Friday, April 25, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 18 -திருமதி பினுஷா ஆஷிக் - ட்ராகன் சிக்கன் - இந்தோ சைனீஸ் - Guest Post - Mrs Binusha Ashiq / Dragon Chicken (Indo- chinese)

திருமதி பினுஷா ஆஷிக், இவங்களை சந்தித்த பொழுது என்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வு பற்றி சொல்லி ஏதாவது விரும்பினால் ரெசிப்பி பகிரலாம்னு சொன்னேன். சொன்ன அடுத்த நிமிடம் தன் மொபைலில் உள்ள இந்தப் படங்களை தந்து ரெசிபியும் சொன்னவுடன் அசந்து போனேன். பல வருடம் சமையலில் அனுபவம் உள்ளவங்க பலரிடம் நான் இது பற்றி சொல்லும் பொழுது கூட எல்லோரும் குறிப்பு தர தயங்கித் தான் பார்த்திருக்கிறேன.கேட்ட அடுத்த நிமிடமே சிறிதும் யோசிக்காமல் ரெசிபியை பகிர்ந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தியது. நிச்சயம் இந்தக் குறிப்பை பலர் செய்து பார்ப்பாங்க.மனமார்ந்த நன்றி பினுஷா. 

சுய அ றிமுகம்:
திருமதி.பினுஷா ஃபாத்திமா, சொந்த ஊர் நெல்லை,  கோவைக் கல்லூரியொன்றில் இண்டர்நேஷனல் பிஸினஸ் பட்டப்படிப்பு, புகுந்த இடம் சென்னை, திருமணமாகி இரண்டு வருடங்கள், கணவர் டாக்டர்.ஆஷிக்.வசிப்பது அபுதாபியில்,ஒரு வயது பெண் குழந்தை என்ற சந்தோஷமான குடும்பம்.

இவர் இன்று நம்முடன்  பகிரும்  குறிப்பு:
ட்ராகன் சிக்கன் - இந்தோ சைனீஸ்:


தேவையான பொருட்கள்;-
சிக்கன் போன்லெஸ் (சிறிய துண்டுகளாக்கியது) – 500 கிராம்
முதலில் சிக்கனை ஊற வைக்க:
இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1
கார்ன்ஃப்லோர் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு.
பின்பு தயார் செய்ய  தேவையானவை:
இஞ்சி பொடியாக நறுக்கியது – 1/2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது – 1/2 டேபிள்ஸ்பூன்
ரெட் சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் ,கொடைமிளகாய் துண்டுகளாக நறுக்கியது – தலா ஒன்று
டொமட்டோ சாஸ் – 4 - 6 டேபிள்ஸ்பூன் அல்லது  (உங்க டேஸ்டிற்கு)
சோயா சாஸ் 1 – 1 1/2  டேபிள்ஸ்பூன் அல்லது (உங்க டேஸ்டிற்கு)
உப்பு தேவைக்கு
சீனி – 1/2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் நறுக்கியது சிறிது
எண்ணெய் சிக்கன் ஃப்ரை செய்ய தேவையான அளவு.
செய்முறை:


 
1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
2. அத்துடன் சிக்கனை ஊற வைக்க மேற்சொன்ன பொருட்களை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
3. பின்பு எண்ணெயை நன்கு காய வைத்து பொன்னிறத்தில் கிரிஸ்பாக பொரித்து எடுக்கவும்.
4. ஒரு அடிகனமான தவாவில் பொரிக்க உபயோகித்த எண்ணெயில் 2 டேபிள்ஸ்பூன் விடவும். அதில் இஞ்சி,பூண்டு பொடியாக நறுக்கியதை சேர்த்து நன்கு பொன் முறுகலாக வதக்கவும். அத்துடன் சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும். சிறிது வதக்கவும்(30 செகண்ட்), நறுக்கிய ஆனியன்,கொடைமிளகாய் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.  டொமட்டோ சாஸ் சேர்க்கவும். பிரட்டி விடவும். சோயா சாஸ், சீனி சேர்க்கவும். நன்றாக பிரட்டவும்
5. அத்துடன் ஃப்ரை செய்த  சிக்கன் சேர்த்து நன்கு ஒரு சேர பிரட்டி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரிபார்க்கவும்.
6. நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். இது ட்ரையாகத்தான் இருக்கும். கிரேவி மாதிரி வேண்டுமானால் கார்ன் ஸ்டார்ச் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான ட்ராகன் சிக்கன் (இந்தோ சைனீஸ்) ரெடி.
சூடாக ஃப்ரைட் ரைஸ், நாண் அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம்.
வித்தியாசமாக சிக்கனில் ஏதாவது செய்து அசத்த வேண்டும் என்று நினைத்தால் இதைச் செய்து பாருங்க. சூப்பராக இருக்கும். வெஜிடேரியன்ஸ் காளிப்ளவர் உபயோகித்து இதை செய்து பார்க்கலாம்.
பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி பினுஷா. நல்வாழ்த்துக்கள்.
முக்கியக் குறிப்பு:
அடுத்து வரும் பகிர்வுகளுக்கு  உங்கள் குறிப்புகள் வரவேற்கப்படுகின்றன,  சுய அறிமுகம், குறிப்பின் படங்கள்  இவற்றை அனுப்ப வேண்டிய முகவரி asiyaomar@gmail.com. விபரமறிய இங்கே கிளிக்கவும்.
தற்செயலாக இன்று பார்க்கும் பொழுது இது என்னுடைய தமிழ் வலைப்பூவில் 600 -வது பகிர்வு. அனைவரும் தொடர்ந்து ஆதரவு தருவதற்கு என் மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.


6 comments:

Saratha said...

திருமதி பினுஷாவின் சிக்கன் குறிப்பு அசத்தலா இருக்கு!

உங்களுடைய 600வது பகிர்வுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!

Asiya Omar said...

சாரதா அக்கா உடனே வந்து கருத்து தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.நன்றி.

சமீரா said...

வாவ்... நாளைக்கு செய்து பார்க்க வேண்டும்...நன்றி பினுஷா அண்ட் ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ஆசியா சிஸ்...

சே. குமார் said...

சிக்கன் குறிப்பு அருமை...
வாழ்த்துக்கள் சகோதரிக்கு....

அக்கா 600 இன்னும் போகட்டும் ஆயிரங்களாய்...

வாழ்த்துக்கள் அக்கா...

திண்டுக்கல் தனபாலன் said...

திருமதி.பினுஷா ஃபாத்திமா அவர்களுக்கும் நன்றி...

600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் பல...

Jaleela Kamal said...

ட்ராகன் சிக்கன் மிக அருமை, பினுஷா பாத்திமாவுக்கு வாழ்த்துக்கள்

600வது பதிவுக்கும் வாழ்த்துகக்ள்

தொடருங்கள் தொடர்ந்து அசத்துங்கள்