Monday, April 7, 2014

மேலப்பாளையம் தாள்ச்சா/ Melapalaiyam Thalcha


தேவையான பொருட்கள்;
துவரம் பருப்பு – 100 கிராம்
கத்திரிக்காய் – 150 கிராம்
த நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மல்லி,புதினா சிறிது
தடியங்காய் ( வெள்ளை பூசணி ) -100 கிராம்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் (பரூப்பு வேக வைக்க)
மசாலா தூள் – 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத் தூள்)
புளி சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கு.
தாளிக்க :
எண்ணெய் – 1 -2 டேபிள்ஸ்பூன்
கடுகு& .பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் கிள்ளியது – 1
வெங்காயம் நறுக்கியது சிறிது.
கருவேப்பிலை இணுக்கு.

செய்முறை:
பருப்பை மஞ்சள் தூள் தேவைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரின் 2 விசில் வேக வைக்கவும்.
பருப்பு முக்கால் வேக்காடு வெந்திருக்கும் அத்துடன், நறுக்கிய, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய்,தடியங்காய் ,மிளகாய்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,மல்லி புதினா,மசாலாத் தூள், திக்காக கரைத்த புளி, தேவைக்கு உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மீடியம் ப்லேமில் மீண்டும் ஒரு விசில் விட்டு எடுக்கவும்.அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன் கலந்து விடவும். உப்பு சரிபார்க்கவும்.
மேலே தாளிக்க குறிப்பிட்ட பொருட்கள் சேர்த்து தாளித்து வேகவாய்த்த பருப்பு கத்திரிக்காயில் சேர்க்கவும்.

சுவையான தாளிச்சா ரெடி. இதனை நெய்ச்சோறு,தேங்காய்ச் சோறு,மருந்து சோறு,பிரியாணி இவற்றுடன் பரிமாறலாம்.

No comments: