Sunday, April 13, 2014

இறால் ஃப்ரைட் ரைஸ் / Prawn fried rice

தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி – 300 கிராம்
வெஜிடபிள் மிக்ஸ் – 1 1/2 கப்( கேரட்,கோஸ்,கொடைமிளகாய்,பீஸ்)
பச்சைமிளகாய்நறுக்கியது – 2
பெரிய பூண்டு பல் நறுக்கியது – 2
சோயா சாஸ் – 2- 3 டீஸ்பூன்
ஹாட் சாஸ் – 2-3 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன் ( விரும்பினால்- நான் சேர்க்கவில்லை)
உப்புமிளகுத்தூள்தேவைக்கு.
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் + பட்டர் – 1டேபிள்ஸ்பூன்
மீடியம் சைஸ் இறால்சுத்தம் செய்தது – 1 கப்
இறாலை கால் டீஸ்பூன் சில்லி பவுடர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை ஜூஸ் சிறிது சேர்த்து விரவி வைக்கவும்

அலங்கரிக்கஸ்பிரிங் ஆனியன் நறுக்கியது.
செய்முறை:
பாசுமதி அரிசியை அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு தாராளமாக தண்ணீர் கொதிக்க வைத்து தேவைக்கு உப்பு சேர்த்து உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் பட்டர் விடவும், சூடானவுடன் நறுக்கிய பச்சை மிளகாய்,பூண்டு சேர்க்கவும், வதக்கவும்,ஊற வைத்த இறால் சேர்க்கவும்.நன்கு பிரட்டி 2 நிமிடம் வேக விடவும்,இறால் சுருண்டு வரும்,காய்கறிகளை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதங்க விடவும். நன்கு பிரட்டி விட்டு விரும்பினால் அஜினமோட்டோ சேர்க்கவும். சோயா சாஸ், ஹாட் சாஸ்,மிளகுத்தூள் சேர்க்கவும்.நன்கு மிக்ஸ் செய்யவும்.
வடித்த ரைஸ் சேர்த்து பக்குவமாக பிரட்டவும். அடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
பரிமாறும் அளவு – 4 - 5 நபர்கள்.

3 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் said...

நன்றி நன்றி மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

Suchi Sm said...

welcome back mam...:)

vanathy said...

Yummy recipe.