Friday, April 18, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 17- திருமதி ஷாமா நாகராஜன் / மதுரை மட்டன் பிரியாணி / Guest Post - Mrs.Shama Nagarajan / Madurai Mutton Briyani


இந்த வெள்ளி சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்பவர் திருமதி ஷாமா நாகராஜன். சொந்த ஊர் மதுரை, திருமணத்திற்கு பின்பு வசிப்பது ஹைதராபாத்.இவர் எனக்கு தன்னுடைய இந்த குறிப்பை சென்ற ஃபிப்ரவரி மாதமே அனுப்பி விட்டார். மார்ச் 7 ஆம் தேதி பகிர வேண்டியது, பகிர முடியாத சூழலுக்கு மிக்க வருந்துகிறேன், காத்திருப்பிற்கு மிக்க மகிழ்ச்சி ஷாமா. நான் பலமுறை ஷாமாவிடம் அவரின்  ப்ளாக்கில் பகிரும்படி சொல்லியும் இது உங்களுக்குத் தான் அக்கா, எப்ப முடியுமோ அப்ப பகிருங்கள் என்ற அன்பைக் கண்டு நான் பிரம்மித்துப் போனதென்னவோ உண்மை தான். மனமார்ந்த நன்றி.


இவரின் ஆங்கில சமையல் வலைப்பூ easy2cookrecipes  2008 -ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதில் வெற்றிகரமாக குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.எண்ணூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புக்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன, இவரின் தனித்தன்மை சுருக்கமாக குறிப்பை நச்சென்று பகிர்வது தான். நீங்கள் தேடும் பல குறிப்புகள்  நிச்சயம் இவரின் வலைப்பூவில்  இருக்கும். சென்று பார்க்க இங்கே கிளிக்கவும்.
இது தவிர myhandicraftscollection என்ற வலைப்பூவில் தன் மகளும் இவரும் ஆர்ட்& கிரஃப்ட் மற்றும் கைவேலைப்பாடுகள் பலவற்றை பகிர்ந்தும் வருகிறார். 

தன்னுடைய சுய அறிமுகமாக  அவர் தெரிவிப்பதை பார்க்க இங்கே கிளிக்கவும்.

சிறப்பு விருந்தினர் பகிர்வுக்கு ஷாமாவின் குறிப்பு:
மதுரை மட்டன் பிரியாணி:


தேவையான பொருட்கள்;
மட்டன் – அரைக்கிலோ
பிரியாணி ரைஸ் (சீரக சம்பா) – 2 கப்
நறுக்கிய வெங்காயம் – பெரியது - 2
நறுக்கிய தக்காளி –மீடியம் சைஸ் – 2
பச்சை மிளகாய் – 6
பொடியாக நறுக்கிய புதினா – அரைகப்
மல்லி இலை நறுக்கியது – ஒரு கையளவு
தயிர் – அரை கப்
எலுமிச்சை ஜூஸ் – 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 8 பல்( அரைத்துக் கொள்ளவும்)
கறிமசாலாத்தூள் – 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 - 2 டீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மல்லிப் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
சோம்புதூள் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
பட்டை – 4 -6 சிறிய துண்டு
பிரிஞ்சி இலை -2
அன்னாசிப்பூ – 2
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கு.
செய்முறை:
1.மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, மல்லி, புதினாவை  நறுக்கி வைக்கவும்.
2.இஞ்சி பூண்டு விழுது உப்பு மட்டன் சேர்த்து வேக வைக்கவும்.
3.அரிசியை நன்கு அலசி தண்ணீரில் ஊற வைக்கவும்.
4.ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்யவும்,ஏலம்,பட்டை,கிராம்பு,அன்னாசிப்பூ,பிரிஞ்சு இலை சேர்க்கவும். வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை அனைத்தும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி சிறிது வேக விடவும்.
5.நன்கு வெங்காயம், தக்காளி மசிந்து வரும் பொழுது  மேற்குறிப்பிட்ட மசாலா பொருட்கள், தயிர்  யாவும் சேர்க்கவும். நன்கு வதக்கவும். வேக வைத்த மட்டன் சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து குறைந்த தணலில் சில நிமிடம் எல்லாம் சேர்ந்து வேக விடவும்.
6.பிரியாணி செய்யும் பாத்திரத்தில் தாராளமாக தண்ணீர், தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஊறிய அரிசியை சேர்க்கவும்.அரிசி முக்கால் பதம் வெந்தவுடன், வடித்து விடவும்.
7. இத்துடன் வேக வைத்த மட்டன் மசாலாவை சேர்க்கவும். பக்குவமாக கலந்து விடவும். இத்துடன் எலுமிச்சை ஜூஸ், நெய் சேர்த்து சிக்கென்று மூடி மிகச் சிறிய நெருப்பில் 10 நிமிடம் மூடி  வைக்கவும்.
8.பிரியாணி நன்கு ரெடியாகி ஆவி வெளியே வர ஆரம்பிக்கும். அடுப்பை அணைக்கவும்.
9. மீண்டும் 10 நிமிடம் கழித்து திறந்து பக்குவமாக பிரட்டி பரிமாறவும்.
சூடான சுவையான கமகமக்கும் மதுரை மட்டன் பிரியாணி ரெடி.


சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி அக்கா.
ஷாமாவின் இந்த பாரம்பரிய மதுரை மட்டன் பிரியாணி குறிப்பை நீங்களும் செய்து பாருங்க. படத்தைப் பார்த்தாலே அசத்தலாக இருக்கு.
ஷாமா, தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அசத்தலான மதுரை மட்டன் பிரியாணி குறிப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.
பின் குறிப்பு:
சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் asiyaomar@gmail.com -ஐ தொடர்பு கொள்ளவும்.விபரம் இங்கே கிளிக்கவும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

10 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் said...

பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .திருமை ஷாமா நாகராஜன் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .

Shama Nagarajan said...

Thank you akka...

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... செய்து பார்க்கிறோம்...

சகோதரி ஷாமா நாகராஜன் அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

priyasaki said...

சிறப்பு விருந்தினர் ஷாமா வுக்கு வாழ்த்துக்கள். ஆசியா நன்றி உங்களுக்கு.

Priya Suresh said...

Madurai mutton briyani vaasam inga varaikum thookuthu..Super guest post by Shama..

Farin Ahmed said...

Very wonderful guest post....Biryani looks delicious

சே. குமார் said...

ஆஹா... அருமை...

Shamee S said...

மட்டன் பிரியாணி சூப்பர்...
செய்து பார்க்க தூண்டுகிறது....
இருவருக்கும் வாழ்த்துக்கள்.............

Jaleela Kamal said...

ஷாமாவின் மதுரை பிரியாணி மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
பழையபடி உற்சாகமானதுக்கும் வாழ்த்துக்கள்

Sathya Priya said...

arumaiyana biriyani .eruvarukum valthukal