Tuesday, April 15, 2014

சேமியா / ரவா கேசரி / Semiya / Ravai / Vermicilli Kesari

தேவையான பொருட்கள்;
வறுத்த சேமியா – ஒரு கப்
சீனி – 3/4 அல்லது 1 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன் + (இறுதியாகச் சேர்க்க விரும்பினால்+ 1 டேபிள்ஸ்பூன்)
நறுக்கிய பாதாம்,முந்திரி திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3
ஆரஞ்ச் கலர் – பின்ச்.

செய்முறை:
சேமியாவை நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு பாதாம் முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
அந்த நெய்யில் ஏலக்காய் சேர்க்கவும்.லேசாக வறுபடவும் அளவுத்தண்ணீர் சேர்க்கவும்.பின்ச் கலர் சேர்க்கவும்.
தண்ணீர் கொதி வரவும் அடுப்பைக் குறைத்து சேமியாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்.சேமியா வெந்து வரும் பொழுது சீனி சேர்க்கவும். சீனி அளவு அவரவர் விருப்பம்.சீனி கரைந்து கேசரி கெட்டியாக வரும். நெய் விரும்பினால் சிறிது முடிவில் சேர்த்து கிளறி வறுத்த பாதாம்,முந்திரி திராட்சை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான சேமியா கேசரி ரெடி.
தேவைக்கு எடுத்து வெது வெதுப்பாகப் பரிமாறவும்.
ரவா கேசரி :-

வறுத்த ரவை – ஒரு கப்
சீனி –  1 அல்லது ஒன்னரை கப்
தண்ணீர் – 3 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன் + (இறுதியாகச் சேர்க்க விரும்பினால்+ 1 டேபிள்ஸ்பூன்)
நறுக்கிய பாதாம்,முந்திரி திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3 சிறிது சீனியுடன் பொடித்து வைக்கவும்.
கேசரி கலர் – பின்ச்.
உப்பு - பின்ச்.
முதலில் வறுத்த ரவை ,சீனி கலந்து வைக்கவும்.
ஒரு பேனில்  2 டேபிள்ஸ்பூன் நெய் விடவும்.முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.
விரும்பினால் ஒரு சிறு துண்டு பட்டை போட்டு பொரிய விடவும்.
அதில் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். கேசரி கலர் சேர்க்கவும்.
கொதி வரட்டும்.
சீனியும்,வறுத்த ரவையும் கலந்து வைத்திருப்பதால் ரவை தட்டும் பொழுது கட்டி தட்டாது.
இறுகி வரும் பொழுது அடுப்பை அணைத்து மீண்டும் தேவைக்கு 1-2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்த முந்திரி திராட்சை கலந்து பிரட்டி இறக்கவும்.
சுவையான ரவா கேசரி தயார்.



4 comments:

Kalpana Sareesh said...

sooper kesari

VijiParthiban said...

ஆசியா அக்கா நலமா... மிகவும் அருமையான கேசரி... செய்துவிட வேண்டியதுதான்....

சே. குமார் said...

அக்கா நலமா?

ரொம்ப நாள் ஆச்சு...

ஆஹா... அருமையான கேசரி...

Priya Suresh said...

Super delicious Kesari akka..its been a while i prepared it.