Thursday, May 1, 2014

மஷ்ரூம் பிரியாணி / காளான் பிரியாணி / Mushroom Briyani


தேவையான பொருட்கள்;
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
பிரியாணி அரிசி - 400 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1 (அரைத்து)
சில்லி பவுடர் - அரைடீஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 டீஸ்பூன் ( விரும்பினால்)
கரம் மசாலா - அரை டீஸ்பூன் ( ஏலம் பட்டை கிராம்புத்தூள் அல்லது முழுதாக ஏலம்,கிராம்பு - தலா2 ,சிறிய துண்டு பட்டை)
நான் பொடியே போட்டுவிட்டென்.
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லி புதினா - தலா ஒரு கைப்பிடி
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
சிறிய பாதி எலுமிச்சை 
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4  டேபிஸ்பூன்
நெய் - 1- 2 டேபிஸ்பூன்

செய்முறை:
அரிசியை  அலசி ஊற வைக்கவும். மஷ்ரூமை நன்கு அலசி துடைத்து காம்பு நீக்கி கட் செய்து கொள்ளவும்.
நறுக்க வேண்டியவைகளை நறுக்கி வைக்கவும்.தக்காளியை மிக்ஸியில் அரைத்தோ அல்லது பொடியாக நறுக்கியோ வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும் ,நீட்டமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், லேசாக சிவந்து வரும் பொழுது இஞ்சி பூண்டு சேர்க்கவும், நன்கு வதக்கவும்.மல்லி புதினா, தக்காளி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து மசிய விடவும்.

குறிப்பிட்ட மசாலா பொடிகளை சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.அடுப்பை மீடியம் நெருப்பில் இருக்கட்டும்.
தயிர் சேர்க்கவும்,கலந்து விடவும்.அத்துடன் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து பிரட்டவும்.சிறிது நேரம் இருக்கட்டும்.
அரிசியின் அளவிற்கு இரண்டளவு தண்ணீர் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும், ஊறிய அரிசியை தட்டவும். கொதி வந்து அரிசி வெந்து வரும் பொழுது எலுமிச்சைப் பழம் பாதி  பிழிந்து மூடி விடவும்.அடுப்பு மிகச் சிறிய தீயில் இருக்க வேண்டும்.7-10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

பின்பு மூடியை  பத்து நிமிடம் கழித்து திறந்து பிரட்டி விட்டு பரிமாறவும். நான் பச்சை மிளகாய் போடலை,போடுறவங்க மிளகாய்த்தூள் அளவை கால் ஸ்பூனாக குறைத்துக் கொள்ளவும்.


சுவையான மஷ்ரூம் பிரியாணி ரெடி. 
ஆனியன் ரைத்தா, மல்லி துவையல்,கோபி 65 உடன் நான் பரிமாறியிருக்கிறேன்.பிடித்திருந்தால் இந்த வெஜ் ஸ்பெஷல் லஞ்ச் மெனுவை நீங்களும் செய்து அசத்துங்க.

3 comments:

Vimitha Anand said...

Super tempting biryani

Priya Suresh said...

Briyani makes me hungry akka, super one pot meal.

nasreen fathima said...

Akka tomorrow morning hunga indha recipe dhan enga veetla. ..