Thursday, April 10, 2014

தக்காளி சாதம் / Tomato Rice

தேவையான பொருட்கள்;
வேகவைத்த சாதம் - ஒரு ப்லேட் அளவு
வெங்காயம் நறுக்கியது - 1
தக்காளி நறுக்கியது - 3 (அரைத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் நறுக்கியது - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்( விரும்பினால்)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம், பெருஞ்சீரகம் - தலா கால்டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
நறுக்கிய மல்லி - சிறிது 
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் காயவிட்டு சீரகம்,பெருஞ்சீரகம் சேர்க்கவும்.வெடிக்கவும் கருவேப்பிலை சேர்க்கவும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.விரும்பினால் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
நன்கு வதக்கவும். அத்துடன் தக்காளிக் கூழ் சேர்க்கவும். தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.நன்கு தக்காளி வெந்து வாடை போகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.
வடித்த சாதம் சேர்த்து கிண்டவும்.நறுக்கிய மல்லி இலை,விரும்பினால் நெய் சிறிது சேர்த்து பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.

சுவையான் தக்காளி சாதம் ரெடி. 


1 comment:

priyasaki said...

ஆகா ஆசியா தக்காளிசாதம் நல்ல டேஸ்டியா இருக்கும்போல.நிச்சயம் செய்கிறேன்.