Monday, February 10, 2014

கேரமல் சாக்லேட் சுவர்ள் கேக் / Caramel Chocolate Swirl Cake



தேவையான பொருட்கள்;
மைதா மாவு - 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 3/4  டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீனி (பவுடராக்கியது) - 150 கிராம்
பட்டர்  அல்லது மார்ஜரின் அல்லது எண்ணெய் - 100 அல்லது 150 கிராம்
முட்டை - 2  (150 கிராம்)
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் - அரை கப்
கேரமல் பீஸஸ் (துண்டுகள்) - கால் கப்
உப்பு - பின்ச்.

தயார் செய்ய - 20 நிமிடம்
பேக்கிங் நேரம் - 30-45 நிமிடம்
பரிமாறும் அளவு -6 - 8 நபர்கள்

செய்முறை:
முட்டை,பட்டரை ரூம் வெப்பநிலையில் முதலிலேயே ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைக்கவும்.மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.
சீனியை பொடித்துக் கொள்ளவும்.
முதலில் ரூம் வெப்பநிலையில் உள்ள வெண்ணெயை ஒரு பெரிய பவுலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும், அத்துடன்  பொடித்த சீனியை சேர்த்து நன்கு அடிக்க வேண்டும், அத்துடன் முட்டை இரண்டையும் ஒன்று ஒன்றாக சேர்த்து அடிக்கவும்,வெனிலா எசன்ஸ் சேர்க்கவும், கலந்து விடவும்.
பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்த மைதா மாவை சேர்க்கவும். நன்றாக பிரட்டி விடவும், பால், பின்ச் உப்பு சேர்க்கவும்.ஒரு போல் லேசாக அடிக்கவும்.


ரெடி செய்த கேக் மாவில் இருந்து அரைகப் கேக் மாவை எடுத்து அத்துடன் கோகோ பவுடரை சேர்க்கவும்.
 நன்கு கலந்து வைக்கவும்.

 ஏற்கனவே ரெடி செய்த மாவில் கேரமல் பீஸ் சேர்க்கவும்.
 நன்கு ஒரு போல் கலந்து விடவும்.
 இப்ப கேக் மாவு தயார் ஆகி விட்டது.
 பேக்கிங் ட்ரேயில் அல்லது பவுலில்  உருகிய பட்டர், சிறிது மைதா மாவை கோட் செய்து கொள்ளவும். அல்லது பட்டர் பேப்பர் போட்டும் மாவை ஊற்றலாம்.

மாவை ஒரு போல் பேக்கிங் பவுலில் விடவும்.

ரெடி செய்து வைத்த கோகோ பவுடர் கலந்த மாவை ஆங்காங்கே ஸ்பூனால் வைக்கவும்.

 பின்பு ஃபோர்க் கொண்டு கலந்து வட்டமடிக்கவும்.
ஓவனை 180 டிகிரி வெப்பநிலைக்கு முற்சூடு செய்யவும்.
 கேக் மாவு ஊற்றிய பேக்கிங் பவுல் அல்லது ட்ரேயை வைக்கவும்.மேலும் கீழும் வெப்பம் இருக்குமாறு செட் செய்யவும்.


 முப்பது நிமிடம் கழித்து இப்படி ஒரு போல் பொங்கி வரும்.
மீண்டும் பத்து நிமிடம் கழித்து பார்த்தால் சாக்லேட் கலரில் கேக் வெந்து காணப்படும். ஒரு மரக் குச்சி கொண்டு பேக்கிங் பவுலின் நடுவில் குத்திப் பார்த்தால் மாவு குச்சியில் ஒட்டாமல் வந்தால் வெந்ததை தெரிந்து கொள்ளலாம்.
கேக்கை நன்றாக ஆற விடவும்.


ஆறிய கேக்கை .ஒரு ட்ரேயில் மாற்றி தேவைக்கு கட் செய்து பரிமாறவும். இடையே நாம் சேர்த்த கேரமல் பீஸ் உருகி காணப்படும்.


சுவையான கேரமல் சாக்லேட் சுவர்ள் கேக் ரெடி. 

இதனை துண்டு செய்து சாக்லேட் கிரீம் தடவி கொடுக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அல்லது அப்படியேயும் பரிமாறலாம். கிரீம் ரெடி செய்து டெக்கரேட் செய்தும்  பரிமாறலாம்.


12 comments:

Saratha said...

கேரமல் சாக்லேட் சுவர்ள் கேக் சூப்பரா இருக்கு!எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி இருக்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு அழகாக செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

சே. குமார் said...

ஆஹா... அழகாக செய்திருக்கிறீர்கள்...
படங்களைப் பார்க்கும் போதே ருசிக்கச் சொல்கிறது...

அக்கா.... ஒரு பார்சல் அபுதாபிக்கு அனுப்பிடுங்க...

Jaleela Kamal said...

கேக் மிக அருமையாக இருக்க்கு..

Vimitha Anand said...

Cake supera irukku paakave...

Shama Nagarajan said...

super cake

chikkus Kitchen said...

cake supera vanthiruku Akka :)

Asiya Omar said...

சாரதா அக்கா, கருத்திற்கு நன்றி, அனுப்பிட்டாப் போச்சு.

தனபாலன் சார் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

குமார் கருத்திற்கு நன்றி.ஆஹா ! அபுதாபியில் இருந்து வந்த மக்களுக்காக செய்தது தான் இது.தெரிந்திருந்தால் அவங்க கிட்டேயே உங்களுக்கும் பார்சல் அனுப்பியிருப்பேன்.

Asiya Omar said...

ஜலீலா மிக்க நன்றி.

விமிதா மிக்க நன்றி.

ஷாமா மிக்க நன்றி.

சிக்குஸ் கிச்சன் மிக்க நன்றி.

Kalpana Sareesh said...

sooper cake..

Snow White said...

அக்கா கேக் சூப்பரோ சூப்பர் ....படமே அதன் சுவையை சொல்லுது ..

Faun Udhuman said...

Wow i tried..came so well