Monday, January 6, 2014

நெத்திலி மீன் எப்படி சுத்தம் செய்வது ? - வீடியோ இணைப்பு - How to clean nethili fish ? Video.

பொதுவாக சின்ன வகை மீன்களில் நிறைய சத்தும் ருசியும்  இருக்கும். ஆனால் கடைகளில் வாங்கும் பொழுது  சுத்தம் செய்து தரமாட்டாங்க, அதனை வாங்கினால் நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும். இதற்காகவே சிலர் அவற்றை வாங்குவதில்லை. நெத்திலி மீனில் முள்ளு இருக்குமே என்று சிலர் பயப்படுவதுண்டு. முள்ளை எடுத்து விட்டு சமைத்தால் பயமில்லாமல் சாப்பிடலாம். எப்படி நெத்திலி மீனின் முள்ளை எடுப்பது என்பது பற்றிய ஒரு சிறிய வீடியோ இணைப்பைத் தான் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.உருட்டு நெத்திலியில் ரொம்ப ஈசியாக முள்ளை தனியாக எடுத்து விடலாம்.



video

சுத்தம் செய்த மீனை நன்கு அலசி தண்ணீர் வடித்து விரும்பியபடி மசாலா சேர்த்து சிறிது ஊற விட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான்.டீப் ஃப்ரை செய்யும் பொழுது சிறிது மைதா மாவையும் மசாலாவில் ஊறிய மீனுடன் விரவி பொரிக்கும் பொழுது  மசாலா எண்ணெயில் தனியாக பிரிந்து வராது.ஃப்ரென்ச் ஃப்ரை மாதிரி சும்மாவே சாப்பிடலாம். இப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுங்க.
நான் இங்கே சிக்கன் -65 மசாலா சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, உப்பு,லெமன் ஜூஸ் தேவைக்கு சேர்த்து விரவி ஊற விட்டு அத்துடன் 2 ஸ்பூன் அளவு மைதாவும் சேர்த்து விரவி பொரித்திருக்கிறேன். ஆனால் பக்குவமாக பொரித்து பரிமாற வேண்டும். மசாலா உங்க விருப்பம் தான். அவ்வளவே !
ஏற்கனவே நெத்திலி மீன் ஃப்ரை இங்கே பகிர்ந்திருக்கேன்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறிது மைதா மாவை சேர்க்க வேண்டிய தகவலுக்கு நன்றி சகோதரி...

ஸாதிகா said...

தோழி ரொம்ப சுலபமாக சொல்லிக்கொடுத்து விட்டீர்கள்.துண்டு போட்ட வஞ்சிர மீனை மட்டுமே க்ளீன் பண்ணத்தெரிந்த எனக்கு மிக சுலபமான முரையில் கற்றுக்கொடுத்து விட்டீர்கள்.எங்கள் வீட்டில் முள்ளுடந்தான் சமைப்போம்.இந்த வீடியோவை காட்டவேண்டும்.நன்றி தோழி.

Meena Selvakumaran said...

superb video,beautifully cleaned,so tempting.

Saratha said...

ஆசியா உங்கள் வீடியோ பகிர்வு அருமை.நெத்திலிமீன் முள்ளை எடுக்க மிகவும் சுலபமாக சொல்லி கொடுத்தீட்டீங்க!நான் முள்ளோடு சமைத்து விட்டு பார்த்து சாப்பிடுங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.இனிமேல் நீங்கள் எடுத்த மாதிரி நானும் கற்றுக் கொள்ளலாம்.

chitrasundar said...

நெத்திலி மீன், கருவாடு இரண்டுமே ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் முள்ளோடுதான் சமைத்திருக்கிறோம். வீடியோ பகிர்வுக்கு நன்றிங்க.

Jaleela Kamal said...


பயனுள்ள பகிர்வு
நானும் இதே போல் தான் கிளீன் செய்வேன்.
இந்த மாதம் ஒரு கிலோ நெத்திலி மீன்,
வாரா வாரம் பல விதமாக செய்தாச்சு . கழுவும் போது யாராவது வீடியோ எடுத்தா நல்ல இருக்குமேன்னு. நினைத்து கொண்டே கழுவி கொண்டு இருந்தேன்.

சே. குமார் said...

ஆஹா... அருமையான பகிர்வு அக்கா...