Friday, January 3, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 8- திருமதி ஹஸீனா செய்யது - ரெயின்போ கிண்ணத்தப்பம் / Guest Post - Rainbow Kinnathappam

 புத்தாண்டில் திருமதி ஹஸீனா செய்யது அவர்களை சிறப்பு விருந்தினராக அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி. இவங்க எனக்கு ஃபேஸ் புக் மூலமாக அறிமுகம் ஆனாங்க. அதன் பின்பு தான் அவர்களும் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. Saute,fry n bake  என்ற ஃபேஸ் புக் பக்கம்  மற்றும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்ட அவர்களுடைய வலைத் தளத்தில் சமையல் குறிப்புகள் பல  பகிர்ந்து வராங்க. அங்கு செல்ல  இங்கே கிளிக்கவும்.

ஹஸீனாவிற்கு என் சிறப்பு விருந்தினர் பக்கம் பகிர்வு குறித்து ஒரு முறை மெயில் செய்தேன். உடனே சிறிதும் தாமதிக்காமல் அனுப்பிய பகிர்வு தான் இது. அவர்கள் நடத்திய சமையல் போட்டியில் நான் இரண்டாம் இடம் பெற்றதோடு ரூ3500 பரிசுத் தொகை பெற்றதையும் இங்கு பெருமிதத்தோடு  குறிப்பிடுகிறேன்.
நான் சென்ற ஆகஸ்டில் ஊர் சென்றிருந்த சமயம் எனக்கு மெசேஜ் செய்து என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து உபசரித்த விதத்தை எவ்விதம் விவரிப்பது, அத்தனை கனிவான உபசரிப்பு மனதை மிகவும் நிறைவாக்கியது என்பதே உண்மை.


சமையலில் அதீத ஆர்வம், சமைக்க ஆரம்பித்தது அவரோட 14 வது வயதில், முதலில் மாமியாரிடம் கற்றுக் கொண்டதாகவும் தற்பொழுது தனக்கு அத்துறை வானமே எல்லை என்றும், எந்த சமையல் குறிப்பு அவரைக் கவர்கிறதோ அதனை முயற்சித்து பார்த்து தன்னுடைய பேஸ் புக் பக்கத்திலும் வலைதளத்திலும் பகிர்ந்து வருவதாகவும் சொல்கிறார்.ராவுத்தர் சமுதாயத்தின்   மறந்து போன நிலையில் உள்ள பாரம்பரிய உணவுகளை வெளிக் கொணர்வதில் தான் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கிறார்.

திருமதி ஹஸீனாவின் ரெயின்போ கிண்ணத்தப்பம் பற்றிய அவரின் கருத்து:-

இந்த கிண்ணத்தப்பம் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இனிப்பு பதார்த்தம். நாகர்கோவில், தேங்காய்ப் பட்டணம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் போன்ற ஊர்களில் வீடுகளில் செய்யும் ஒரு விஷேசமான ரெசிப்பி. தேங்காய்ப்பால் மணத்துடன் மென்மையாக இருக்கும். பொதுவாக இதனை வெள்ளை நிறத்தில் தான் செய்வது வழக்கம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்  லேயர் கேக்( Kuih Lapis) என்ற குறிப்பு பிரசித்தம். அதை செய்ய   வள்ளிக்கிழங்கு  மாவு, வாசனை இலை ( tapioca flour and pandan leaves) தேவை. இவை இரண்டும் சேர்க்காமல் பாரம்பரியமாக செய்யக் கூடிய  கிண்ணதப்பத்தை ஒரு மாற்று முறையில்  கலர் சேர்த்து லேயராக   உலகத் தரத்திற்கு இணையாக இதனை செய்து அசத்தியது தான் இதன் சிறப்பம்சம். இதனை ருசித்த பொழுது நான் செய்ய நினைத்த Kuih Lapis  செய்து பார்த்த திருப்தி எனக்கு கிடைத்தது. முயற்சி செய்த பொழுது எப்படி வருமோ என்ற தயக்கம் இருந்தது, ருசித்த பொழுது அதன் இனிய சுவை மனதை கொள்ளை கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஹஸீனா பகிர்வு முழுவதும் ஆங்கிலத்தில் தான் அனுப்பி இருந்தாங்க. நான் அதனை சுருக்கமாக தமிழ்படுத்தி பகிர்ந்திருக்கிறேன். 
இனி குறிப்பிற்கு செல்வோம்.

ரெயின்போ கிண்ணத்தப்பம் / Rainbow Kinnathappam :-


தேவையான பொருட்கள்;-
பச்சரிசி - 2 கப் அளவு
தேங்காய்ப் பால் -  மூன்றரை கப்
முட்டை - 3
உப்பு - ஒரு சிட்டிகை
சீனி - ஒன்றரை - 2 கப்
ரோஸ் நிற ஃபுட் கலர் - சில துளிகள் (நிறம் விருப்பம் போல்)
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 5.

செய்முறை:-
1. பச்சரிசியை தண்ணீரில் நன்கு அலசி 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய அரிசியை தேங்காய்ப்பால் சேர்த்து பட்டு போல் அரைத்து எடுக்கவும்.
3. அத்துடன் முட்டை, ஏலக்காய்,சீனி, உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து எடுக்கவும். அரைத்த மாவு வடிகட்டும் அளவு இளக்கமாக   தண்ணீர் போலவும், அரைபட்ட மாவு கட்டியில்லாமல்  சாஃப்டாக இருக்க வேண்டும்.
4. வடிகட்டிய கலவையை இரண்டு பாதியாக பிரிக்கவும். ஒன்றை வெள்ளை நிறமாகவும், மற்ற பாதியை பிடித்த நிறம் சில துளிக்ள் கலந்தும் வைக்கவும். ரோஸ் கலர் இங்கு உபயோகித்திருக்கிறேன்.
5. குக்கர் பாத்திரம் அல்லது கேக் செய்யும் ஏழு இன்ச் அளவு உள்ள பாத்திரம் ஒன்றை எண்ணெய் அல்லது நெய் தடவி தயார் செய்யவும்.
நெய் தடவி ரெடி செய்த பாத்திரத்தில் முதலில் 100 - 125 மில்லி வெள்ளை நிறமுள்ள அரைத்து வடிகட்டிய மாவுக் கலவையை ஊற்றவும். இந்தளவு ஊற்றினால் தான் மெல்லிய அடுக்காக வரும்.
6. இதனை அவிக்க இட்லி பாத்திரத்தில் தேவைக்கு  தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
7. மாவு ஊற்றிய பாத்திரத்தை வைத்து 5 நிமிடம் ஆவியில் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
8. ரோஸ் கலர் சேர்த்த மாவை வெந்த வெள்ளை நிற மாவுக் கலவை மீது ஊற்றவும்.திரும்பவும் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.
9. மீண்டும் இப்படியே இரண்டு மாவுக் கலவையும் தீரும் வரை ஒன்றின் மேல் ஒன்றாக விட்டு வேக வைத்து எடுக்கவும்.
10. கடைசியாக ஊற்றும் ரோஸ் கலர் கொஞ்சம் திக்கான கலராக இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
11. வெந்து வெளியே எடுத்த பின்பு வேக வைத்த பாத்திரம் நன்கு குளிர விடவும்.


பின்பு அதனை அப்படியே தலை கீழாக ஒரு தட்டில் வைத்து திருப்பவும். இப்படி அழகாக  இருக்கும். கவனமாக எண்ணெய்  தடவிய கத்தி கொண்டு கட் செய்து பரிமாறவும். கட் செய்த துண்டில் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவினால் பார்க்க பள பளப்பாக இருக்கும்.


சுவையான அழகான ரெயின்போ கிண்ணத்தப்பம் ரெடி. 

பார்க்கவே அத்தனை அழகாய் ருசியாய் தெரிகிறது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலும்  இருக்கிறது. ரொம்ப பக்குவமாய் செய்ய வேண்டும். நீங்களும் செய்து பாருங்க. நானும் செய்து பார்த்து ருசித்த பின்பு படத்தை இணைக்கிறேன்.

அருமையான வித்தியாசமான பகிர்வுக்கு மிக்க நன்றி ஹஸீனா. மிக்க மகிழ்ச்சி.

மீண்டும் அடுத்த வாரம் சிறப்பு விருந்தினர் பகிர்வில் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான விருந்தினரோடு அசத்தலான பாரம்பரியப்  பகிர்வோடு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
கருத்து தெரிவித்தும் வருகை புரிந்தும், குறிப்புகள் அனுப்பியும்  ஊக்கம் கொடுத்தும் வரும் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனவே சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் என்னை asiyaomar@gmail.com  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். குறிப்புகள் வரும் வரிசைப்படி தான் பகிர்ந்து வருகிறேன் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருமதி ஹஸீனா அவர்களுக்கும், தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

வாங்க தனபாலன் சார்.எப்பவும் போல் இந்தப் புத்தாண்டிலும் என் பகிர்வுக்கு முதன் முதலாய் கருத்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.வாழ்த்திற்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுக்கும் குடும்பதினருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இளமதி said...

சிரப்பு விருந்தினர் திருமதி ஹஸீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

அருமையான குறிப்பு ஆசியா!

கண்களைக் கவரும் கலர்! சூப்பர்!
பகிர்வினுக்கு மிக்க நன்றி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Shama Nagarajan said...

wow...semma super akka

Thenammai Lakshmanan said...

மிக அருமை ஆசியா..

பார்க்கவே சூப்பராக இருக்கு.. எனக்கு ஒரு துண்டு அனுப்புங்க.:)

வாழ்த்துக்கள் ஹசீனா.. :0

mubi jannath said...

பார்க்கவே ரொம்ப அழகா ஃபேன்சியா இருக்கு. இன்ஷா அல்லாஹ் முயற்சி செஞ்சு பார்க்கனும்.

Jaleela Kamal said...

கல்ர் ஃபுல்லான கிண்ணத்தப்பம் சூப்பர், ஹஸீனா செய்யதுக்கு வாழ்த்துக்கள்

Menaga sathia said...

கிண்ணத்தப்பம் சூப்பரா இருக்கு..ஹசீனா மேடத்திற்க்கு வாழ்த்துக்கள்!!

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும்போதே சாப்பிடணும்னு தோணுது.... :)

Asiya Omar said...

இளமதி வாங்க,வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

நன்றி ஷாமா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

தேனக்கா வாங்க, பிஸியாக இருந்தாலும் கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி அக்கா,வாழ்த்திற்கு நன்றி. எனக்கும் செய்து டேஸ்ட் செய்ய மிக்க ஆசை தான், செய்யும் பொழுது அனுப்பிட்டால் போச்சு.

Asiya Omar said...

முபி ஜன்னத் வாங்க,இந்தக் குறிப்பு நிச்சயம் பார்ப்பவர்கள் அனைவரையும் கவரும்.அனுப்பிய ஹஸீனாவிற்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.முயர்சி செய்து பாருங்க !

Asiya Omar said...

ஜலீலா வாங்க, வாழ்த்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மேனகா கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

சகோ.வெங்கட், ஹஸீனா எப்படி இத்தனை அழகாக செய்து அசத்தினாங்கன்னு நானும் பலமுறை படத்தை பார்த்து விட்டு மலைத்துப் போனேன்.கருத்திற்கு நன்றி.

கோமதி அரசு said...

சிறப்பு விருந்தினர் திருமதி. ஹஸீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கிண்ணத்தப்பம் பார்க்க அழகாய் இருக்கிறது.
முட்டை இல்லாமல் செய்து பார்க்க வேண்டும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

iniya pakirvu. Happy new year

Saratha said...

கிண்ணத்ப்பம் சூப்பராகவும்,நல்ல கலர்புல்லாகவும் இருக்க.திருமதி ஹஸீ னாவுக்கு வாழ்த்துக்கள்.அவங்களும் நெல்லைதான் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.சிறப்பு விருந்தினர் பகுதியை அசத்துங்க ஆசியா!!!

ADHI VENKAT said...

இனிப்பு ப்ரியையான எனக்கு படங்கள் பார்க்கும் போதே ஆசையாயிருக்கு.... முட்டை இல்லாமல் முயற்சி செய்து பார்க்கணும்...:)

ஹசீனா அவர்களுக்கு பாராட்டுகள்..

Asiya Omar said...

கோமதியக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸ்டார்ஜன் வாங்க, ரொம்ப நாள் ஆளை பார்க்கவே முடியலை.
கருத்திற்கும் வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

சாரதா அக்கா வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.கருத்திற்கு நன்றி.

ஆதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.பாராட்டிற்கு மகிழ்ச்சி.

Mrs.Mano Saminathan said...

வித்தியாசமான கிண்ண‌த்தப்பம் பார்க்கவே ஆவலைத்தூண்டுகிறது. அவசியம் செய்து பார்க்க வேன்டும். திருமதி ஹஸீனாவிற்கு பாராட்டுக்கள். ஆசியா! இந்த நல்ல முயற்சியை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பு வாழ்த்துக்களும்!

Asiya Omar said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி மனோ அக்கா.மிக்க மகிழ்ச்சி.