Saturday, May 3, 2014

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் / ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி / ஸ்ட்ராபெர்ரி பனானா ஸ்மூதி - Strawberry Milkshake / Lassi / Strawberry Banana Smoothie


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்:

தேவையான பொருட்கள்;
பழுத்த ஸ்ட்ராபெர்ரி(இலைப் பகுதியை நீக்கி) - 6
பால் - 2 கப்
மில்க் மெயிட் - 2 டேபிள்ஸ்பூன் அல்லது சீனி 3 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கியூப்  - 4 - 6
அலங்கரிக்க ஒரு பழம் - மெல்லிய துண்டாக நறுக்கி தனியாக வைக்கவும்.
செய்முறை:
பால்,ஸ்ட்ராபெர்ரி,மில்க்மெயிட் ஐஸ்கியூப் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அழகான கண்ணாடி டம்ளரில் விட்டுப் பரிமாறவும்.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி:



தேவையான பொருட்கள்;
பழுத்த ஸ்ட்ராபெர்ரி ( இலைப் பகுதியை நீக்கி) - 6
கெட்டித்தயிர் - 1 கப்
கெட்டிப்பால் - 1 கப்
சீனி - 2-3 டேபிள்ஸ்பூன்
ஐஸ்க்யூப் - 4.


செய்முறை:
மிக்ஸிஜாரில் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.

உயரமான கண்ணாடி டம்ளரில் விட்டு பரிமாறவும்.


சத்தாகவும் டேஸ்டியாகவும் நல்ல ஃப்லேவருடனும் இருக்கும்.


ஸ்ட்ராபெர்ரி பனானா ஸ்மூதி :-




தேவையான பொருட்கள்;
ஸ்ட்ராபெர்ரி - 5-6
வாழைப்பழம் - பாதி பழம்
பால் - ஒரு கப்
சீனி - 4 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 3-4  துளிகள்(விரும்பினால்)

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.
செய்முறை:
நன்கு கழுவி ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்தை தோல் நீக்கி ஸ்லைஸ் செய்து கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கிய பழங்களைச் சேர்த்து  பால் சீனி, வெனிலா எசன்ஸ்(விருப்பமானால்) ஐஸ்க்யூப் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

அழகிய கண்ணாடி டம்ளரில் விட்டுப் பரிமாறவும்.
குழந்தைகளுக்கு இந்த மூன்று விதத்தையும் செய்து கொடுங்க, நீங்களும் ருசித்துப் பாருங்க சூப்பராக இருக்கும்.

6 comments:

Menaga sathia said...

மூன்றுமே சுவையான குறிப்பு!!

vanathy said...

Yummy.

Saratha said...

நம் ஊரில் அடிக்கும் வெயிலுக்கு உங்களுடைய மூன்று விதமான மில்க் ஷேக் நல்ல குளிர்ச்சியை கொடுத்தது.

Ulagammal Namasu said...

my son likes it.Thank u

Ulagammal Namasu said...

tried &my son likes it.(st-ba smoothy)

priyasaki said...

ஸ்ரோபரி சீசன் டைமில் குறிப்பு தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் ஆசியா. நிச்சயம் செய்து ருசிக்கின்றோம்.