Wednesday, March 12, 2014

கோழி ஈரல் மசாலா / Chicken Liver Masala

 
 தேவையான பொருட்கள்;
கோழி ஈரல் - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 2- 3
பெரிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிமசாலா - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை சிறிது
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - முக்கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:
கோழி ஈரல் துண்டு செய்து நான்கு ஐந்து தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.

 நறுக்க வேண்டியவைகளை நறுக்கி வைக்கவும்.


 கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் கடுகு, சோம்பு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
நன்கு வதங்க விடவும்.

இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 அடுப்பை குறைத்து நன்கு வதக்கவும்.
 அத்துடன் ஈரலை சேர்க்கவும்.
 ஒரு போல் பிரட்டி விடவும்.
 நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
 தக்காளி லேசாக வதங்கினால் போதும். கூட்டு போல் ஆக வேண்டாம்.

மஞ்சள் தூள், கறி மசாலா, உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
 பிரட்டி விடவும்.

 கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
 அரை கப் தண்ணீர் சேர்த்து  அடுப்பைக் குறைத்து மூடி போட்டு வேக விடவும். 10 -1 5 நிமிடத்தில் வெந்து விடும்.

 வெந்து வரும் பொழுது மிளகுத்தூள் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விடவும்.
நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி சூடாகப் பரிமாறவும்.


சுவையான சத்தான கோழி ஈரல் மசாலா ரெடி. 
இது சாதம்,சப்பாத்திக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.இதே முறையில்  ஆட்டு ஈரலிலும் செய்யலாம்.


1 comment:

Habib Mohamed said...

நன்றாக இருந்தது நன்றி