Thursday, February 20, 2014

மஞ்சள் பூசணி கீர் & ஹல்வா / Pumpkin Kheer & Halwa ( 2 in 1)


தேவையான பொருட்கள்;
மஞ்சள் பூசணி துருவியது - 2 கப்
பால் - கால் - அரை லிட்டர்
நெய் - 2 மேஜைக்கரண்டி அல்லது விருப்பம் போல்
பாதாம்,முந்திரி, பிஸ்தா - நறுக்கியது தலா 1 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் - 10
சாஃப்ரான் - பின்ச்
ஏலக்காய் பவுடர் - கால் டீஸ்பூன்
ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் - 200 கிராம்
அல்லது சீனி தேவைக்கு.

செய்முறை:
நல்ல நிறமான மஞ்சள் பூசணியை தோல் சீவி அலசி துண்டு செய்து துருவிக் கொள்ளவும்.


தோல் நீக்கிய  பாதான்பிஸ்தா முந்திரி பருப்பை சிறிதாக நறுக்கி வைக்கவும். சாஃப்ரானை சூடு நீரில் கரைத்து வைக்கவும்.


 ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு  துருவிய பூசணியை நன்கு வதக்கவும்.பாதி வெந்து விடும்.

 நன்கு வதங்கியவுடன் ஏலக்காய் பொடி காய்ச்சிய பால் சேர்க்கவும்.
 அத்துடன் நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்க்கவும்.அந்த பாலிலேயே சிறிது வேக வேண்டும்.


 பால் வற்றி பூசணி மற்றும் நட்ஸ் வெந்து வரும்.

ஸ்வீட்டெண்ட்  கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும். அல்லது சீனி கூட தேவைக்கு சேர்க்கலாம்.


சாஃப்ரான் கரைசல் சேர்க்கவும்.சாஃப்ரான் சேர்ப்பதால் நல்ல நிறமும் மணமும் கிடைக்கும்.

 நெய் சேர்க்கவும்.விரும்பினால் சிறிது நெய்யில் கிஸ்மிஸ் வறுத்து மேலே தூவி அலங்கரிக்கவும்.
இதை இப்படியே ஊற்றினால் பூசணி கீர். உங்களுக்கு இன்னும் லூசாக வேண்டும் என்றால் காய்ச்சிய பால் அல்லது கொதி நீர் சேர்த்துக் கொள்ளலாம்.


சுவையான பூசணி கீர் ரெடி.
அப்படியே ஒரு பவுலில் ஊற்றி பரிமாறவும்.
தேவைக்கு சின்னக் கிண்ணங்களில் ஸ்பூன் போட்டும் பரிமாறலாம்.

அதனை அப்படியே வற்ற வைத்து கிண்டி எடுத்தால் பூசணி ஹல்வா.
செமையாக இருக்கும்.


நெய் உங்கள் விருப்பம் தான்.


சுவையான பூசணி ஹல்வா ரெடி.
நீங்களும் செய்து பாருங்க.பிரியாணி செய்யும் பொழுது இனிப்பிற்கு இந்த அல்வாவோ அல்லது கீரோ செய்யலாம்.

முக்கியக் குறிப்பு:
கீர் என்றால் பால் அரை லிட்டர் அல்லது கொஞ்சம் அதிகமாகக் கூட சேர்க்கலாம். ஹல்வா போல் செய்ய பால் கால் லிட்டர் குறைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் கொஞ்சம் பால் கோவா டேஸ்ட் வந்து விடும்.
நான் இங்கு 2 இன் 1 ஆக செய்து காட்டியிருக்கிறேன்.பிடித்திருந்தால் செய்து பாருங்க.

என்னுடைய ஆங்கில ப்ளாக்கில் 
Pumpkin Kheer,
Pumpkin Poriyal,
Pumpkin soup
Pumpkin Pulao

இன்னும் பல மஞ்சள் பூசணி குறிப்புக்கள்  (கிளிக்கவும்)

மத்தங்கா புளின்கறி
மஞ்சள் பூசணி பொரியல்
மஞ்சள் பூசணி கறி
எரிசேரி - மஞ்சள் பூசணி கூட்டு

Sending this to Gayathri's Walk through memory lane happening @ Motions and Emotions.


11 comments:

Jaleela Kamal said...

மஞ்சள் வாரமா? பூசனிகா குறிப்பா போட்டு அசத்துறீங்க, மிக அருமை
இந்த பூசனி ஹ்ல்வா போன ஈதுக்கு நானும் செய்தேன் சுவை இன்னும் நாவில் நிற்கிறது.

Jaleela Kamal said...

பூசணி கீரும் ரொம்ப நல்ல இருக்கு

Saratha said...

ஒரு முழு பூசணியில் எத்தனை விதமான குறிப்பு? நான் உங்கள் அடுத்த குறிப்பு அல்வாதான் என்று நினைத்தேன்.நான் நினைத்ததை நீங்க செய்து அசத்திஇருக்கீங்க!அல்வா,கீர் இரண்டுமே அருமை.நாளைக்கு பூசணியில் என்ன குறிப்போ பார்க்கலாம்.

Asiya Omar said...

ஆமாம் ஜலீலா, மஞ்சள் பூசணி வாரம் தான், சுவாரசியமாக இருந்தது. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

சாரதா அக்கா நான் ஆங்கில ப்ளாக்கிலும் குறிப்பு பகிர்ந்திருக்கேன்.இந்த வாரம் பொரியல்,காரக்குழம்பு,அல்வா,கீர்,சூப் செய்து பகிர்ந்தாச்சு.இன்னும் ஒரு குறிப்பு இருக்கு. அது இரவு ஆங்கில ப்ளாக்கில்.

நாளை சிறப்பு விருந்தினர் பகிர்வு அல்லவா! ஞாயிறு -வியாழன் தான் என் பகிர்வு எல்லாம்.வெள்ளி,சனி இங்கு எனக்கு விடுமுறை.

ஸாதிகா said...

அல்வாவும் கீரும் செமையா வந்திருக்கு.பூசணி பத்தை வாங்கி பிரிட்ட்ஜ்ஜில் உள்ளது எடுத்து சமைக்கத்தான் சோம்பல்:)

Manjubashini Sampathkumar said...

பம்ப்கின் வாரமாப்பா :)

ஆனாலும் அருமையான ஒரு டிஷ் அல்ல ரெண்டு டிஷ் ரெசிப்பி கிடைச்சிருக்குப்பா...

அதிலும் படங்களோடு பார்க்கும்போது இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.

அடுத்த முறை இந்தியா சென்றால் ஆசியா உமர் வீட்ல சாப்பிடாம திரும்பி வரக்கூடாது அப்டின்னு முடிவு செய்துட்டேன் :)

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

ADHI VENKAT said...

ஹல்வா சூப்பரா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

நன்றி ஸாதிகா. நீங்க இங்கே வாங்க நான் செய்து தரேன்.

வாங்க மஞ்சுபாஷிணி, கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.நீங்க எங்க வீட்டில் சாப்பிடனும் என்றால் அல்- ஐன், அபுதாபி வரனும்.

ஆதி வெங்கட் கருத்திற்கு நன்றி,ஹல்வா எங்க வீட்டிலும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.

மொத்தத்தில் இந்த வார மஞ்சள் பூசணி ரெசிப்பி எல்லாம் எங்க வீட்டில் ஹிட் ஆயிடுச்சு. அடுத்து முழுசாக ஒரு முட்டை கோஸ் வாங்கி வந்து வச்சிருக்காரு,
அந்தக் கஷ்டம் என்னோடு போகட்டும்.உங்களை எல்லாம் துன்புறுத்த விரும்பலை.ஹி..ஹி..!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்... நாங்களும் முயற்சி செய்கிறோம்... நன்றி சகோதரி...

Asiya Omar said...

தனபாலன் சார் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,நன்றி.