Wednesday, January 15, 2014

இட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi

இட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்சமாக நான் இப்படி பொடித்து வைத்துக் கொள்வதுண்டு.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக பொடி செய்வேன்.இந்த முறை செய்த பொழுது.



இட்லி மிளகாய்ப் பொடி :-



 தேவையான பொருட்கள்;
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்( விரும்பினால்)
மிளகாய் வற்றல் -6-  8( காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு பல் - 4 (தோலுடன்)
கருவேப்பிலை - 2 இணுக்கு
பெருங்காயப் பொடி - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

 செய்முறை: 
ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருகாமல் மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்.பருப்பு வகைகளைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.வறுபட்டவுடன், பூண்டு, கருவேப்பிலை, எள்ளு, தேவைக்கு உப்பு போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸியில் பொடிக்கும் பொழுது பெருங்காயம் சேர்த்து பொடித்து பேப்பரில் தட்டி ஆற விட்டு எவ்ர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்து பயன் படுத்தவும்.
தேவைக்கு பொடியுடன்  நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறவும்.


 கருவேப்பிலைப்  பொடி:



தேவையான பொருட்கள்;
கருவேப்பிலை - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வற்றல் பருப்பு வகைகளை நன்கு சிவற வறுத்து எடுக்கவும்.அடுத்து கருவேப்பிலை மொறு மொறுப்பாக வறுத்த பின்பு மிளகை வறுத்து உப்பு பெருங்காயம் சேர்த்து ஒரு சேர வெதுப்பி ஆற விட்டு மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்.
பொடித்ததை மறக்காமல் பேப்பரில் தட்டி ஆற வைக்கவும்.
பின்பு பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இட்லி தோசையுடன் பொடியை நல்ல எண்ணெயில் குழைத்து பரிமாறவும்.


20 comments:

Saratha said...

இட்லி மிளகாய் பொடி- கறிவேப்பிலை பொடி இரண்டும் அப்படியே நம்ம ஊர் கைப்பக்குவத்தில் இருக்கிறது.நீங்கள் சொன்ன மாதிரி எங்கவீட்டிலும் சட்னி,சாம்பார் என்று வைத்தாலும் பொடி இருக்கா என்று தான் கேட்ப்பாங்க சூப்பர் ஆசியா!!!

priyasaki said...

அசத்தலான பொடிகள்.அருமையாதொரு
குறிப்பு.பகிர்விற்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பொடி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஏனோ என் பதிவின் ஞாபகமும் வந்தது.

http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !!

கோமதி அரசு said...

அருமையான இட்லி பொடி, கருவேப்பிலை பொடி.
ஆசியா.

Asiya Omar said...

சாரதா அக்கா, மிக்க நன்றி.

ப்ரிய்சகி மிக்க நன்றி.

Asiya Omar said...

தனபாலன் சார் கருத்திற்கு மிக்க நன்றி.

வை.கோ சார் உங்க வீட்டு பொடியை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி.காரசாரமாக வேண்டும் என்றால் அது மிகவும் பொருத்தம்.

Asiya Omar said...

கோமதிக்கா வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asha bhosle athira said...

சூப்பர் பொடி, பார்க்கவே அருமையா இருக்கு.

தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Menaga sathia said...

உங்க பொடி ரெசிபியை பார்த்ததும் இட்லிக்கு ஊற வைத்திருக்கேன்...சூப்பர்ர்!!

Menaga sathia said...

உங்க பொடி ரெசிபியை பார்த்ததும் இட்லிக்கு ஊற வைத்திருக்கேன்...சூப்பர்ர்!!

Savitha Ganesan said...

Amma vum indha podigalai araithu vaippargal. Naanga seekiram idha gaali seydhiduvom. super.

ADHI VENKAT said...

எங்க வீட்டில் ரோஷ்ணி எப்போதுமே பொடி தான் கேட்பாள்.. என்பதால் ஸ்டாக் எப்போதுமே இருக்கும்..:))

இரண்டு பொடிகளுமே உங்க கைப்பக்குவத்தில் அருமையாக உள்ளது..

Priya Anandakumar said...

Idli milagai podi super, very healhty karuvepillai podi akka...

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

ஸாதிகா said...

இட்லிப்பொடியில் சிலர் பூண்டு சேர்ப்பார்கள் தாம் நமக்குத்தான் பூண்டு வாசனை பிடிக்காதே.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :

அன்பின் பூ - இரண்டாம் நாள்

Manjula Muthuraman said...

Super Podi akka

Unknown said...

how to keep for this podi(Curry leaves ) for long days with the same aroma. kindly advice

Asiya Omar said...

Store it in an air tight container, and keep it in fridge. Whenever you need take little from fridge and use. simple:)!