Wednesday, February 12, 2014

ஆந்திரா பெசரட்டு / Andhra Pesarattu


தேவையான பொருட்கள்;-
மாவு அரைப்பதற்கு:
முழு பச்சைப் பயறு - 200 கிராம்
பச்சரிசி - 2டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 - 4
இஞ்சி சிறிய துண்டு
சீரகம் -அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவைக்கு.

மேலே தூவ:
நறுக்கிய பெரிய வெங்காயம் - தேவைக்கு
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 அல்லது 2
சுட - எண்ணெய் தேவைக்கு 1-2 டேபிள்ஸ்பூன்.

9 மீடியம் சைஸ் தோசை வரும்.
பரிமாறும் அளவு - 3 நபர்கள்.

செய்முறை:
பச்சைப் பயறு அரிசியை குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
 அத்துடன், பச்சை மிளகாய், சீரகம்,இஞ்சி,கொத்தமல்லி இலை,வெங்காயம், உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவுடன் தேவைக்கு சிறிது தண்ணீர் கலந்து மாவை ரெடி செய்து வைக்கவும்.1 மணி நேரம் கழித்து தோசை போல் வார்த்து மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் தூவி எண்ணெய் சுற்றி விட்டு மொறு மொறுப்பாக சுட்டு பரிமாறவும்.
சைட் டிஷ் இல்லாமல் கூட சாப்பிடலாம். உங்க விருப்பம் தான்.

சுவையான பெசரட்டு ரெடி.
டேஸ்ட் அமோகம், சத்தானதும் கூட, உங்களுக்கு பச்சை பயறு பிடிக்கும் என்றால் செய்து பாருங்க.

10 comments:

ராமலக்ஷ்மி said...

அவ்வப்போது செய்வதுண்டு. அருமையான குறிப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆந்திரா பெசரட்டு செய்முறைக்கு நன்றி சகோதரி...

ஸாதிகா said...

வாவ்..சூப்பர்.இதற்கு வடை கறி செம காம்பினேஷன்.நீங்கள் சிக்கன் சேர்த்து சாப்பிட்டு இருக்கேங்க..:)

Shama Nagarajan said...

delicious akka

Snow White said...

அற்புதம் ...மிகவும் சத்தானது ,பச்சை பயறு உடலுக்கு குளிர்ச்சியும் கூட ... பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா ...

chikkus Kitchen said...

super delicious akka :) Very happy to follow you akka ..Will be happy if u follow me back

சே. குமார் said...

அருமையான புதுமையான குறிப்பு...
செய்து பார்க்கணும் அக்கா.

Asiya Omar said...

அன்புடன் வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

பல முறை உண்டதுண்டு......

செய்முறை பகிர்ந்தமைக்கு நன்றி.

Sivagamasundhari Sikamani said...

Very nice Asiya