Wednesday, February 19, 2014

பூசணி காரக்குழம்பு / மத்தங்கா புளின்கறி / Mathanga Pulinkari / Pumpkin Curry


கிட்டதட்ட இந்த புளிக்கறி  நாம வைக்கிற வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக் குழம்பு போல் தான் ருசி இருக்கும்.எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.


ஒரு முழு பூசணி இலவசமாக கிடைத்தது.  இந்த வாரம் பூசணி வாரம் கொண்டாடலாம்னு முடிவு செய்தாச்சு. நீங்களும் விரும்பினால் இந்த பூசணிக் கறியை செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;-
நறுக்கிய பூசணி துண்டுகள் - 2 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு , வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயம் - 2 பின்ச்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.

வறுத்து அரைக்க:
4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல்.

செய்முறை:
பூசணிக்காயை கழுவி தோல் சீவி துண்டாக்கி விதை எடுத்து தேவைக்கு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.புளியை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.

தேங்காயை சிவற வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விடவும்,கடுகு வெந்தயம்,வற்றல் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பெருங்காயப் பொடி சேர்க்கவும்.நறுக்கிய பூசணிக்காயை போட்டு வதக்கவும்.
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்.பிரட்டவும்.ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வெந்து வரும் பொழுது உப்பு,புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதித்து புளி வாடை மடங்க வேண்டும்.அரைத்த தேங்காய் சேர்க்கவும். கலந்து விட்டு கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும். எண்ணெய் மேலே வரும் .அடுப்பை அணைக்கவும்.


சுவையான மத்தங்கா புளின்கறி ரெடி.

சூடான சாதம் ,கீரைப் பொரியல் , அப்பளத்துடன் பரிமாறவும்.


Sending this to Gayathri's Walk through memory lane happening @ Motions and Emotions.

14 comments:

Saratha said...

பூசணி காரக்குழம்பு செய்முறை அருமை.பூசணி வாரம் சிறக்க வாழ்த்துக்கள்!!

ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Manjubashini Sampathkumar said...

வீட்டில் பூசணிக்கா கொண்டு வந்து வெச்சிட்டாரே. சாம்பார் தவிர அதில் வேற செய்ய தெரியாது எனக்கு. ஆனால் அம்மா திடிர்னு ஒரு நாள் செம்மையா இதில் கீர் செய்து அசத்தினாங்க. ஆனா வேற என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப இதோ இது கிடைச்சதுப்பா.. செஞ்சிடறேன் நாளைக்கே :)

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

ஸாதிகா said...

பூஸணி வாரம்...ஹா..ஹா.ஆசியா ஒரே பூசணி சமையல் என்ரால் வீட்டையா கோச்சுக்க மாட்டாரா?

ஸாதிகா said...

வித்தியாசமான ரெஸிப்பிதான்.பூசணிக்காயே வாங்கத்தோன்றாது.உங்கள் பகிர்வைப்பார்த்ததும் மார்கெட்டில் ஒரு துண்டு வாங்கி வர சொல்லி இருக்கிறேன்.

Asiya Omar said...

உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சாரதா அக்கா.

ரூபன் தகவல் தெரிவிப்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

மஞ்சுபாஷிணி வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி. நானும் கீர் செய்து முன்பே என் ஆங்கில ப்ளாக்கில் பகிர்ந்திருக்கேன்.இன்றும் சிறிய மாறுதலுடன் மீண்டும் கீர் செய்து படங்கள் ரெடியாக இருக்கிறது.

இந்தக்குழம்பு செய்து பாருங்க.பிடிக்கும்.

Asiya Omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.
செய்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பூசணிக்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது... உங்கள் செய்முறைப்படி செய்து பார்த்து விடுகிறோம்...

அதிக இலவசங்கள் கிடைத்தால் இங்கே அனுப்பி விடுங்கள்... ஹிஹி...

ADHI VENKAT said...

பூசணி வாரம்... அசத்துங்க...:))

புளிக்கறி வித்தியாசமா இருக்கு.. இதை குழம்பாக இல்லாமல் அம்மா பொரியலாக செய்வார்.

பரங்கிக்காயில் தொக்கு செய்யலாமே.. மாங்காய் தொக்கு போல்..

http://www.kovai2delhi.blogspot.in/2011/05/blog-post_25.html

Menaga sathia said...

பூசணி காரகுழம்பு அசத்தலா இருக்கு..புளிப்பு,இனிப்பு,காரம் என சுவை துக்கலா இருக்குமே...

Mahi said...

அரசாணிக்காயில புளிக்குழம்பா? பார்க்கவே சூப்பரா இருக்கே!

Snow White said...

பூசணி இது வரை செய்தது இல்லை .. அருமையான குறிப்பு அக்கா . இனி பூசணிக்காய் கிடைத்தால் ,செய்து விட வேண்டியது தான் ...நன்றி அக்கா

Shama Nagarajan said...

delicious akka