Monday, May 5, 2014

கிரீன் ஃபிஷ் கறி / Green fish curry


தேவையான பொருட்கள்;-
மீன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 அல்லது 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
மிளகாய் - 2 அல்லது 4
பூண்டு - 2 பல்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு - 6
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் தாளிக்க - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 100 மில்லி
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி.

செய்முறை:


 மீனை தோல் உரித்து வாங்கிக் கொள்ளவும், அல்லது ஃபிஷ் ஃபில்லட்ஸ் கூட உபயோகிக்கலாம், அல்லது தோலோடும் சமைக்கலாம். சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
 மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், 2 மேசைக்கரண்டி மல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கால் டீஸ்பூன் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

 அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும்.
 அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் வாடை மடங்க வேண்டும்.
பின்பு அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.


 ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
 அடுப்பின் தீயை மிதமாக வைத்து மீன் வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
 10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.

சுவையான கிரீன் ஃபிஷ் கறி ரெடி. 

இதில் உள்ள மீன் சாப்பிட ருசியாக இருக்கும். 
இதனை அரிசி மாவு ரொட்டி, சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் 
உடன் பரிமாறலாம். 
இக்குறிப்பை அறுசுவையில் முன்பே பகிர்ந்திருக்கிறேன்.சமைத்து அசத்தலாம் நேயர்களுக்காக மீண்டும் இங்கே இந்த பகிர்வு.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறித்துக் கொண்டோம்... நன்றி சகோதரி...

ezhil said...

அட புளிக்கரைசல் பயன்படுத்தாமல் வித்தியாசமாய் இருக்கிறது.. செய்து பார்த்திடலாம் .நன்றி

vanathy said...

Super recipe.

Priya Suresh said...

Very flavourful fish curry akka, superaa irruku.

Farin Ahmed said...

Greenish Fish curry looks delicious akka...