Monday, February 3, 2014

நண்டு மசாலா / Crab Masala


ஏற்கனவே நண்டு கிரேவி குறிப்பு தேங்காய் சேர்த்து செய்தது முன்பே விளக்கப் படத்தோடும் வீடியோ சமையலிலும் பகிர்ந்திருக்கிறேன். மகன் விடுமுறையில் வந்திருந்த பொழுது வேறு முறை செய்யலாமே என்று என் அக்கா மகளுக்கு போன் செய்து கேட்டேன். அவள் அக்கா செய்முறையை சொன்னவுடன் முயற்சி செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது.

தேவையான பொருட்கள்;-
சுத்தம் செய்து உடைத்த நண்டு மீடியம் சைஸ் - 8
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை ,மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
இனி வறுத்து அரைக்க தேவையானவை:
சீரகம் - அரைடீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய வெங்காயம் - 150 -250 கிராம்
நறுக்கிய தக்காளி - 250 கிராம்
மல்லி இலை - அரை கப்

 முதலில் முழு மல்லி,சீரகம்,மிளகு, சோம்பு சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்,அத்துடன் இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் தக்காளி, மல்லி இலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதுவே சட்னி போல் சூப்பராக இருந்தது.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விடவும். கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

சுத்தம் செய்து துண்டு செய்த நண்டு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.தேவைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி போட்டு வேக விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
நன்றாக வெந்த பின்பு அடுப்பை அணைக்கவும்.அழகுக்கு நறுக்கிய மல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
சுவையான நண்டு மசாலா ரெடி.
மசாலா எந்தளவு வேண்டுமோ அதற்கு தகுந்த படி சாமான் சேர்த்து செய்து கொள்ளவும்.
சப்பாத்தி, தோசை,ஆப்பம்,சூடான சாதத்திற்கு நன்றாக இருக்கும்.நண்டு உடைத்து சாப்பிடவே நேரம் சரியாகிடும், அதனால் உடன் ஆப்பமோ, சப்பாத்தியோ ப்ரெட் டோஸ்ட்டோ இரண்டு இருந்தால் போதும்.

8 comments:

Menaga sathia said...

சூப்பர்ர் டேஸ்ட்,நண்டு சமைத்தே பலமாதமாகிவிட்டது..

Shama Nagarajan said...

delicious tempting masala

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... ஆனால் உடம்பிற்கு சூடு தானே...?

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி மேனகா.

கருத்திற்கு மிக்க நன்றி ஷாமா.

தனபாலன் சார் கருத்திற்கு மிக்க நன்றி,இந்தக் குளிருக்கு நல்லது.

Vimitha Anand said...

Aiyo echil oorudu... super...

ezhil said...

எனக்கு ஓரளவிற்கு எல்லாச் சமையலும் செய்யத் தெரியும் ... ஆனால் நண்டு செய்முறை தெரியாததால் இதுவரை செய்து பார்த்ததேயில்லை...மிகவும் எளிதான செய்முறையாய் இருப்பதால் செய்திட வேண்டியதுதான் நன்றி..

Asiya Omar said...

விமிதா கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

எழில் கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

ஸாதிகா said...

சப்பாதிக்கு செம காம்பினேஷன்