Monday, February 17, 2014

அவாமத் / Awamat ( அரேபிய உணவு )

இது மத்திய கிழக்கு நாடுகளில்  செய்யப்படும் பிரசித்தமான ஒரு ஸ்நாக் அல்லது இனிப்பு உணவு எனலாம்.இது பார்க்க குலோப் ஜாமுன் போல் இருக்கும்,ஆனால செய்முறை வேறு, ஈசியாக செய்து விடலாம். எப்பவாவது செய்து சாப்பிடலாம்.
இங்கு வருடாவருடம் Shopping festival சமயம் Global village போகும் பொழுது இதனை வாங்கி ருசிக்க தவறுவதில்லை. இது அவசரமாக கிளிக்கிய படம்.
நீண்ட நாட்களாக செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், செய்து பார்த்தாச்சு, பாரம்பரியமாக  இதனை பரிமாறும் பொழுது மேலே பேரீச்சம் பழ சிரப் விட்டு தருகிறார்கள். டூத் பிக்கால் ஒவ்வொரு உருண்டையாக சாப்பிட அருமையாக இருக்கும்.

 

தேவையான பொருட்கள்;
மைதா மாவு - 2 கப்
கெட்டி தயிர் - 1கப்
ட்ரை ஈஸ்ட் - கால் டீஸ்பூன்
(ஈஸ்டை வெது வெதுப்பான நீரில் கரைத்துக் கொள்ளவும்)
சீனி - கால் டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்

சீனிப் பாகிற்கு:
முக்கால் கப் - சீனி
ஒன்னரை கப் - தண்ணீர்
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் மாவு,தயிர், உப்பு,சீனி,  ஈஸ்ட் எடுத்துக்  கொள்ளவும்.

ப்ளெண்டரில் அல்லது கையால் நன்கு கலந்து கொள்ளவும்.

திக் அடை மாவு போல் இருக்கும்.
அதனை அப்படியே 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
இப்படி பொங்கி வரும்.
அடுப்பில் சீனி , தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சீனிகரைந்தவுடன்  பதம் பார்த்து அடுப்பை அணைக்கவும்.லைம் ஜூஸ் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் தேவைக்கு விட்டு சூடாக்கவும்.

 எண்ணெய் சூடானவுடன் டீஸ்பூனால் மாவை அள்ளியோ அல்லது கையால் சிறிதோ எடுத்து போடவும்.புஸூன்னு பொங்கி வரும்.

பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
சீனிப்பாகில் போட்டு சிறிது ஊறவிட்டு எடுக்கவும். வெளிப்புறம் கிரிஸ்பாக இருக்கும்.உட்புறம்  ஊறிய பின்பு சாஃப்டாகி விடும்.


சீனிப்பாகில் இருந்து எடுத்து தட்டில் அல்லது கிண்ணத்தில் வைத்து பரிமாறவும். டூத் பிக் அல்லது போர்க் கொண்டு சாப்பிடலாம். சீனிப்பாகில் போடாமல் விரும்பினால் டேட் சிரப் டிப் செய்தும் சாப்பிடலாம்.

எளிமையாக செய்யக் கூடியது செய்து ஃப்ரிட்ஜில் வைத்து ஓவனில் லேசாக 10- 20  செகண்ட் சூடு செய்தும் சாப்பிடலாம்.

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உடனே செய்வதாக வீட்டில் இப்போது சொன்னார்கள்... பார்ப்போம் எப்படி வருகிறது என்று...! நன்றி சகோதரி...

ADHI VENKAT said...

வித்தியாசமாக அதே சமயம் எளிமையாகவும் இருக்கு...

chikkus Kitchen said...

Looks too good akka ..yummy :)

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை...

Radha Rani said...

நம் ஊர் தேன் மிட்டாய் ஞாபகம் வருது ஆசியா... படத்தை பார்க்கும் போதே நாவூருது.. குறிப்பு ரொம்ப சுலபமா இருக்கு. நாளை செய்து பார்க்கனும்.

Saratha said...

எளிமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கு.நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன்.

ஸாதிகா said...

அட அரேபிய உணவா!அருமையாக இருக்கு நினைத்த மாத்திரத்தில் சுலபமாக செய்து சுவைக்கலாம்.

ஸாதிகா said...

இதே போல் டம்ளிங் என்று ஒன்று சாப்பிட்ட நினைவு.இரண்டும் ஒன்றா?

Menaga sathia said...

வித்தியாசமா நல்லாயிருக்கு அக்கா...

Shamee S said...

நன்றாக இருக்கிறது..கண்டிப்பாக செய்து பார்ப்பேன் :)

Asiya Omar said...

தனபாலன் சார் உங்களுக்கு பிடிக்குமோ என்னவோ! இங்கு ஸ்டாலில் வாங்கி சாப்பிடும் பொழுது சூப்பராக இருக்கும்.

ஆதி வெங்கட் கருத்திற்கு நன்றி.

சிக்குஸ் கிச்சன் கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

சே.குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ராதா தேன்மிட்டாய் போல் தான். நன்றி கருத்திற்கு மகிழ்ச்சி.

சாரதா அக்கா, செய்து பாருங்க, அடடா இப்பத்தான் பயம் வருது. உங்களுக்கெல்லாம் பிடிக்கனுமேன்னு.

Asiya Omar said...

ஸாதிகா கருத்திற்கு நன்றி.எல்லாரும் டம்ப்லிங் மிக்ஸ்னு வாங்கி செய்வதாக சொல்வாங்க, நானும் ஒரு முறை வாங்கி செய்யலாம்னு இருக்கேன்.அது வேறு இது வேறு.

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

ஷமீ கருத்திற்கு மிக்க நன்றி.

Snow White said...

அடடா ... இப்போதே சாப்பிட தூண்டுதே ... அழகான குறிப்பு /..

Jaleela Kamal said...

இங்கு friday market போனால் இது போல் பெரிய சட்டி வைத்து அரபு பெண்கள் பொரித்து கொண்டு இருப்பார்கள், இதற்கு காரத்துக்கு சைட் டிஷ் மொள்கா பஜ்ஜி