Friday, April 4, 2014

சிக்கன் கோலா உருண்டை / Chicken Kola Urundai/ Chicken Kofta


சிக்கன் கோலா உருண்டை:
தேவையான பொருட்கள்;

சிக்கன் கொத்தியது – 200 கிராம்
வெங்காயம் நறுக்கியது – 1
முட்டை (சிறிய சைஸ்) – 1
பொட்டுக்கடலைப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்நறுக்கியது 1
கொத்தமல்லி,புதினா,கருவேப்பிலைநறுக்கியதுதலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் –1- 2 டீஸ்பூன்
கரம் மசாலாகால்- அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்புதேவைக்கு.

செய்முறை:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்து மிக்ஸியில் இரண்டு சுற்றி எடுக்கவும்.ஒரு பவுலில் போட்டு அத்துடன் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் சேர்த்து விரவி சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.(சுமார் 20 வரும்)
கடாயில் எண்ணெய் காய வைத்து போட்டு பொன்னிறத்தில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் கோலா உருண்டை ரெடி.

இதனை பக்க உணவாகவோ ஸ்நாக்காகவோ பரிமாறலாம்.

No comments: