Thursday, April 17, 2014

பாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala Fish Curry

இது என் தோழி தளிகாவின் குறிப்பு.செய்து பார்த்தேன்,எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்:
மீன் – அரைக்கிலோ
தேங்காய் எண்ணெய் – 2 – 3 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி துருவல் அல்லது இடித்தது – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 12 நறுக்கியது
தக்காளி நறுக்கியது – 1
குடம்புளி ஊறவைத்தது – 2 அல்லது சாதாரண புளி – எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள் – 1 1/2 – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் ஒரு கப் அரைக்கவும் அல்லது தேங்காய்ப்பால் –ஒரு கப்
உப்பு – தேவைக்கு
கருவேப்பிலை – 2 இணுக்கு.
செய்முறை:
முதலில் மண் சட்டியில் தேங்காய் எண்ணை காயவைத்து வெந்தயம் சேர்த்து சிவந்ததும் இஞ்சி சேர்த்து பிறகு வெங்காயம், பச்சை மிள்காய் சேர்த்து சிவக்க வறுத்து அதில் தக்காளி சேர்க்கவும்.
 மேலும் 3 நிமிடம் வதக்கி மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கியதும்,தேவைக்கு புளி தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவைக்கு, தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதி வந்ததும் மீனை சேர்க்கணும்.
பிறகு மூடி போட்டு தீயை குறைத்து ஐந்தே நிமிடம் தான் கடைசியாக தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமா சேர்க்கணும்.
மூடி வைக்கவும்.எண்ணெய் எல்லாம் மேலே வந்து விடும்.

இது சுலபமான பாரம்பரிய கேரளா மீன் குழம்பு.சுவை அருமையா இருக்கும்.
காலையில் செய்து வைத்து விட்டால் மதியத்துக்குள் புளி இறங்கிடும் பின் புளியை தூக்கி போட்டுடலாம்.கொடம்புளி இல்லையென்றால் தேவைக்கு சாதாப்புளியும் கரைத்து செய்யலாம்.



8 comments:

Shama Nagarajan said...

awesome...wonderful preparation

VijiParthiban said...

Superb...

மனோ சாமிநாதன் said...

அருமையான குறிப்பு! மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டீர்கள் ஆசியா! வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

ஷாமா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

விஜி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மனோ அக்கா,மகிழ்ச்சி.மிக்க நன்றி.

Farin Ahmed said...

Very nice fish curry...Back with a punch....

Priya Suresh said...

Akka mann saatila pannura meen kuzhambu rusiye thanni than, super akka.

Sangeetha Nambi said...

"பாரம்பரியம்" கேட்கவே நல்லா இருக்கு..... Love to taste it !

Jaleela Kamal said...

தளிகாவின் மீன் குழம்பு நானும் செய்துபார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது