Wednesday, April 30, 2014

காளிப்ளவர் 65 / Gobi 65 / Cauliflower 65


இப்படி ஈசியாக செய்து பாருங்க,மொறு மொறுன்னு சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்;
காளிப்ளவர் - அரைக் கிலோ
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
(65 மசாலா இல்லாதவர்கள் சில்லி பவுடர்,கரம் மசாலா
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் பின்ச் - ரெட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்)
உப்பு - தேவைக்கு
தக்காளி சாஸ் அல்லது தக்காளி ப்யூரி - 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:
காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதி கொதிக்கும் நீரில்  போட்டுதேவைக்கு சிறிது உப்பு சேர்த்து  அடுப்பை அணைத்து விடவும்.அதனை 5 நிமிடம் கழித்து வடிகட்டி வைக்கவும்.

நன்கு குளிர்ந்த பிறகு முதலில் சிக்கன் 65 மசாலா தேவைக்கு மிகச் சிறிது உப்பு தக்காளி ப்யூரி சேர்த்து  பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு அத்துடன் மேற்கூறிய அனைத்து மாவு வகைகளையும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை.தேவைப்பட்டால் மாவின் அளவை கூட்டிக் கொள்ளலாம். உப்பும் காரமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவைக்கு கடாயில் எண்ணெய் சூடேற்றி மிதமான நெருப்பில் காளிப்ளவரை இரண்டு மூன்று முறையாக போட்டு பொரித்து பொன் முறுகலாக எண்ணெய் வடித்து எடுக்கவும்.
பேப்பர் டவலில் வைத்தால் சுத்தமாக எண்ணெய் இருக்காது.

சுவையான மொறு மொறு கோபி 65 ரெடி.




இதனை சும்மாவும் ஸ்டார்டராகவும் சாப்பிடலாம் அல்லது புலாவ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடனும் பரிமாறலாம்.

நீங்களும் இந்த முறை பிடித்திருந்தால் செய்து பாருங்க.
வெஜிடேரியன்ஸ் சிக்கன் சாப்பிடாவிட்டாலும் சிக்கன் 65 மசாலா உபயோகிப்பீங்க தானே அப்படியில்லையெனில் தேவைக்கு சில்லி பவுடர்,கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கோங்க.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

priyasaki said...

செய்முறையும் ஈஸி.சிக்கன்65 பவுடரும் இருக்கு.செய்துடவேண்டியதுதான்.நன்றி
பகிர்வுக்கு ஆசியா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுமையான செய்முறை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆசியாம்மா.

Shamee S said...

மொறுமொறுப்பாக பார்க்கவே நன்றாக இருக்கிறது அக்கா.....