Monday, May 12, 2014

கொண்டைக்கடலை சாலட் / சன்னா சாலட் / Channa Salad


தேவையான பொருட்கள்;
கொண்டைக்கடலை -  150 கிராம் (ஊற வைத்து வேக வைக்கவும்)
கொடை மிளகாய் சிவப்பு,மஞ்சள், பச்சை கலர் நறுக்கியது - தலா ஒன்று (சிறியது)
மாங்காய் தோல் நீக்கி நறுக்கியது - 1
வெள்ளரிக்காய் - நறுக்கியது - 2
கேரட் நறுக்கியது - 2
ஸ்வீட் கார்ன் - 1 கப்
ஏதாவது சீசனிங் பவுடர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிது தேவைக்கு.

பரிமாறும் அளவு - 6 நபர்கள்.

செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரமாவது ஊற விட்டு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

ஸ்வீட் கார்ன் தவிர குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒரு போல் நறுக்கி வைக்கவும்.
 ஒரு பவுலில் அனைத்தையும் போட்டு கலந்து கொள்ளவும்.

 தேவைக்கு உப்பு, லைம் ஜூஸ், சாட் மசாலா அல்லது விரும்பிய சீசனிங் பவுடர் ,ஆலிவ்  ஆயில் சேர்த்து விரவவும்.ஃப்ரெஷ் மாங்காய் இல்லையெனில் மாங்காய் பவுடர் சேர்க்கலாம்.நான் சேர்த்த மாங்காய் புளிக்காததால் லைம் ஜூஸும் சேர்த்தேன்.

விரும்பினால் மிளகுத்தூள் சிறிது தூவி பரிமாறவும்.உப்பு தேவைப்பட்டால் அளவாய் சேர்க்கவும்.

சுவையான சத்தான கொண்டைக்கடலை சாலட் ரெடி. 

நீங்களும் பிடித்திருந்தால் செய்து பாருங்க.


10 comments:

vanathy said...

Looks yummy.

Shama Nagarajan said...

awesome akka

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றாக இருக்கின்றது...ஹெல்தியான சாலட்

Saratha said...

கொண்டைக்கடலை சாலட் பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு!செய்முறையும்,விளக்கப்படங்களும் அருமையாக இருக்கு.

Snow White said...

கண்ணைக் கவருது சன்னா சாலட்

திண்டுக்கல் தனபாலன் said...

சாலட் அருமை...

priyasaki said...

சூப்பரா கலர்புல்லா இருக்கே ஆசியா.

Priya Suresh said...

Healthy and very colourful salad, can have it happily without any fuss.

nasreen fathima said...

Arumaiyana salad ka ....healthy and colourful

Farin Ahmed said...

Healthy salad akka