Wednesday, April 16, 2014

அவல் உப்புமா / Aval Uppuma / Onion Poha ( Mumbai Special)

தேவையான பொருட்கள்;
அவல் – ஒரு கப்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
நறுக்கிய வெங்காயம் – பெரியது 1
மஞ்சள் தூள் – பெரிய பின்ச்
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 2டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – 1-2 டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – 1டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அவலை வெது வெதுப்பான நீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்க்கவும்.வெடித்து வரும் பொழுது நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்,மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
அத்துடன் அவலை சேர்க்கவும். நன்கு ஒரு சேர பிரட்டவும். உப்பு சரி பார்க்கவும்.சிறிது தண்ணீர் தெளிக்கவும்.மெதுவாக இருக்கும்.
நறுக்கிய மல்லி,இலை,தேங்காய்த்துருவல், வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.கலந்து பரிமாறவும்.
ஈசியாக செய்யக் கூடிய காலை மட்டும் இரவு உணவாகும். அவசரத்திற்கு லஞ்ச் பாக்ஸ்கில் கூட எடுத்துச் செல்லலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு மிகவும் பிடிக்கும்... உங்களின் செய்முறைக்கும் நன்றி...

Saratha said...

விளக்கப்படங்களுடன் செய்முறையும் சூப்பரா இருக்கு.உங்கள் கைப்பக்குவமே தனிதான்!