Thursday, April 10, 2014

சிக்கன் அக்னி குருமா / Chicken Agni Kurma

 தேவையான பொருட்கள்;
சிக்கன் - முக்கால் கிலோ
வெங்காய்ம் நறுக்கியது பெரியது - 2
தக்காளி நறுக்கியது பெரியது - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 + 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி,புதினா - சிறிது
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1+1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - பாதி பழம்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய் - 5டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.
சிக்கனுடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1 டீஸ்பூன் சில்லி பவுடர், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து விரவி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு இளஞ்சிவப்பாகும் வரை வதக்கவும்.அத்துடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளி,பச்சை மிளகாய், மல்லி புதினா தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கட்டும்.
குறிப்பிட்ட மசாலா பொருட்கள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
ஊறிய சிக்கனை சேர்த்து  அரை எலுமிச்சை பழ ஜூஸ் சேர்த்து பிரட்டி விடவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும்.
ஆவியடங்கியவுடன் திறந்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் மேலே வந்தவுடன் அணைக்கவும்.

சுவையான சிக்கன் அக்னி குருமா ரெடி.
இதனை நெய்ச்சோறு அல்லது தேங்காய்ச் சோறு, தாள்ச்சா,  வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

2 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அருமையான சமையற் குறிப்பு மிக்க நன்றி தோழி பகிர்புக்கு .

Farin Ahmed said...

Chicken Kurma looks delicious