Sunday, May 4, 2014

ஈசி முட்டை மசாலா / கிரேவி - Easy Egg Masala / Gravy




தேவையான பொருட்கள்;
முட்டை அவித்தது - 3  - 4
நறுக்கிய வெங்காயம் - 2 பெரியது
நறுக்கிய தக்காளி - 2 (மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
கரம் மசாலா- கால் டீஸ்பூன்(விரும்பினால் மட்டும் அல்லது வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் சிறிது )
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
(தனித்தனியாக தூள் வகைகள் போடாமல் வீட்டு மசாலாவும் போடலாம்.)
எண்ணெய் - 2 -3  டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு.
(கிரேவி மாதிரி வேண்டும் என்றால் 2  -3 டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுது சேர்க்கலாம்)

செய்முறை:
முட்டையை அவித்து தோல் உரித்து எடுத்து, பக்கவாட்டில்  கீரி விட்டுக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  சிம்மில் வைத்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து வதங்க விடவும்.


 தக்காளி நன்கு மசிந்ததும் மசாலா தூள் வகைகள் அனைத்தும் சேர்க்கவும்.வதக்கவும்.




அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


வாடை மடங்கி மசாலா கெட்டியானவுடன் அவித்த முட்டையை சேர்க்கவும்,பிரட்டவும்,


விரும்பினால் மல்லி கருவேப்பிலை நறுக்கி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
இப்படியே பரிமாறினால் மசாலா போல் சூப்பராக இருக்கும்.
விரும்பினால் தேங்காய் அரைத்து 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம். சேர்த்தால் கிரேவி போல் இப்படி இருக்கும்.



இதனை சூடான சோறு, சப்பாத்தி,ஆப்பம் இவற்றுடன் பரிமாறலாம். மசாலா போல் செய்தாலும் டேஸ்ட் தான், கிரேவி மாதிரி செய்தாலும் டேஸ்ட் தான். இந்த குறிப்பை 2 இன் 1 ஆக வைத்துக் கொள்ளலாம்.

என் முட்டை குழம்பு குறிப்பை பார்க்க இங்கே கிளிக்கவும்.

1 comment:

Mahi said...

அவிச்ச முட்டை 1+1/2 இருக்கு, செய்து பார்த்துடறேன்! ;) நல்லா இருக்கு ஆசியாக்கா!