Wednesday, January 22, 2014

நெத்திலி மீன் அவியல் / Nethili Fish Avial / Anchovies Aviyal

ரொம்ப நாளாய் இந்த நெத்திலி அவியல் செய்து பார்க்கனும்னு ஆசை. ஒரு வழியாய் செய்து அசத்தியாச்சு.சூப்பராக இருந்தது,வாயு தொந்திரவு உள்ளவர்கள் அளவாய் எடுத்துக் கொள்வது நல்லது. இனி எப்படி செய்தேன்னு சொல்லிடுறேன்.

தேவையான பொருட்கள்;-
நெத்திலி மீன் - கால் கிலோ
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய பூண்டு - 4 பல்
நறுக்கிய சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - 150 கிராம்
மாங்காய் - சிறியது 1 
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை - 2 இணுக்கு.

அரைத்துக் கொள்ள:
தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
நெத்திலி மீனின் தலை மற்றும் வயிற்றை சுத்தம் செய்து முள்ளை உருவி  நான்கு முறை  தண்ணீர் வைத்து அலசி  வடித்து வைக்கவும்.

 நறுக்க வேண்டியவைகளை நறுக்கி ரெடி செய்யவும்.

 மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், தேங்காய் சேர்த்து அரைத்து வைக்கவும். மிளகாய் வற்றல் நன்கு அரைபட நீள் வாக்கில் கத்திரி கொண்டு மெலிதாக நறுக்கி சேர்த்து அரைத்தால் ஈசியாக அரைபடும்.

 மண் சட்டி அல்லது கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும். நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.சிறிது வதங்க விடவும், மாங்காய் சேர்க்கவும்.சிறிது பிரட்டி விடவும்.
 மாங்காய் சேர்த்த சிறிது நேரத்தில் நெத்திலி மீன் சேர்க்கவும்.சிறிது உப்பு அளவாய் சேர்க்கவும். மீன் உடையாதவாறு பிரட்டி விடவும். மீனிலேயே தண்ணீர் ஊறும்.குலுக்கி விடவும்.
 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். பக்குவமாக பிரட்டி விடவும். கருவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும். சிறிது மூடி வைக்கவும்.
பின்பு எடுத்து சூடாக பரிமாறவும்.

சுவையான நெத்திலி மீன் அவியல் ரெடி.


இது சாதம் அல்லது ரொட்டியுடன் பக்க உணவாகப் பரிமாற அசத்தலாக இருக்கும். விருப்பப்பட்டால் நீங்களும் செய்து பாருங்க.


12 comments:

ஸாதிகா said...

மண் சட்டியில் நெத்திலிமீன் அவியல் சூப்பர்ப்

திண்டுக்கல் தனபாலன் said...

சுத்தம் செய்வது தான் பெரிய வேலை...! செய்முறை குறிப்பிற்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

Saratha said...

நெத்திலிமீன் அவியல் மண் சட்டியில் வைத்திருப்பது சூப்பர்!எனக்கும் மண்சட்டியில் வைப்பது மிகவும் பிடிக்கும்.

Snow White said...

akkaa... pakave sapidanum pola irukku .. super...

Vimitha Anand said...

Romba pudikkum. Naaku oorudu. super akka

சே. குமார் said...

ஆஹா.... புதுமை...
செய்து பார்க்கணும் அக்கா...
என்ன சுத்தம் செய்யத்தான் ஆள் வேண்டும்... ஹாஹ...

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. ரொம்பப் பிடிச்ச அயிட்டம். சுத்தம் செய்யற வேலைதான் சள்ளை பிடிச்சது :-)

Asiya Omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.

தனபாலன் சார் இது கொஞ்சம் ஈசியாக செய்து விடலாம் தான்.கருத்திற்கு நன்றி.

Asiya Omar said...

சாரதா அக்கா, நான் பல வருடங்களாக மண் சட்டி உபயோகித்து வருகிறேன், மண் சட்டியில் சமைத்தால் உணவு எளிதில் கெட்டுவிடுவதில்லை, அதன் தான் இதன் சிறப்பு அம்சமே.

Asiya Omar said...

ஸ்நோ ஒயிட் மிக்க நன்றி.

விமிதா மிக்க நன்றி.

Asiya Omar said...

பெண்கள் என்றால் சலிக்காமல் செய்து தருவார்கள்,சகோ.குமார். நீங்கள் செய்வது சிரமம் தான்.கருத்திற்கு நன்றி.

இல்லை சாந்தி ஒருமுறை செய்து பாருங்க, ஈசியாக இருக்கும்.வருகைக்கு மகிழ்ச்சி.