Wednesday, January 29, 2014

வாழைக்காய் மிளகு கறி / Plantain pepper curry

இந்த வாழைக்காய் மிளகு கறி செய்து சாப்பிட்டால் அசைவ உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். .அசைவம் சமைப்பது போல் இந்த வாழைக்காயை சமைத்தால் அதே ருசி கிட்டதட்ட கிடைக்கும். மீன் மட்டன் சாப்பிடாதவர்கள் இந்த வாழைக்காயை வைத்து  அதே போல் மசாலா கொடுத்து செய்து பார்க்கலாம்.உதாரணத்திற்கு இந்த ரெசிப்பி.


தேவையான பொருட்கள்;
வாழைக்காய் - 3
தாளிக்க :
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
கருவேப்பிலை - 2 இணுக்கு

அரைக்க:
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
பூண்டு - 4-6 பல்
பெரிய வெங்காயம் - 1
மிகச் சிறிய தக்காளி - 1

செய்முறை:
வாழைக்காயை கழுவிக் கொள்ளவும். நன்றாக தோல் சீவிக் கொள்ளவும் வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைக்கச் சொன்ன பொருட்கள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
முதலில் குக்கரில் எண்ணெய் விடவும். காய்ந்து வரும் பொழுது கிள்ளிய வற்றல் கருவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வாழைக்காய் சேர்க்கவும்.ருசிக்கு உப்பு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
அரைத்த விழுது சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். கலந்து விட்டு மூடவும். வெயிட் போட்டு 2 விசில் மீடியம் நெருப்பில் வைத்து அடுப்பை அணைக்கவும். நான் பாதி கப் தண்ணீர் மட்டுமே சேர்ததால் கொஞ்சம் கெட்டியாக இருந்தது.
ஆவியடங்கியவுடன் திறந்து வாழைக்காய் உடையாதவாறு பிரட்டி எடுத்து பரிமாறவும்.மிள்கு பூண்டு சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும்.நல்லதும் கூட.


சுவையான வாழைக்காய் மிளகு கறி ரெடி.
சூடான சோறு, பருப்பு தண்ணீர், முட்டைக் கோஸ் பொரியல்,அப்பளத்துடன் பரிமாறவும்.
என்னோட சின்ன வயதில் எனக்கு நல்ல நினைவிருக்கு, எங்க வீட்டில் ஆட்டு ஈரலுடன் இந்த வாழைக்காயை சேர்த்து செய்வார்கள்.ஆளுக்கு இரண்டு துண்டு ஈரல்,உடன் வாழைக்காய் துண்டுகள் என்று இருக்கும்.
நான் வெஜ் பிரியர்களுக்காக வெறும் வாழைக்காய் மட்டும் சேர்த்து செய்து உங்களுக்கு ஒரு வெஜ் காம்பினேஷனில் பரிமாறியிருக்கிறேன். இந்த வாழைக்காய் மிளகு கறி சாப்பிடும் பொழுது மிளகு கறி, ஈரல் கூட்டு சாப்பிட்ட திருப்தியிருக்கும்.


நீங்களும் செய்து ஒரு நாள் இந்த காம்பினேஷனில் அசத்துங்க.
காயத்ரி குக்ஸ்பாட்டில் Walk through memory lane Jan 2014 Event - டிற்கு இக்குறிப்பை அனுப்புகிறேன்.
அதில் நாம் சின்ன வயதில் ரசித்து சாப்பிட்ட உணவு வகைகளை நினைவு கூறச் சொன்னதால் எனக்கு இந்த ரெசிப்பியை அனுப்பத் தோன்றியது.ஆனால் வெஜ் சமையல் தான் அனுப்ப வேண்டும். அதனால் எனக்குப் பிடித்த இந்த வாழைக்காய் மிளகுக் கறியை செய்து அனுப்பியாச்சு.ரொம்ப முக்கியமான விஷயம் என்ன வென்றால் எனக்குப் பிடித்த மாதிரியே என் மகளுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. மறுநாள் சாப்பிடும் பொழுது மீதியிருந்த இந்தக் கறி தனக்குத்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.மிக சந்தோஷமாகயிருந்தது.
வாழைக்காய் கையில் பிசு பிசு என்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் தேய்த்துக் கொண்டு நறுக்குவது நல்லது.வெட்டி உடன் தாளித்து விடவும்,கருக்காமல் பார்க்க அழகாக இருக்கும்.


 Sending this to  Walk through memory lane - January 2014 @ Gayathri's Cookspot.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் எதை சாபிட்டாலும் அசைவ உணவு சாப்பிட்ட திருப்தி இருக்க வேண்டும் என்பதும் உண்மை...! ஹிஹி...

சூப்பரா இருக்கு சகோதரி...

வாழ்த்துக்கள்...

Saratha said...

வாழைக்காய் மிளகு கறி பார்ப்பதற்கு மட்டன் கிரேவி போல் இருக்கு.சூப்பர் பதிவு!!

Shama Nagarajan said...

semma fry akka..

vanathy said...

Looks yummy. I will try this one day.

Menaga sathia said...

மிளகு கறி பார்க்கவே சுவைக்க தோனுது,சூப்பர்ர்!!

வெங்கட் நாகராஜ் said...

வாழைக்காய் மிளகுக் கறி பார்க்கவே நல்லா இருக்கு....

Snow White said...

அடடா .. அருமை அக்கா .. இப்போவே சாப்பிட தூண்டுது .. பார்க்க மட்டன் மாதிரி இருக்கு ..

apsara-illam said...

வித்தியாசமாக இருக்கு அக்கா...
பார்க்கும்போது செய்யத் தோணுது.
சீக்கிரமே செய்துவிட்டு சொல்கிறேன்.

அப்சரா.

ஸாதிகா said...

வாவ்..இப்படி எல்லாம் வாழைக்காயை சமைக்கலாமா?