Monday, January 20, 2014

மலபார் சிக்கன் பிரியாணி / Malabar Chicken Briyani

மலபார் சிக்கன் பிரியாணி செய்ய முக்கியமாக ஐந்து விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அரவை, சிக்கன் கிரேவி தயார் செய்தல், பிரியாணிக்கு ரைஸ் தயார் செய்வது, அலங்கரிக்க முந்திரி,திராட்சை,வெங்காயம் வறுத்து வைப்பது,பிரியாணியை தம் செய்வது. இனி எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
சிக்கன்  - 600 கிராம்
வெங்காயம் - 4 மீடியம் சைஸ்(200 கிராம்) 
தக்காளி - 2 (100 கிராம்)
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரை கப்
ப்ரெஷ் கெட்டி தயிர் - அரை கப் 
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பழம் ( மீடியம் சைஸ்)
இஞ்சி ,பூண்டு  - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
ஏலம்,பட்டை, கிராம்பு - தலா இரண்டு
முழு மிளகு - 10
பிரியாணி இலை - 1
மில்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 + 2  டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அலங்கரிக்க:
பெரிய வெங்காயம் சிவற வறுத்தது - 1 
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 15

பரிமாறும் அளவு - 4  நபர்கள்.

செய்முறை:
மேற் சொன்ன பொருட்களில் அரிசியை ஊற வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்,எலுமிச்சை ஜூஸ் எடுத்து வைக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை மிளகாய்  மிக்சியில் பர பரவென்று அரைத்து எடுத்து வைக்கவும். இந்த பிரியாணிக்கு சில்லி பவுடர் கிடையாது.
இனி பிரியாணி சிக்கன் கிரேவி செய்ய:
பிரியாணி செய்ய அடிகனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.

4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும் அரைத்த இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்கு பொன்னிறமாக வரவேண்டும்.நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.தக்காளி நன்கு மசிந்து வர வேண்டும்.


சிக்கனை சேர்க்கவும். மல்லித்தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும்.மசாலாவுடன் நன்கு சிக்கன் சேர்ந்து வெந்து வரும், தயிர் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.சிக்கன் வெந்து வரட்டும்.கிரேவியில் உப்பு சரிபார்க்கவும்.

இனி பிரியாணி ரைஸ் செய்ய:


2 டேபிள்ஸ்பூன் நெய் அடிகனமான பாத்திரத்தில் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,மிளகு,பிரியாணி இலை போட்டு சிம்மில் வைத்து வெடிக்க விட்டு ஊறிய அரிசியை சேர்த்து மெதுவாக வதக்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்னரை அளவு கொதி நீரை விடவும் .தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். தண்ணீர் வற்றி ரைஸ் பொல பொல வென்று வரும். அடுப்பை அணைக்கவும். ரைஸ் முக்கால் பதம் தான் வெந்திருக்கும்.



ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே எண்ணெயில் சிம்மில் வைத்து வெங்காயம் பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடித்து தனியாக வைக்கவும்.

இனி பிரியாணிக்கு தம் செய்ய வேண்டும்.
சிக்கன் ரெடி செய்ததில் பாதி சிக்கனை கிரேவியோடு தனியாக எடுத்து வைக்கவும்.

மீதியுள்ள கிரேவி மீது ரெடி செய்த பிரியாணி ரைஸ் பாதி சேர்க்கவும். அரை டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.அதன் மீது பாதி எடுத்து வைத்த சிக்கன் கிரேவி சேர்க்கவும்.மீண்டும் ரைஸ் சேர்க்கவும்.வறுத்து வைத்த வெங்காயம்,முந்திரி திராட்சை சேர்க்கவும்.பாதி டீஸ்பூன் ரோஸ் எசன்ஸை பரவலாக விடவும். அலுமினியம் ஃபாயில் அல்லது டவல் கொண்டு மூடவும். தம் செய்ய ஒரு பழைய தோசைக்கலம் அல்லது தவாவை வைக்கவும். மேலே ரெடி செய்த பிரியாணி  பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் மிகச் சிறிய தீயில் தம் செய்யவும்.அடுப்பை அணைக்கவும்.10 நிமிடம் கழித்து திறக்கவும்.
கலந்து பரிமாறவும்.
சுவையான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.



மலபார் சிக்கன் பிரியாணியுடன் அவித்த முட்டை,பப்படம், சம்மந்தி, ஊறுகாய் வைத்துப்  பரிமாறவும். இதே முறையில் தான் மலபார் மட்டன் பிரியாணியும்  சிக்கனுக்கு பதில் மட்டன் சேர்த்து வேக வைக்கவேண்டும்.

பிரியாணி செய்யும் பொழுது சிக்கன் ஃப்ரை செய்தும் பிரியாணி கிரேவியில் சேர்க்கலாம்.
மகன் வந்திருந்தப்போ செய்து கொடுத்தேன். உங்களுக்கும் மலபார் பிரியாணி செய்ய விருப்பம் என்றால் முயற்சி செய்து பாருங்க.அருமையாக இருக்கும்.

பின் குறிப்பு:
 பிக்னிக் செல்லும் பொழுது  இரயில், பஸ், காரிலேயே சாப்பிட பிரியாணி என்றால் போன்லெஸ் சிக்கன் உபயோகித்துச் செய்யலாம்.அப்படியே ஸ்பூனால் சாப்பிட வசதியாய் இருக்கும்.

19 comments:

ezhil said...

பார்க்கும்போதே அசத்தலா இருக்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை செய்திட வேண்டியதுதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... சூப்பராக இருக்கு...! படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி சகோதரி...

Menaga sathia said...

பார்க்கும்போதே செய்து சுவைக்கனும் போல இருக்கு,சூப்பரா இருக்கு!!

Saratha said...

உங்களுடைய பிரியாணி வகைகள் எல்லாமே அசத்தலாக இருக்கும்.இதுவும் விளக்க படங்களுடன் நல்ல அசத்தலாக இருக்கிறது.

Snow White said...

ungal birani vagagal ellame anakku pidikkum.. ithu mattum vithivilakka enna ... arumaiya seithu irukinga akka...

Premalatha Aravindhan said...

wow very tempting briyani...

vanathy said...

Super and rich.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஆசியா..

Shama Nagarajan said...

delicious tempting biriyani

Vimitha Anand said...

So tempting biryani

Vikis Kitchen said...

Delicious looking briyani. Looks very yummy.

Asiya Omar said...

எழில் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகிழ்ச்சி.

தனபாலன் சார் செய்து பார்க்க சொல்லுங்க.மகிழ்ச்சி.

Asiya Omar said...

மேனகா வாங்க,நிச்ச்யம் முயற்சி செய்து பாருங்க, உங்களுக்கு பிடிக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.

சாரதா நீங்கள் சூப்பராக சமைப்பீங்க, கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

ஸ்நோ ஒயிட், கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

ப்ரேமலதா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

வானதி வாங்க, மகிழ்ச்சி.

Asiya Omar said...

சாந்தி செய்து பாருங்க,கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

ஷாமா நன்றி,மகிழ்ச்சி.

விமிதா நன்றி,மகிழ்ச்சி.

விக்கி நன்றி,மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

ரொமப் ரிச்சான பிரியாணி.

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சே. குமார் said...

ஆஹா... சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரணும் போல இருக்கு அக்கா...

இதெல்லாம் நமக்கு செய்ய வராது...

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி சகோ.குமார்.:) !