Monday, February 24, 2014

காயல்பட்டினம் கீரைப்பொடி / Kayalpatnam Keerai Podi.

ஊரில் இருந்து கொண்டு வந்த மாசி நீண்ட நாட்கள் உபயோகிக்காமல் இருந்தது, இந்த கீரைப்பொடி பற்றி தெரிந்ததும் உடனே திரித்து வைத்தேன்.எங்கள் ஊரில் வெறும் வற்றல்,உப்பு சேர்த்து பொடித்து வைத்து தான் உபயோகிப்போம், இதில்  மல்லி,சோம்பு,வற்றல் என்று சேரும் பொழுது தனிமணமும் சுவையும் கிடைத்தது.

தேவையான பொருட்கள்;-

மாசி - 150 கிராம்

வத்தல்- 20 ( காரம் அவரவர் விருப்பம்)

கொத்தமல்லி- 25 கிராம்

பெருஞ்சீரகம் - 20 கிராம் 

உப்பு - சிறிது தேவைக்கு.





 இவையனைத்தையும் கறுத்துவிடாமல் வெறும் சட்டியில் வறுத்து கொள்ளவும்.



மாசியை முதலில் உரலில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

 பின்பு மாசி உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்  அல்லது உரலில் போட்டும் இடித்தும் வைக்கலாம்.




 அரைத்த பின்பு ஒரு பேப்பரில் தட்டி ஆற விடவும்.
 பின்பு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து தேவைக்கு ஒரிரு ஸ்பூன் பயன்படுத்தவும்.

இது ஆறுமாதம் வரை கொடாமல் இருக்கும். காற்று புகாத டப்பாவில் 
அடைத்து உபயோகிக்கவும். கீரை, பொரியல்(கேரட்,பீன்ஸ், பீட்ரூட், 
முட்டைக் கோஸ்,வெண்டைக்காய்,பீர்க்கங்காய்,முள்ளங்கி)  செய்யும் 
பொழுது  இதை கடைசியில் சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும்.
இது சேர்ப்பதால் நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.மாசி 
விரும்பாதோர் அதை சேர்க்காமல் இந்த பொடியை தயார் செய்து 
கொள்ளலாம். வடை, பக்கோடா, வாடா , பெட்டீஸ் செய்யும் பொழுதும் 
மணத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.மாசிச் சம்பல்,மாசியாணத்திற்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.
இந்த ரெசிப்பியை காயல்பட்டினம் சமையல் தளம் பார்த்து செய்தேன்.முகநூல் பக்கத்திலும் குறிப்புகள் பகிர்ந்து வராங்க.
இது தோழி செய்யது கதீஜாவின் குறிப்பு. மிக்க நன்றி.

பின் குறிப்பு:
மாசி என்று பலசரக்கு கடையில் கேட்டால் கிடைக்கும். 
மாசி பற்றி அறிய இங்கு கிளிக்கவும்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆறுமாதம் என்றால் செய்து பார்த்திட வேண்டியது தான்... நன்றி சகோதரி...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மாசி என்றால் மாசிக்காயா?

seyedkatheeja said...

Thanks asiya akka

faiza kader said...

காயல்பட்டினம் சமையல் முகநூலில் பார்த்து செய்தமைக்கு மிக்க நன்றி.. இந்த ரெசிப்பியினை உங்கள் ப்ளாகில் பகிர்ந்தமைக்கும் உங்களின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து பல குறிப்புகளை செய்துபார்த்து பகிர்ந்துக்கொள்ளவும்

Asiya Omar said...

கருத்திற்கு மிக்க நன்றி தனபலன் சார்.செய்து பாருங்க.

தேன்மதுரத் தமிழ் கிரேஸ் வருகைக்கு நன்றி.பின் குறிப்பில் தெரிவித்து இருக்கிறேன் பகிர்வில் கிளிக் செய்து பார்க்கவும்.

மிக்க நன்றி செய்யது கதீஜா. வருகைக்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

ரொம்ப நாள் கழித்து ஃபாயிஜா ப்ளாக்கிற்கு வந்திருக்கீங்க.நன்றி.

நாடோடி said...

"மாசி" புதுசா இருக்கு சகோ.. வீட்ல சொல்லுறேன், என்ன சொல்லுறாங்கனு பார்ப்போம்..

Saratha said...

நானும் காயல்பட்டினம் சமையல் முகநூலில் பார்த்திருக்கிறேன்.மாசித்தூள் பலசரக்கு கடையில் கிடைக்கும் என்றால் கண்டிப்பாக செய்வேன்.உங்கள் செய்முறையும் மிக அருமை.

Shama Nagarajan said...

delicious akka

ADHI VENKAT said...

நல்லவேளை! லின்க்கில் போய் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். மாசிக்காய் என்று நினைத்தேன். அது உருண்டையாக இருக்குமே என்று....:)) பலசரக்கு கடையில் கேட்டிருப்பேன்...:))))

Menaga sathia said...

மாசி பற்றி கேள்விபட்டிருக்கேன்,ஆனா இதுவரை பர்ர்த்ததுமில்லை சுவைத்ததும் இல்லை..செய்முறை நன்றாக இருக்கு.

Jaleela Kamal said...

nalla iurkku