Thursday, May 8, 2014

ஃப்ரைட் சிக்கன் மசாலா / Fried Chicken Masala



 

தேவையான பொருட்கள்;
சிக்கன் ஊற வைக்க:
சிக்கன் அரைக் கிலோ
சில்லி பவுடர்  - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
விரும்பினால் - பின்ச் கலர்
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.

மசாலாவிற்கு தேவையானவை:
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
மல்லித் தூள்- 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு - சிறிது.

செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.

 சிக்கனை மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
 ஒரு பேனில் எண்ணெய் தேவைக்கு விட்டு சூடானவுடன்  சிக்கன் முழுவதையும் போட்டு சாஃப்டாக ஃப்ரை செய்து  எடுக்கவும்.தனியாக வைக்கவும். பொரித்த சிக்கன் கேட்பவர்களுக்கு இதை அப்படியே கூட கொடுக்கலாம்.


 இனி மசாலாவிற்கு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
 இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், நன்கு வதக்கவும்.
 நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 எல்லா மசாலா பொருட்களும் சேர்க்கவும்.
 கருவேப்பிலை சேர்க்கவும்.
 ஒரு சேர பிரட்டி வதக்கவும்.

 ஃப்ரை செய்த சிக்கனை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் போடவும். 
 பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
 சுவையான ஃப்ரைட்  சிக்கன் மசாலா ரெடி. 



சூடாக சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

8 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அருமையான பகிர்வு மிக எளிய முறையில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம்
அளிக்கும் முகமாக படங்களைப் போட்டு அசத்தியுள்ளீர்கள் தோழி தங்களின் பகிர்வுகள் ஒவ்வொன்றையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு சமையல் செய்தால் மாமியாருக்கு எங்கள் மீது மரியாதை பொங்கி வழியும் என்பதை
மட்டும் நன்கு உணர்ந்தேன் பகிர்வின் மூலம் :)) வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் இது போன்ற ஆக்கங்கள் தொடரட்டும் .

Priya Suresh said...

Akka, my mouth is just watering here..Sooo delicious masala.

Shama Nagarajan said...

super drooling chicken akka

திண்டுக்கல் தனபாலன் said...

அட போங்க... அருமையா செஞ்சிருக்கீங்க...

Sangeetha Nambi said...

Super tasty !

சமீரா said...

அசலாமு அழைக்கும்!
நீங்க சொன்ன. .டிராகன் சிக்கன் செய்தேன்.. எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது!! இப்போ fried சிக்கன் செய்யணும்.. நாளைக்கு முட்டை குழம்பு, சண்டே சிக்கன்.. ரொம்ப நன்றி!!!

மனோ சாமிநாதன் said...

குறிப்பு எளிமையாகவும் ருசிகரமாகவும் இருக்கிறது ஆசியா! படங்கள் ருசிக்கும் ஆசையைத் தூண்டுகின்றது!!

Farin Ahmed said...

Same pinch.. I also posted the similar kind of recipe akka