Thursday, April 17, 2014

என் பாத்திரங்கள் உபகரணங்கள் - மண் சட்டிகள்


என் வலைப்பூவில் பாத்திரங்கள் உபகரணங்கள் என்ற பகுதிக்கு போஸ்டிங் போட்டு நாளாகி விட்டது. இன்றைய பகிர்வு என் மண் சட்டிகள்.
சைஸ் வாரியாக மூன்று சட்டிகள். பொதுவாக எந்த பாத்திரம் வாங்கினாலும் பெரியது, நடுத்தரமானது, சிறியது என்ற மூன்று அளவுகளிலும் வாங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும். ஆட்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி எந்த அளவு தேவையோ அதனை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

மண் பாத்திர டிப்ஸ்;
மண் பாத்திரத்தில் சமைக்கும்பொழுது உப்பு, புளிப்புள்ள உணவுகள் தீங்கான விளைவுகள் ஏற்படுத்துவதில்லை.
அதனால் தான் புளிக்குழம்பு,மீன் குழம்பு ஆகியவற்றை மண்பானையில் சமைத்து உண்பது நல்லது என்கிறோம்.
மண் சட்டியில் சமைக்கும் பொழுது அதிக எண்ணெய் உபயோகிக்க தேவையில்லை.எனவே இதில் சமைப்பது ஆரோக்கியமானதாகும்.
மண் பாத்திரத்தில் சமைக்கும் பொழுது வெப்பம் சீராகப் பரவி உணவில் உள்ள சத்துக்கள் பாதுக்காக்கப்பட்டு,எளிதில் செரிக்கும் தன்மை பெறுகிறது.
மண் பாத்திரத்தில் சமைத்தால் ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையையும் தருகிறதாம்.

4 comments:

VijiParthiban said...

அருமையான செய்தி அக்கா...

Saratha said...

மண் சட்டி பதிவும்,டிப்ஸ்ம் அருமை.நானும் மண் சட்டியில் தான் மீன் குழம்பு வைப்பேன்.

Asiya Omar said...

விஜி வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

சாரதாக்கா வருகைக்கு மகிழ்ச்சி,நன்றிகா.

திண்டுக்கல் தனபாலன் said...

மண் சட்டியின் சுவையே தனி தான்...