Friday, January 17, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 10 - திருமதி ப்ரியா மோகன் - மீன் குழம்பு / Guest Post - Fish kuzhambu (Kongu Style)

திருமதி ப்ரியா மோகன், இவங்களை எனக்கு சில மாதங்களாகத் தெரியும். திரு. மோகன் அவர்களும் என் கணவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதால் ஏற்பட்ட  நட்பு. என் ப்ளாக் பார்த்து சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு குறிப்பு அனுப்பினாங்க.ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு சமயம் என் வீட்டிற்கு வந்திருந்த பொழுது நாங்கள் சேர்ந்து சமைத்தோம். ப்ரியாவை ரசம் வைக்கச் சொன்னேன், அந்த ரசம் குறிப்பை  நான் ஏற்கனவே என் ஆங்கில ப்ளாக்கில் பகிர்ந்திருக்கிறேன். பொதுவாக எனக்கு தொலை பேசும் பொழுது, பலர் சொல்லுங்க ஆசியா என்றும், சிலர் சொல்லுங்க அக்கா என்றும் அழைப்பது வழக்கம். ஆனால் ப்ரியா சொல்லுங்கம்மா என்று அழைக்கும் பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். அவங்ககிட்ட எனக்கு மிகவும் பிடித்தது தன்னடக்கம், நான்  பார்த்து மிகவும் வியந்ததுண்டு.

இதோ ப்ரியாவின் சுய அறிமுகம்:
நான் ப்ரியா, சொந்த ஊர் சங்ககிரி, படிப்பு எம்.எஸ்ஸி பயோடெக்னாலஜி.என் கணவர் மோகன் ராஜூ.திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. எனக்கு சமையலில் மிக்க ஆர்வம்,  நிறைய வெரைட்டீஸ்   சமைக்க ஆவல், அதனால் நட்புகள் மூலமும், ப்ளாக் மூலமும் கற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கு மீன் மற்றும் பிரியாணி வெரைட்டி ரொம்பவும் பிடிக்கும்.
என்னுடைய பொழுது போக்கு பெயிண்டிங், கைவேலைப்பாடுகள், புத்தகம் வாசிப்பது.

நான் அதிகமாக பார்க்கிற ப்ளாக் உங்களோடது தான், அதைப்பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்றால் நீங்க நெத்திலிமீன் சுத்தம் செய்கிற வீடியோவைப் பார்த்தவுடன் மிக்க ஆர்வமாகி மறுநாளே வாங்கி முயற்சி செய்தேன். உங்களோட ரெசிப்பீஸ் எல்லாம் வித்தியாசமாக இருக்கு.

 
ப்ரஃபைல் படமாக தம்பதியர் சகிதம் அவங்க அனுப்பிய புகைப்படம் இதோ ! இந்த இளம் தம்பதியினர் எல்லா வளமும் நலமும் பெற்று இறைவனின் கருணையோடு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வாங்கு வாழ நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம்.

ப்ரியா நவம்பர் மாதமே இந்தக் குறிப்பை அனுப்பிட்டாங்க, மெதுவாக போஸ்டிங் போடுங்கம்மா, அவசரமில்லை என்று சொன்னதால் நானும் தாமதித்து விட்டேன்.காத்திருப்பிற்கு மிக்க நன்றி.


இதோ உங்களுக்காக கொங்கு ஸ்டைல் மீன் குழம்பு:


தேவையான பொருட்கள்;-
விரும்பும் மீன் - அரைக்கிலோ
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
வெந்தயம் - அரைடீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கருவேப்பிலை - ஒரு இணுக்கு
தக்காளி  - 1
பூண்டு பல் - 10
புளி - எலுமிச்சை அளவு ( சுவைக்கு ஏற்ப)
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைத்துக் கொள்ள:-
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன் ( காரம் அவரவர் விருப்பம்)
மல்லித்தூள் -  1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
மீன் துண்டுகளை சுத்தம் செய்து நன்கு அலசி, மஞ்சள் உப்பு போட்டு மீண்டும் அலசி தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்த மசாலாப் பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து பட்டு போல் அரைத்துக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து அரைத்த மசால் தேவைக்கு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு வெடிக்க விடவும், வெந்தயம் சேர்க்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும். நன்கு வதங்க விடவும். தக்காளி சேர்க்கவும். நன்கு மசிந்து வர வேண்டும்.

அரைத்த மசால் புளியுடன் கலந்து வைத்ததை விடவும். தட்டிய பூண்டு சேர்க்கவும். நன்கு கொதித்து மசாலா  புளி வாடை மடங்க வேண்டும்.
மீனைச் சேர்த்து கொதி வரவும் அடுப்பை குறைத்து 5 நிமிடம் வைக்கவும். எண்ணெய் மேலெழும்பி வரும். அடுப்பை அணைக்கவும்.

சுவையான ஆரோக்கியமான கொங்கு ஸ்டைல் மீன் குழம்பு ரெடி. நீங்களும் செய்து பாருங்க, டேஸ்ட் சூப்பராக இருக்கும். குழம்பு கலர்  பார்க்கவே ருசிக்கத் தூண்டுது.
அசத்தலான பகிர்விற்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ப்ரியா.மனமார்ந்த நன்றி.
உங்கள் சமையலை ருசித்திருப்பதால் சொல்கிறேன்.நீங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து அசத்துங்க.

ப்ரியாவின் அழகு டிப்ஸ்:
வயது முதிர்ந்த முகத் தோற்றத்தை தவிர்க்க 2- 3 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு ஆப்பிள் பேஸ்ட்டை 15-20 நிமிடம் பூசி கழுவி வர முகம் பளிச்சென்று இருக்கும்.

கண்ணின் அடியில் காணப்படும் கருவளையம் போக தோல் சீவிய உருளைக்கிழங்கு துண்டை வைத்து வந்தால் நாள் பட சரியாகி விடும்.

முகத்தில் எண்ணெய் வடிவதை தவிர்க்க சரியளவு லெமன் ஜூஸ், உருளைக்கிழங்கு ஜூஸ் உடன் சிறிது தேன் கலந்து பூசி  10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கிச்சன்  டிப்ஸ்;
முட்டை விரைவில் அவித்து எடுக்க குக்கரில் ஒரு விசில் வைக்கலாம்.

பாத்திரத்தில் நாள்பட்ட கறையை  போக்க லெமன் ஜூஸ் அல்லது புளித் தண்ணீரை விட்டு 3 மணி நேரம் ஊற வைத்தால் கறை போயே போச்சு.

மிக்ஸி கப்பை சுத்தம் செய்ய டிஷ் வாஷ் லிக்விட்டை ஒரிரு சொட்டு போட்டு சிறிது தண்ணீருடன் 10 செகண்ட் ஓட விட்டு  கழுவினால் பளிச்சென்று சுத்தமாகிவிடும்.

இந்த டிப்ஸை நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்.

உங்கள் வலைப்பூவில் என் குறிப்பைப் பகிர வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றிமா.

அன்புடன்,
ப்ரியா மோகன்.

ப்ரியாவின் முறைப்படி நானும்  மீன் குழம்பு செய்து பார்த்தேன்,  சூப்பராக இருந்தது.என்னோட குழம்பு நிறம் அந்த அளவு வரலை.ஆனால் ப்ரியா குழம்பு நிறம் எப்படி கண்ணைப் பறிக்குது பாருங்க. நான் மிளகாய்த்தூள் குறைத்துப் போட்டேன்.அதனால் கூட இருக்கலாம்.
மீன் குழம்பு என்றால் எனக்கு ரொம்ப ஆர்வம், அதுவும் விதம் விதமாக முயற்சி செய்து பார்ப்பேன்.எனக்கு மட்டுமில்லே பலருக்கும் மீன் குழம்பு பிடிக்கும் என்று என்  ட்ராஃபிக்கை கவனிக்கும் பொழுது தெரிந்து கொண்டேன்.
இதோ  படப் பகிர்வு.

முக்கியப் பகிர்வு:
இந்த வருடம் எங்களுக்கு பொங்கல் விருந்து ப்ரியா வீட்டில், அமோகமாக இருந்தது. ப்ரியாவின் பாரம்பரிய சமையலும் அதன் சுவையும் இன்னும் நினைவை விட்டு அகலவில்லை. மிக்க மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்த்துக்கள்.

நாங்கள் ரசித்த ருசித்த ப்ரியாவின் கைமணத்தில் பொங்கல் விருந்து உங்கள் பார்வைக்காக:


மீண்டும் அசத்தலான அருமையான சிறப்பு விருந்தினரோடு அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி asiyaomar@gmail.com. இந்தப் பகுதி வெற்றிகரமாக செயல்படுவதற்கு முக்கியக் காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்பு தான். மீண்டும் மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

16 comments:

Saratha said...

பிரியாவின் மீன்குழம்பு அருமையாக இருக்கு.பொங்கல் ரெசிபி போட்டோவும் சூப்பர்!!

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... செய்முறை சூப்பர்...!

திருமதி ப்ரியா மோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Menaga sathia said...

மீன்குழம்பு கலரே சூப்பரா இருக்கு...ப்ரியாவிற்கு வாழ்த்துக்கள்!!

பொங்கல் விருந்து அசத்தலா இருக்கு!!

ஸாதிகா said...

சுவையான மீன் குழம்புடன் ஒரு அருமையான அறிமுக.வாழ்த்துகக்ள் தோழி

Snow White said...

அழகோ அழகு ... மீன் குழம்பு நல்லா இருக்கு ... வாழ்த்துக்கள் ப்ரியா....

Shama Nagarajan said...

delicious kuzhambu

சே. குமார் said...

மீன் குழம்பு அருமை...
தங்களுக்கும் சகோதரி பிரியாவுக்கும் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

சாரதா அக்கா உங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

தனபாலன் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

மேனகா வாங்க, வாழ்த்திற்கு மிக்க நன்றி.சமையல் மட்டும் சூப்பர் இல்லை. ப்ரியா படிப்பில் கோல்டு மெடலிஸ்ட் கூட.கருத்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஸாதிகா வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

Snow White வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ,மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஷாமா மிக்க நன்றி,மகிழ்ச்சி.

குமார் வாழ்த்திற்கு மகிழ்ச்சி. நன்றி.

Jaleela Kamal said...

எனக்கும் உணவு வகைகளில் மிகவும் பிடித்தது மீன் குழம்புதான், பிரியாவின் மீன் குழம்பு மிக அருமை கலரும் ஜோராக இருக்கு , டிப்ஸ்களும் அருமை.. பொங்கல் விருந்து சூப்ப்ர்

vanathy said...

Super recipe.

asha bhosle athira said...

ப்ரியாவுக்கு வாழ்த்துக்கள். சமையல் இப்போதான் பழகிவருகிறேன் என்கிறார் ஆனா சூப்பரா குழம்பு செய்து அசத்தி விட்டார். பார்க்கவே சுவையாக இருகு குழம்பு.

நல்ல சமையல் ரிப்ஸ் உம் தந்திருக்கிறார் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

திறம்பட இதை நடத்தும் ஆசியாவுக்கும் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ஜலீலா வாங்க,கருத்தீர்கு மிக்க நன்றி.

வானதி வாங்க,யப்பா நீண்ட நாட்கள் ஆகுது உங்களைப் பார்த்து.வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Asiya Omar said...

அதிரா வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.எப்ப உங்களோட இலங்கைக் குறிப்பை நீங்கள் அனுப்ப போறீங்க.அனைத்து இலங்கைத் தோழிகளின் குறிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி.