Saturday, February 8, 2014

ராகி தோசை / கேப்பை தோசை / Ragi Dosai


தேவையான பொருட்கள்;
ராகி மாவு - 2 கப்
உளுந்து  -  அரை கப்
எண்ணெய்  - தேவைக்கு.
உப்பு - தேவைக்கு

செய்முறை:
உளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த உளுந்துடன் ராகி மாவு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
இரவு உளுந்து அரைத்து ராகி மாவை கலந்து வைத்தால் காலையில் சுடுவதற்கு பக்குவமாக பொங்கி இருக்கும். உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
அடுப்பை மீடியமாக வைத்து தோசை கலத்தில் எண்ணெய் தடவி  மாவை ஒரு குழிக்கரண்டு எடுத்து விட்டு வட்டமாக பரத்தி சுற்றி இலேசாக எண்ணெய் விட்டு  மூடவும்.
ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும்.இரு புறமும் வெந்தவுடன்  எடுக்கவும்.
சத்தான ராகி தோசை ரெடி. இதனை வெங்காய சட்னியுடன் பரிமாறவும். சுவை சூப்பராக இருக்கும்.


2 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

நலமாக உள்ளீர்களா ஆசியாம்மா ? அருமையான, உடலுக்கு நன்மையான ஒரு சமையல் குறிப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

மிக்க நலம்.வருகைக்கும் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி புவனேஸ்வரி.