கருவேப்பிலை - 2 இணுக்கு

அரைக்க:
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
பூண்டு - 4-6 பல்
பெரிய வெங்காயம் - 1
மிகச் சிறிய தக்காளி - 1

செய்முறை:
வாழைக்காயை கழுவிக் கொள்ளவும். நன்றாக தோல் சீவிக் கொள்ளவும் வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைக்கச் சொன்ன பொருட்கள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
முதலில் குக்கரில் எண்ணெய் விடவும். காய்ந்து வரும் பொழுது கிள்ளிய வற்றல் கருவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வாழைக்காய் சேர்க்கவும்.ருசிக்கு உப்பு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
அரைத்த விழுது சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். கலந்து விட்டு மூடவும். வெயிட் போட்டு 2 விசில் மீடியம் நெருப்பில் வைத்து அடுப்பை அணைக்கவும். நான் பாதி கப் தண்ணீர் மட்டுமே சேர்ததால் கொஞ்சம் கெட்டியாக இருந்தது.
ஆவியடங்கியவுடன் திறந்து வாழைக்காய் உடையாதவாறு பிரட்டி எடுத்து பரிமாறவும்.மிள்கு பூண்டு சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும்.நல்லதும் கூட.


சுவையான வாழைக்காய் மிளகு கறி ரெடி.
சூடான சோறு, பருப்பு தண்ணீர், முட்டைக் கோஸ் பொரியல்,அப்பளத்துடன் பரிமாறவும்.
என்னோட சின்ன வயதில் எனக்கு நல்ல நினைவிருக்கு, எங்க வீட்டில் ஆட்டு ஈரலுடன் இந்த வாழைக்காயை சேர்த்து செய்வார்கள்.ஆளுக்கு இரண்டு துண்டு ஈரல்,உடன் வாழைக்காய் துண்டுகள் என்று இருக்கும்.
நான் வெஜ் பிரியர்களுக்காக வெறும் வாழைக்காய் மட்டும் சேர்த்து செய்து உங்களுக்கு ஒரு வெஜ் காம்பினேஷனில் பரிமாறியிருக்கிறேன். இந்த வாழைக்காய் மிளகு கறி சாப்பிடும் பொழுது மிளகு கறி, ஈரல் கூட்டு சாப்பிட்ட திருப்தியிருக்கும்.


நீங்களும் செய்து ஒரு நாள் இந்த காம்பினேஷனில் அசத்துங்க.
காயத்ரி குக்ஸ்பாட்டில் Walk through memory lane Jan 2014 Event - டிற்கு இக்குறிப்பை அனுப்புகிறேன்.
அதில் நாம் சின்ன வயதில் ரசித்து சாப்பிட்ட உணவு வகைகளை நினைவு கூறச் சொன்னதால் எனக்கு இந்த ரெசிப்பியை அனுப்பத் தோன்றியது.ஆனால் வெஜ் சமையல் தான் அனுப்ப வேண்டும். அதனால் எனக்குப் பிடித்த இந்த வாழைக்காய் மிளகுக் கறியை செய்து அனுப்பியாச்சு.ரொம்ப முக்கியமான விஷயம் என்ன வென்றால் எனக்குப் பிடித்த மாதிரியே என் மகளுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. மறுநாள் சாப்பிடும் பொழுது மீதியிருந்த இந்தக் கறி தனக்குத்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.மிக சந்தோஷமாகயிருந்தது.
வாழைக்காய் கையில் பிசு பிசு என்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் தேய்த்துக் கொண்டு நறுக்குவது நல்லது.வெட்டி உடன் தாளித்து விடவும்,கருக்காமல் பார்க்க அழகாக இருக்கும்.


 Sending this to  Walk through memory lane - January 2014 @ Gayathri's Cookspot.

Tuesday, January 28, 2014

மிளகு கறி / பொரிச்ச கறி - Pepper mutton / Mutton Fry

எங்க ஊர் பக்கம் பொரிச்ச கறி, மிளகுக் கறி சூப்பராக இருக்கும். இதனுடன் கட்டிப் பருப்பு, ரசம், அப்பளம், சுடு சோறு அமர்க்களமாக இருக்கும். 
இனி ஈசியாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.இந்த வார தமிழர் சமையலுக்கு (TST Event) இந்தக் குறிப்பைத் தான் இணைக்கப் போகிறேன்.

பொரிச்ச கறி:
 இஞ்சி பூண்டு அரைக்கும் பொழுது அதனுடன் ஏலம்,பட்டை கிராம்பும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வது வழக்கம். கொஞ்சமாக அப்ப அப்ப அரைத்து எடுத்துக் கொள்வோம்.நானே நிறைய தடவை அம்மியில் இருந்து அரைத்துக் கொடுத்திருக்கிறேன்.இப்ப மிக்ஸி,ஃப்ரிட்ஜ் என்று வந்துவிட்டதால் இஞ்சி பூண்டு பேஸ்ட் தனி, கரம் மசாலா தனியாக பொடித்து வைத்துக் கொள்கிறோம்.

இந்த இரண்டு குறிப்பும் செய்ய இஞ்சி பூண்டு அரவை தேவை.
50 கிராம் இஞ்சி பூண்டிற்கு சிறிய 2 ஏலக்காய் 2 கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டையை முதலில் அம்மியில் நுணுக்கிக் கொண்டு அதனோடு தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி பூண்டை அம்மியில் வைத்து தட்டி விழுதாக அரைத்து எடுக்க வேண்டும். அன்றைய தேவைக்கு அன்று அரைத்து இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

பொரிச்ச கறி:

தேவையான பொருட்கள்;
மட்டன் அல்லது பீஃப் - கால் கிலோ
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் - 1 டீஸ்பூன்
விரும்பினால் - 1 டீஸ்பூன் தயிர்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை 1 இணுக்கு( விரும்பினால்)
உப்பு  -தேவைக்கு.
( இஞ்சி பூண்டு பேஸ்ட் தனியாகவும்,ஏலம் பட்டை கிராம்பு தூள் தனியாகவும் இருந்தால் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1பெரிய  பின்ச் கரம் மசாலா சேர்க்கவும்)

செய்முறை:

மட்டன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.அதனுடன் சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.விரும்பினால் 1 டீஸ்பூன் தயிரும் சேர்த்து நன்கு விரவி சிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் கால் கப் தண்ணீர் சேர்த்து 4- 5 விசில் வைத்து கறி வெந்து எடுக்கவும்.

 கறியில்  தண்ணீர் ஊறும்.கறி வெந்து இப்படியிருக்கும்
 தண்ணீர் வற்ற வைக்கவும்.
 ஒரு பேனில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்த கறியை போட்டு நெருப்பை சிம்மில் வைத்து பிரட்டவும்.


 அழகுக்கும் மணத்திற்கும் கருவேப்பிலை சேர்க்கலாம்.
 நன்கு பிரட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.

சுவையான பொரிச்ச கறி ரெடி.

அடுத்து பார்க்கப் போவது;-
மிளகு கறி:
மட்டன் - கால் கிலோ
நல்ல எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
அரைக்க:
மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சிறிய வெங்காயம் - 1
சிறிய தக்காளியில் பாதி
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரைக்க கொடுத்தவற்றை அரைத்து எடுக்கவும்.ஒரு சிலர் மிளகை சிறிது குறைத்துக் கொண்டு ஒரு சிறிய மிளகாய் வற்றலையும் உடன் வைத்து அரைப்பதுண்டு.
குக்கரில் எண்ணெய்  விடவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.பிரட்டவும். சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த கறியை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்க வேண்டும்.நன்கு பிரட்டி விடவும்.
அரைத்த மசால் சேர்க்கவும். பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் மீடியம் ப்லேமில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் திறந்து அடுப்பை திரும்ப பற்ற வைத்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து வரவும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான மிளகுக்கறி ரெடி.உப்பு அளவாய் சேர்க்கவும்.இல்லாவிடில் கடுத்த மாதிரி ஆகிவிடும்.


வெறும் சோறு கட்டிப் பருப்பு,ரசம் அப்பளத்துடன் பரிமாறவும்.
நாங்க பள்ளி செல்லும் காலங்களில் எங்களுக்கு பருப்பு சோறு, ரசம் சோறு அல்லது தயிர் சோற்றுடன் இந்தக் கறியும் இருக்கும்.
இது எங்க ஊர் செய்முறை, உங்க முறைப்படி மசாலா சேர்த்தும்  இந்த எளிய முறையில் செய்து பார்க்கலாம்.

அடுத்து இந்த மிளகுக்கறியை எப்படி வெஜ்ஜில் செய்து அசத்துவதுன்னு என் வெஜ் பிரியர்களுக்குச் சொல்லித்  தருகிறேன்.

Monday, January 27, 2014

சமையல் பொருட்கள் - பகுதி - 3 - தமிழ்,ஆங்கிலம் ,கன்னடம், தெலுங்கு காய்கறிகள் பெயர்கள் (Tamil,English, Kannadam, Telugu- Vegetables names)


நமக்குத் தெரிந்த காய்கறிகளின் (தமிழ்) பெயர்களை ஆங்கிலம், கன்னடம்,தெலுங்கில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறவர்கள் கீழ்கண்ட பகிர்வில் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்காக சிரமப் பட்டு டைப் செய்திருக்கிறேன்.  சமையல் பொருட்கள் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பகுதி வெளியிடப்பட்டு வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
English
Tamil
Kannada
Telugu
 Agathi
Amaranth leaves
Ash gourd
Brinjal
Beetroot
Broad beans
Basil
Bitter gourd
Capsicum
Cabbage
Cauliflower
Carrot
Celery
Cluster beans
Colocasia
Coriander leaves
Coconut
Chow- Chow
Cucumber
Drumstick
Fenugreek leaves
Fresh mint
Fresh beans
Green peas
Gogu
Ladies Finger
Lemon fruit
Mushroom
Onions
Plantain stem
Plantain flower
Potatoes
Pumpkin
Radish
Raw banana
Ridge gourd
Snake gourd
Soya beans
Spinach
Spring onion
Sundaikai dry
Sweet potato
Tapioca
Tomato
Turnip
Yam
(or) Elepahant yam

Agathi
Mulai keerai
Kalyana  Poosanikkaai
Kathirikkaai
Beetroot
Avaraikkai
Thulasi
Pawakkai
Kuda milagai
Muttai Kosu
Cauliflower
Carrot
Oma ilai
Kothavarangai
Seppankilangu
Kothamalli ilai
Thengai
Seemai kathirikkai
Vellirikkai
Murungai kai
Vendhaya ilai
Puthina ilai
Avaraikai
Pattani
Pulicha keerai
Vendaikkai
Yelumichampalam
Kalaan
Vengayam
Valai Thandu
Valai poo
Vurulai kilangu
Poosanikkai
Mullangai
Valaikkai
Peerkkangai
Pudalangai
Soya mochai
Pasalai keerai
Vengayathaal
Sundaikkai vatral
Sarakarai valli kilangu
Maravalli kilangu
Thakkali
Turnip
Senai Kilangu

Agathi  soppu
Dhantina  soppu
Bhele kumbahalakayi
Bhadhanekai
Beetroot
Hurulee kai
Thulasi
Hagara kai
Dhodda menesima kai
Khosu
Cauliflower
Carrot
Celery
Ghori  kai
Kasavina Ghedde
Kothambre
Thengina kai
Seeme Badhare kai
Sowthe kai
Nunge kai
Menthina soppu
Pudhina
Dhoda Hurule kai
Bathare
Hulee Soppu (Andra)
Bendekai
Nimbe Hannu
Naaye kode
Eerulli
Bhale Dhandu
Bhale hoova
Aalu gedde
Kumhala kai
Mullangi
Bhale kai
Heere kai
Hugala kai
Soya beans
Bacchala soppu
Eerullihu
Usthi kayi
Genusena Gedde
Maragenusu
Tomato
Turnip
Churna Gedde

Avesi
Thotakoora
Boodidha Gummidi kayi
Vankaya
Beetroot
Chikkudu  Kayi
Thulasi
Kakara kayi
Bengalaru mirapakayi
Cabbage
Cauliflower
Carrot
Vamaku
Goruchikkudi kayilu
Chema  dhumpa
Kothamera aku
Kobbari kayi
Seema vankaya
Dosakai
Munakkayi
Menthi koora
Pudinaku
Peda Chikkudulu
Batanalu
Gonkura
Bendakayalu
Nimma pandu
Kukka godugu
Yerra gaddalu
Arati thuvva/ Bondha
Arati poovu
Bangala dhumpa
Gummidi Kayi
Mullangi
Arati kayi
Beerakayi
Potlakayi
Soya beans
Pachali koora
Vulli kada
Ustha kaya
Silakkada dumpa
Karra pendalamu
Tamata
Turnip
Sure kandha

Source : Mrs.Mallika Bathrinath.

Friday, January 24, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 11- திருமதி சங்கீதா செந்தில் - சாத பக்கோடா / Guest Post - Rice Pakoda

திருமதி சங்கீதா செந்தில், இவங்க மெயில் செய்து என் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்த பொழுது மனது மிகவும் சந்தோஷப்பட்டது. அவங்களோட ஆர்வம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பதே உண்மை. இவங்களோட வலைப்பூ ஸ்னோஒயிட்சோனா (Snow White Sona) சென்று பார்க்க கிளிக்கவும். அசத்தலான  சுவையான குறிப்புகள்  இது தவிர கவிதை, ஓவியம், கோலம், கைவேலைப்பாடுகள் (கைவினைகள், காகித வேலைப்பாடு,பொம்மை வேலைப்பாடு,மெஹந்தி இன்னும் பல) பார்க்கப் பார்க்க  என் நேரம் போவது தெரியாமல் சில மணி நேரம் அவங்க வலைப்பூவிலேயே கழிந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மூன்று வருடமாக வலைப்பூவில் எழுதி வராங்க.சங்கீதாவை பின் தொடர்ந்து அவங்க பக்கம் போய் பார்க்கவும். அருமையான வலைப்பூ. நல்வாழ்த்துக்கள் சங்கீதா.

சங்கீதாவின் சுய அறிமுகம்:-

எனது பெயர் S.சங்கீதா.எனது கணவர் பெயர் செந்தில் காந்தி.
நாங்கள் காட்டுமன்னர்கோயில் அடுத்த மேலணிக்குழி கிராமத்தில் வசிக்கிறோம் .
எனது கணவர் Hindustan  Unilever distributor ஆக இருக்கிறார்.
எனக்கு சொந்தத்திலே திருமணம் நடந்ததால் நான் பிறந்த ,மற்றும் புகுந்த ஊர்  ஒரே ஊர் தான்.
திருமணத்திற்கு பிறகு தான் சமைக்க கூட கற்றுக்கொண்டேன் .(அதுவரை வெங்காயம் கூட நறுக்க தெரியாது )
சமையலில் எனது அனுபவம் 5 வருடங்கள் தான். எனக்கு 2 குழந்தைகள் பெரியவள் சோனா(profile pic ). 2 ஆம் வகுப்பு படிக்கிறாள்.
இரண்டாவது குழந்தை  நதிஷ். இப்போது 6 மாத குழந்தை.
சமையல் தவிர  கவிதைகள், கைவினைகள், கோலங்கள்,மெஹந்தி இவற்றில் விருப்பம் .
சங்கீதாவின் ப்ரஃபைல் படமாக மகள் சோனாவின் புகைப்படத்தை அனுப்பியிருக்காங்க, இந்த செல்லக் குட்டியை நட்புகள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவோம்.

என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஆச்சரியம், அவங்க என் வலைப்பூவிற்காக அனுப்பிய அசத்தலான கவிதை :

உங்களுக்கு ஒரு கவிதை இது எனது அன்பு பரிசு :-
கலைகளிலே சிறந்த
கலை சமையற்கலை 
அதை விளக்கிடவோ
இங்கேயுண்டு
ஆயிரம் வலை .

வலைகளிலே அசத்தும்வலை
அக்கா ஆசியாவின் வலை 
அதில் வகைவகையாய்
ருசிக்க உண்டு
ஆயிரம் சுவை .

அதை சுவைக்க எண்ணி
வழிதொடரும்,
வாசகரெல்லாம்
தேனாய் இனிக்கும்
பலாச்சுளை .

ஏற்ற இறக்கம்
ஏதுமின்றி,
எல்லோரையும் ஈர்க்கச்
செய்யும் வலைமலர்,
அது என்றும் வாடா மலர்...

உங்கள் பணி  மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அக்கா.
அசத்தலான கவிதை. மனமார்ந்த நன்றி. என்னுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.
இனி சமையல் பகிர்வு - சங்கீதாவின் சாத பக்கோடா 

திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டாங்களா ?  சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்கா?அட கவலைய விடுங்க ..... இப்போ மீந்து போன சாதம் கூட எளிதான சுவையான ஸ்நாக்ஸ் ஆ மாற்றலாம் ... ஆமாங்க சாத பகோடா விருந்தினர்களையும் கவர்ந்து விடும்.... இத எப்படி செய்வதுன்னு வாங்க பார்க்கலாம் .

தேவையான பொருட்கள் :-
சாதம் - 1 கப் 

வெங்காயம் - 1 ( பொடியாக  நறுக்கியது )

இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் - 1 சிறியது (பொடியாக நறுக்கியது )

மிளகாய் தூள் - காரத்துக்கு ஏற்ப 

கடலை மாவு - 2 ஸ்பூன் 

பஜ்ஜி மாவு- 2ஸ்பூன் 

கலர் பவுடர் - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது )

கருவேப்பிலை -சிறிதளவு  (நறுக்கியது )

செய்முறை:-

சாதத்தை  ஒரு பாத்திரத்தில் போட்டு  மசித்துக் கொள்ளவும் .

அதனுடன் ,வெங்காயம் ,இஞ்சி ,பச்சை மிளகாய் ,கடலை மாவு, பஜ்ஜி மாவு , கலர் பவுடர் , மிளகாய்த்தூள் ,உப்பு, கொத்தமல்லி ,கருவேப்பிள்ளை  எல்லாம் சேர்க்கவும்.

சேர்த்தவைகளை  நன்றாக பிசையவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும் (நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது )

பிசைந்தவற்றை  எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும் .


சுவையான சாத பக்கோடா ரெடி. 

எளிதாக செய்யக் கூடிய ருசியான குறிப்பு. நீங்களும் செய்து பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும்.


சில காணொளிகள் கூட பகிர்ந்திருக்காங்க அவங்க வலைப்பூவில் இக்குறிப்பை காணொளியாகக் காண இங்கே கிளிக்கவும்.

சங்கீதாவின் பல திறமைகள் அவங்க வலைப்பூவை ஆராய்ந்தாலே தெரிய வரும்.
இதோ நான் செய்த சாத பக்கோடாவின் படப் பகிர்வு, தெளிவாக படம் எடுப்பதற்குள் தட்டுக் காலி.

சங்கீதாவும்   டிப்ஸ் அனுப்பிவிட்டதால் இதோ உங்களுக்காக:

சங்கீதாவின் பயனுள்ள டிப்ஸ்:

அழகு ஆரோக்கியம் டிப்ஸ்:

குளிக்கும் வெந்நீரில் சிறிது வேப்பிலை போட்டு குளித்தால்,உடல் துர்நாற்றம் ,ஜுரம் ,சளி இவைகளுக்கு மிகவும் நல்லது. வேப்பிலை சிறந்த கிருமி நாசினி.

சளிக்கு இஞ்சி சாறு , தேன் கலந்து சாப்பிட சளி குறையும் .

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் ,தக்காளியை வட்டமாக வெட்டி அதை முகத்தில் தேய்த்து ,பத்து நிமிடங்கள் கழித்து கழுவலாம் . இதுபோல வாரம் ஒரு முறை செய்தால் முகம் பளிச் என்று இருக்கும்.

தலைக்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊரைவிட்டு அதை நன்றாக மிக்ஸ்யில் அரைத்து , தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இது இயற்கையான ஷாம்பூ .உடலுக்கு குளிர்ச்சி தரும் . பொடுகு ,முடி உதிர்தல் குறையும் .

இதே போல செம்பருத்தி இலையும் அரைத்து குளிக்கலாம் .

இது எல்லாமே நான் அடிக்கடி செய்வேன் .


சமையல் டிப்ஸ்;-

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது குக்கரில் சிறிது மஞ்சள் தூள் நெய் சேர்த்து வேக வைத்தால் ,சுவையும் ,மணமும் அபாரமாக இருக்கும்.

மீன் வறுவல் செய்யும் போது சிலவகை மீன்கள் கல்லில் ஒட்டும்.அதை தவிர்க்க ,மீன் துண்டுகளுடன் சிறிது கார்ன் மாவும்,அரிசி மாவும்  சேர்த்தால் ஒட்டாமல் வரும் .

சப்பாத்தி ,தோசைக்கு  சமையல் எண்ணைக்கு பதில் நல்லெண்ணெய் உபயோகிக்கலாம் . எல்லா வயதினருக்கும் மிகவும் நல்லது .

வாழைப்பூ கருக்காமல் இருக்க அதை  நறுக்கும்  போது அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அதில் வாழைப்பூவை  அரிந்து போடலாம். 

பச்சை மிளகாய் காம்பு பகுதியை நீக்கிவிட்டு பிறகு பிரிட்ஜ் ஜில் வைத்தால் சீக்கிரம் வீணாகாது.

உளுந்து வடை செய்யும் போது சிறிது வேகவைத்த உருளைகிழங்கை மசித்து வடை மாவுடன் கலந்து வடை செய்தால் நன்கு மொறு மொறு வென ருசியாக இருக்கும்.

குருமா செய்யும் போது தேங்காயுடன்  முந்திரி சேர்த்து அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.

வாழைப் பழங்களை பிற பழங்களுடன் சேர்த்து வைத்தால்  பிற பழங்கள் சீக்கிரம் பழுத்து விடும். எனவே வாழைபழத்தை தனியே வைப்பதே நல்லது.

கொத்த மல்லி ,புதினா இவைகளை அலுமினியம் பாயில் பேப்பர் சுற்றி பிரிட்ஜ்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

இது தவிர இன்னுமொரு டிப்ஸ் கடைசியாக:

வெள்ளி கொலுசுகள் சுத்தம் செய்ய அதை 1 மணி  நேரம் மோரில் ஊற வைத்து பழைய பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு ஷாம்பு தண்ணீர் கொண்டு தேய்த்தால் சுத்தமாகி விடும் .

மிக்க நன்றி சங்கீதா.  அசத்தலான பயனுள்ள டிப்ஸ் பகிர்வு. அருமையான குறிப்பு என்று உங்கள் சிறப்பு விருந்தினர் பகிர்வு  சூப்பராக இருந்தது, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

மீண்டும் நல்லதொரு அசத்தலான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.