Monday, April 28, 2014

ஆந்திரா குண்டூர் சிக்கன் / Andhra Guntur Chicken


தேவையான பொருட்கள்:

சிக்கன் அரை கிலோ - முக்கால் கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 - 6 (காரம் அவரவர் விருப்பம்)
முழு மல்லி – 3 தேக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி
மல்லி இலை சிறிது
உப்பு – தேவைக்கு.

செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விடவும்.

அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.
கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
 சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.





சுவையான குண்டூர் சிக்கன் ரெடி. இதனை ப்ளைன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறினால் பொருத்தமாக இருக்கும். நான் இக்குறிப்பை முன்பே (2009) அறுசுவையில் பகிர்ந்திருக்கிறேன்.

11 comments:

Priya Suresh said...

Droolworthy guntur chicken akka, hard to resist.

Menaga sathia said...

ஆஹா பார்க்கும் போதே சுவைக்க தோனுது,அருமை அக்கா!!

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர் முன்பே அங்கு பார்த்து இருக்கிறேன், கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... ஸ்ஸ்... சூப்பர்...

Shama Nagarajan said...

awesome preparation dear

Saratha said...

சிக்கன் சூப்பரா பண்ணியிருக்கீங்க!விளக்கப்படங்களும் சூப்பர்!!

Savitha Ganesan said...

Paarkkave romba nalla irukku akka.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி !மகிழ்ச்சி.

ezhil said...

படிக்கவே சுவையா இருக்குங்க...

Snow White said...

சிக்கன் எடுத்து ரொம்ப நாள் ஆச்சு ... கண்டிப்பா செய்து பார்க்கிறேன் அக்கா ..

Fathima said...

Came out very well, followed your recipe exactly. Thank you.