Friday, May 2, 2014

பீன்ஸ் பொரியல் / Beans Poriyal

பொரியல் செய்யும் பொழுது  நாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக செய்வோம். பீன்ஸ் பொரியலை இப்படி செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.



தேவையான பொருட்கள்;
வேக வைக்க:
பீன்ஸ் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 2பல்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு -சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 - 3 டீஸ்பூன்
கடுகு & உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 1 இணுக்கு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பீன்ஸ் நார் நீக்கி,தண்ணீரில் நன்கு அலசி  பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,பூண்டையும் நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், பூண்டு,வெங்காயம் ,சீரகத்தூள் சிறிது உப்பு சேர்த்து மீடியம் நெருப்பில் நன்கு சாஃப்டாக வேக விடவும்.தண்ணீர் வற்றும் வரை வேகட்டும்.அடுப்பை அணைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு உளுத்தம் பருப்பு,கிள்ளிய வற்றல், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.வெந்து வைத்த பீன்ஸ் சேர்க்கவும்.பிரட்டி விடவும்,தேங்காய் துருவல் கலந்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான சத்தான பீன்ஸ் பொரியல் ரெடி.


2 comments:

Snow White said...

பார்க்கவே அழகா இருக்கு ... செய்து பார்த்திட வேண்டியதுதான் ..

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமாக பூண்டு, வெங்காயம் சேர்த்து பீன்ச் பொரியல். செய்து பார்த்திட வேண்டியது தான்.